மனம் குழந்தையா.....?
காதலிக்கும் மனம் குழந்தையா ....................? இல்லை முட்டாளா ...................? விடை தான் தெரியவில்லை அவளை காண மனம் அலைகிறது .... பார்க்க கண்கள் விரிகிறது ..... பேச உதடுகள் துடிக்கிறது ..... அவள் வருவாள் என பார்வை பாதை மீதே தவம் கிடக்கிறது .... காற்றை கூட தூது செல் என மனம் மன்றாடுகிறது ....... நிமிடங்கள் மீது கூட அய்யோ எத்துனை கோவம் ...... அவள் வரும் பாதைஇல் நிழல் அசைத்தால் கூட மனம் பதைக்கிறது இமை விரிகிறது ........................ அதோ அவள் வருகிறாள் ...... இதய துடிப்பை காதுகளும் உணர்கிறது .... வியர்வை நாளங்கள் அதிகமாய் திறக்கிறது ..... மனம் பேச வேண்டியதை தனக்குள்ளே பட்டியல் இடுகிறது ..... அருகில் வருகிறாள் ..... மெல்லிய புன்னகை ..... மனம் அப்பப்பா.......எத்துனை ஆனந்தம் .... பேச வாய் திறக்கவில்லை மனம் பேதலிக்கிறது ....... ஹாய் சொல்லி அவள் நடக்கிறாள் போகும் பாதை பார்த்து மீண்டும் துடிக்கிறது ....... இது என்ன புரியவில்லை முட்டாள்தனம் ................என்று சொன்னாலும் விளங்கவில்லை ..... மனம் குழந்தையா.....?