Posts

Showing posts from December 11, 2012

தமிழக வரலாற்றை மாற்றிய போர் (திருப்புறம்பியப் போர்)

Image
பாண்டியர்/பல்லவர் போட்டி 1. மதுரை 2. தஞ்சை 3. திருப்புறம்பியம் 4. காஞ்சி 5. திருச்சிராப்பள்ளி 6. உறையூர் 7.வஞ்சி M - முத்தரையர் C - சோழர் SR - சம்புவராயர் AD - அதியமான் ML - மலையமான் V - வேளிர் விஜயாலய சோழனின் மகன் ஆதித்த சோழன் எதிர்காலத் திட்டமொன்றை மிகவும் தொலைநோக்குடன் போட்டிருந்தார். பாண்டிய பல்லவ ராஷ்ட்ரகூடப் பேரரசுகளின் கதி எந்தத் திக்கை நோக்கிப்போகிறது என்பது அவருக்கு நன்கு தெரிந்திருந்தது. கிபி 250-இல் தென்னகம் வந்து கிபி 340 அளவில் தமிழகத்தில் காலூன்றிக்கொண்டுவிட்ட பல்லவர்கள் ஒரு பேரரசை நிறுவிக்கொண்டவர்கள்; பல்லவநாட்டைவிடப் பன்மடங்கு பெரிதான சாளுக்கியப் பேரரசையும் சமுத்திரகுப்தனின் சமுத்திரம்போன்ற படைகளையும் எதிர்த்து நின்று வெற்றியும் பெற்றவர்கள். அந்த பழக்க தோஷத்தினாலோ என்னவோ வருங்காலத்தைப் பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சிபுரிந்து பழக்கப்பட்டவர்கள் பாண்டியர்கள். பன்னெடுங்காலமாக கடற்கோள்கள், போர்கள், பஞ்சம், முதலிய பலவகையான மிரட்டல்களைச் சமாளித்தவர்கள். களப்பிரரை அடக்கிய பாண்டியன் கடுங்கோன் காலம் தொடங்கி நாட...

எகிப்தில் த‌மிழ் பிராமி எழுத்துக‌ள் க‌ண்டுபிடிப்பு..!

Image
த‌மிழ் பிராமி லிபிக‌ள் பொறிக்க‌ப்ப‌ட்ட‌ ஓர் உடைந்த‌ சாடியொன்று அண்மையில் எகிப்தில் க‌சீர் அல் க‌டீம் எனும் செங்க‌ட‌லின் க‌ரையோர‌ம் அமைந்துள்ள‌ ப‌ழ‌ங்கால‌ ரோமானிய‌ர்க‌ளின் வ‌சிப்பிட‌த்தில், அக‌ழ்வாராய்ச்சியின் மூல‌ம் க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து . கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு வ‌ழி இவ்வெழுத்துக‌ள் கி.மு முத‌லாம் நூற்றாண்டைச் சார்ந்த‌வையாக‌ இருக்க ும் என‌வும் இது ஒரு ம‌கிழ்ச்சியூட்டும் க‌ண்டுபிடிப்பு என‌வும் வேதியிய‌லாள‌ர்க‌ள் கூறுகிறார்க‌ள். இத்த‌மிழ் பிராமி லிபிக‌ள் சாடியின் இருபுற‌த்தில் இருமுறை பொறிக்க‌ப்ப‌ட்டு காட்சிய‌ளிக்கின்ற‌ன‌. பொறிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ எழுத்துக‌ள் ‘பானை ஒரி’ (பானையை தொங்க‌விடுவ‌த‌ற்காக‌ க‌யிற்றால் நெய்ய‌ப்ப‌ட்ட‌ வ‌லை)எனும் அர்த்த‌ங்க‌ளைக் கொண்டிருக்கின்ற‌ன‌. பிரிட்ட‌னில் உள்ள‌ ‘ச‌வுத்தாம்த‌ன் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தைச் சார்ந்த‌ தொல்பொருளாராய்ச்சிக் குழுவில் அட‌ங்கிய‌ பேராசிரிய‌ர் டீ.பீகோக்கு ம‌ற்றும் முனைவ‌ர் எல்.புளூ ஆகியோர், அண்மையில் எகிப்திலுள்ள‌ க‌சீர் அல் க‌டீம் எனும் ப‌ழமைவாய்ந்த‌ இட‌த்தில் அக‌ழ்வாராய்ச்சிப் ப‌ணிக‌ளில் ஈடுப‌ட்டிருக்கும்பொழுது, ப‌ழ‌ங்கால‌ எழுத்...

2012 உலகம் அழியுமா? உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு! part 5

Image
“அறிவியல், அறிவியல் என்று இதுவரை காலமும் எமக்குப் படம் காட்டிவிட்டு, திடீரென உலகம் அழியத்தான் போகிறது என்பது போலப் பயம் காட்டுகிறாரே இந்த ஆள்” என்று நீங்கள் என்னைப்பற்றி, கடந்த பதிவை வாசித்ததிலிருந்து நினைத்துக் கொண்டிருக்கலாம். “பேய் இருக்கா, இல்லையான்னு எனக்குத் தெரியாது. ஆனால் பேயை நினைத்தால் பயமாக இருக்கிறது” என்று எழுத்தாளர் புதுமைப்பித்தன் சொன்னது போலத்தான், உலக அழிவு பற்றி நானும் சொல்ல வேண்டும். ஆனால் இவை எல்லாவற்றையும் கடந்து, மாபெரும் மர்மமான உலக மகா பயங்கரம் ஒன்று தன் வாயை ‘ஆ’ எனத் திறந்து எம்மை விழுங்கக் காத்திருக்கிறது. பல இக்கட்டுகளைத் தாண்டி இன்று அவற்றைப் பற்றி முழுமையாக உங்களுக்கு நான் சொல்லியே தீரவேண்டும் என்ற கட்டாயத்துக்கு வந்திருக்கிறேன். ஆராய்ச்சியாளர்களின் தற்போதைய ஆய்வுகளின்படி, 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் உலகம் அழிவதாயின் எந்த எந்த வகையில் அழியலாம் என்பதை மிக நுணுக்கமாக ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் சொன்னபடி…., 1. சூரியன், பால்வெளி மண்டலத்தில் உள்ள கருப்புப் பள்ளத்தினாலோ (Dark Rift) அல்லது கருந்துளையினாலோ (Black Hole) ஈர்க்கப்பட்டு அழியலாம...