Posts

Showing posts from June 17, 2015

காக்கா முட்டை

Image
‪#‎ காக்கா_முட்டை‬ இத்திரைப்படத்தை நேற்று இரவு பார்க்க வாய்ப்பு கிடைத்தது. நாம் ஏறி மிதித்துக்கொண்டிருக்கிற சென்னையின் பூர்வகுடி மக்களைப் பற்றிய படம். சென்னையில் நாம் கடந்து செல்லும் முகங்கள், வீடுகள், கடக்கின்ற பாலங்களின் அடியில் நகரும் வீடுகள் என்று நமக்கு அன்றாடம் அறிமுகமான சமூகத்தின் பின்னணியில் சிறப்பாக கதை சொல்லப்பட்டிருக்கிறது.. சென்னையின் பூர்வகுடிகள் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதையும், அவர்களின் வாழ்வை சூழ்ந்து இருக்கும் வறுமையும், விரிந்து நிற்கும் அரசதிகாரத் தின் மறைமுக திரையும் விவரித்துக்கொண்டே நகரும் திரைப்படம் , உழைக்கும் மக்களின் குழந்தைகளின் வாழ்வை பதிவு செய்கிறது. உலகமயமாக்கல் கொண்டுவந்த மேற்குலக வணிக உணவு பூதம் இக்குழந்தைகளின் எளிய கனவு நிறைந்த வாழ்க்கையினை எப்படி ஆட்கொள்கிறது என்பதை அற்புதமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். காக்காமுட்டையை உண்ணுவது மூலமாக தனது பேரக்குழந்தைகளுக்கு போதிய ஆற்றலுணவு கிடைக்கும் என பாட்டி நம்புகிறார். இதை கண்டிக்கும் தனது மருமகளிடம், ‘தினம் கோழி முட்டை வாங்கித் தரமுடியுமா நம்மளால?’ என்று எழுப்பும் கேள்வி பல உண்மைகள் முகத்தில் அற...