Posts

Showing posts from July, 2011

தவமே நிஜம் ....!

Image
விடியாத இரவுகள்  ........         இமைத்திரவாத கனவுகள்  ........ விடியற்காலை குளிர்காற்று  ,,,,, காலை நேர சூரியன்  ,,,,,,,, ஜன்னல் ஓர குருவி சத்தம்  ,,,,,, பூஜை அறை சுப்ரபாதம்  ,,,,,, எழுந்த உடன் பெட் காபி  ,,,,,,,, சில் என்ற குளியல்  ,,,,,,,, அம்மா கையில் இரண்டு தோசை,,,,,   நாய் குட்டியின் சின்ன சண்டை,,,,,,   தங்கையிடம் சின்ன வாக்குவாதம்  ,,,,, அம்மாவுக்கு "பாய்",,,,, பெட்டிக்கடையில் ஒரு தம்  ,,,,, நாயர் கடையில் சிங்கள் டீ,,, பார்வைக்கு மட்டும் செய்தித்தாள்  ,,,, நண்பர்களுடன் கும்மாளம்  ,,,, பூட் போர்டு   பயணம்,,,,, இதை எல்லாம் மறந்துவிட்டேன்  .....! உன்னை பார்த்ததும் இழந்துவிட்டேன்  ....! இன்று.........................    உன் ஓரப்பார்வை,,, இதழோர புன்னகை  ,,,,, உன் கை பட்ட பஸ் டிக்கெட்  ,,,,, உன் மடி மீது என் நோட்  ,,,,, நீ கடித்து போடும் நகத்துண்டு  ,,,,, நீ உன் தலையிலிருந்து விழும் ரோஜா,,,,, இவைகளுக்கு ஏங்குவது என் மனம்  ........

நிறுத்து .................!

Image
இன்னும்   சிறிது நேரம் தான்  ….. பூமி சிதறப் போகிறது  …….. நாலரைகோடி ஆண்டுகளின்   அடையாளச் சின்னங்கள்   அழியப் போகிறது  ……….. இதோ தொடங்கிவிட்டது   பூமிக்குள் ஒரு குருஷேத்திரம்.......   ஈஸ்வரா  ……! அல்லா  …….! ஜீசஸ்  …….! கதறல்கள் காட்டில் சமாதி   ஆயின, வான் இடியில் பூமி நடுங்கியது  , மேக அலையில் கடல் நனைந்தது   பூமி தாய் வயிற்றில் சுமந்த   அக்னி கரு கலைந்தது  …… நிலத்தையும் கடலையும் எரித்தது   பறவைகளும் விலங்குகளும்   கூகுரல் எழுப்பின....   குன்றுகள்   பெயர்ந்தது பூமிகள் பாலம் பாலமாய் வெடித்தது   அய்யோ........! அம்மா.......! அவலக்குரல்கள் கேட்டன.... அவரவர் வீடு அவரவர் கல்லறை   பூமியில் சுழற்சி இட வலமா...... வல இடமா  ……. சந்தேகம் எழுப்பியது   பிரமீடுகள் பெயர்த்து பிடுங்கி   மம்மிகளை வெளியே தள்ளியது  …… உள்ளே புதிய பிணங்கள் போடப்பட்டன சாய்ந்து   நிமிர்ந்த போது   அட்லாண்டிக் பாலைவனமானது  ,,,,, சஹாரா பாலை   சமுத்திரமானது ……. சீன பெருஞ்ச...

ஆவல்.......................!

உன் பெயரை நான் உச்சரிக்கும் போது ஒரு முறை சொல்லி பார்க்க  ஆவல் தூண்டுகிறது..........!

ஆசை..............................!

தேன் சொட்டும் செண்பக தோட்டம்  ஓடை சலசலப்பு ........தூரத்தில்  வெடித்த பலா வாசம்...... யானை கட்டி அன்னையின்  ஆராரோ ......................! அன்னை மடி நிலா பரிசம் ... இளவேனிற் கால தென்றல்  தங்கை இடம் சின்ன சண்டை  அப்பாவின் கோவம் .....இனி  கிடைக்குமா என்றேன்ங்கிய  எனக்கு ................உனைபார்த்ததும் ஆசை தீர்ந்தது.......................!