Posts

Showing posts from October 10, 2021

சோர்வான உங்களுக்காக...

Image
ரத்தன் டாடா சொன்ன வரிகள் "இரும்பை வேறு எந்த பொருளாலும் அழித்துவிட முடியாது. இரும்பு அழிய வேண்டுமென்றால் துருப்பிடித்து அதுவாகவே அழிந்தால் தான் உண்டு. இதேதான் நமக்கும்." நம் சிந்தனை சிதைந்து நாமாகவே அழிந்தால்தான் உண்டு. நாம் உறுதியாக நின்றுவிட்டால் எப்பேர்ப்பட்டவனாலும் நம்மை அழித்துவிட முடியாது. எவ்வளவு பெரிய சோதனையாலும் நம்மை வீழ்த்திவிட முடியாது. நாம் முடங்குவதாகவும், தோற்பதாகவும் உருவாகிற தோற்றங்கள் எல்லாம் தற்காலிகமானவை.எந்த வெற்றியும் நிலையானது இல்லை எந்தத் தோல்வியும் நிரந்தரமானது இல்லை. இன்றைக்கு வேண்டுமானால் எதிரியின் கை ஓங்கி இருக்கலாம். நம் துக்கத்தின் அளவு உயர்ந்து இருக்கலாம். அது நிரந்தரமான ஓங்குதல் இல்லை. அது வலிமையான துக்கமில்லை. துக்கத்தின் சுவடு நிச்சயமாகக் கரையும். எனக்கு எப்பொழுதெல்லாம் மனம் சோர்வடைகிறதோ அப்பொழுதெல்லாம் இத்தகைய மனிதர்களைத்தான் நினைத்துக் கொள்கிறேன். காய்ச்சல் வந்துவிட்டது. உடலில் சர்க்கரை அதிகரித்து விட்டது; ப்ரஷர் ஏறிவிட்டது என்று முடங்கிக் கொள்வதற்கும் சிறகுகளைச் சுருக்கிக் கொள்வதற்கும் ஆயிரம் காரணங்களை தேடுகிறவர்களுக்கு இவரைப் போன்றவர்கள்தா...