Posts

Showing posts from September, 2012

தொலைந்து போன கால்தடம் ........

Image
தொலைந்து போன கால்தடம் ........ கனவுகளை சுமந்து ,,  சுமந்து , நிஜங்களை தொலைத்து விட்டது இதயம் ... நானும் தொலைத்து விட்டேன்;   சிறுவயதில் விளையாட்டு பொருள்   தொலைத்தேன்    வேறொன்று வாங்கி கொடுத்தார்கள் ... பள்ளியில் பென்சில்   தொலைத்தேன்   வேறொன்று வாங்கி கொண்டேன் ... பருவத்தில் காதலைகூட தொலைத்தேன்     வேறோருவளும் கிடைத்துவிட்டாள் ... இன்று நிஜங்களை ... நினைக்கிறேன் ... வாழ்கையில் கடந்துவந்த அந்த   வசந்த காலத்தை நினைக்கிறேன் ... கல்லூரி நாட்களில்   வகுப்பில் அமர்ந்த   நாட்களைவிட   வெளியில் காவல்காத்த   நாட்கள்   அதிகம்   விடுதியில் ஆடிகுதித்த   நாட்கள் போக   ஓடி வெளியிலும் குதித்தோம் ... கல்லூரி விழாக்களில் நாம் ரசித்ததைவிட   மற்றவரை ரசிக்கவைத்தோம் .. உல்லாச பயணத்தில் உல்லாசத்தை   ஒட்டுமொத்தமாய் சூரையாடினோம் ... இதோ இன்று என் நட்பு வட்டம்   சுருங்கி புள்ளியில் நிற்கிறது .... திரு...