தஞ்சை பெரிய கோவில்
தஞ்சையிலுள்ள பெரிய கோவி லில் இக்கல்வெட்டு இருக்கிறது. கோவில் கட்டியாகி விட்டது. நிர்வகிக்க யார்? யார்?. அவருக்கென்று வீடு ஒதுக்கி, வீட்டு இலக்கம் சொல்லி, பெயர் எழுதி, கல்வெட்டாய் வெட்டியிருக்கிறது. இடது சிறகு மூன்றாம் வீடு, நக்கன் பரமிக்கு பங்கு ஒன்றும், இடது சிறகு நான்காம் வீட்டு எச்சுமண்டைக்கு பங்கு ஒன்றும் என்று பல நூறு பெயர்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. வீணை வாசிக்கும் ஆதிச்சன் இறந்தமையால், அவன் மகனுக்குப் பங்கு அரையும் என்று சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது. கோவில் பணியில் உள்ள எல்லா தொழிலாளர்கள் பெயரும், தொழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. இதோ தொடங்குகின்றது அந்த வரிகள், இது ஆயிரம் வருடங்களுக்கு முன் மாமன்னர் ராஜ ராஜனிடமிருந்து உதிர்ந்த வார்த்தைகள், இன்று அதை நாம் உச்சரிக்கும் போது, ஏதோ ஒரு கர்வம் நம்மை தொற்றிக் கொள்கிறது, அந்த வரிகள் இது தான்.... " நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்,கொடுப்பார் கொடுத்தனவும்..இந்த கல்லிலே வெட்டியருளுக "என்று திருவாய்மொழிஞ்சருளி ". என்று தொடங்குகின்றது அந்த கல...