Posts

Showing posts from 2011
Image

தவமே நிஜம் ....!

Image
விடியாத இரவுகள்  ........         இமைத்திரவாத கனவுகள்  ........ விடியற்காலை குளிர்காற்று  ,,,,, காலை நேர சூரியன்  ,,,,,,,, ஜன்னல் ஓர குருவி சத்தம்  ,,,,,, பூஜை அறை சுப்ரபாதம்  ,,,,,, எழுந்த உடன் பெட் காபி  ,,,,,,,, சில் என்ற குளியல்  ,,,,,,,, அம்மா கையில் இரண்டு தோசை,,,,,   நாய் குட்டியின் சின்ன சண்டை,,,,,,   தங்கையிடம் சின்ன வாக்குவாதம்  ,,,,, அம்மாவுக்கு "பாய்",,,,, பெட்டிக்கடையில் ஒரு தம்  ,,,,, நாயர் கடையில் சிங்கள் டீ,,, பார்வைக்கு மட்டும் செய்தித்தாள்  ,,,, நண்பர்களுடன் கும்மாளம்  ,,,, பூட் போர்டு   பயணம்,,,,, இதை எல்லாம் மறந்துவிட்டேன்  .....! உன்னை பார்த்ததும் இழந்துவிட்டேன்  ....! இன்று.........................    உன் ஓரப்பார்வை,,, இதழோர புன்னகை  ,,,,, உன் கை பட்ட பஸ் டிக்கெட்  ,,,,, உன் மடி மீது என் நோட்  ,,,,, நீ கடித்து போடும் நகத்துண்டு  ,,,,, நீ உன் தலையிலிருந்து விழும் ரோஜா,,,,, இவைகளுக்கு ஏங்குவது என் மனம்  ........

நிறுத்து .................!

Image
இன்னும்   சிறிது நேரம் தான்  ….. பூமி சிதறப் போகிறது  …….. நாலரைகோடி ஆண்டுகளின்   அடையாளச் சின்னங்கள்   அழியப் போகிறது  ……….. இதோ தொடங்கிவிட்டது   பூமிக்குள் ஒரு குருஷேத்திரம்.......   ஈஸ்வரா  ……! அல்லா  …….! ஜீசஸ்  …….! கதறல்கள் காட்டில் சமாதி   ஆயின, வான் இடியில் பூமி நடுங்கியது  , மேக அலையில் கடல் நனைந்தது   பூமி தாய் வயிற்றில் சுமந்த   அக்னி கரு கலைந்தது  …… நிலத்தையும் கடலையும் எரித்தது   பறவைகளும் விலங்குகளும்   கூகுரல் எழுப்பின....   குன்றுகள்   பெயர்ந்தது பூமிகள் பாலம் பாலமாய் வெடித்தது   அய்யோ........! அம்மா.......! அவலக்குரல்கள் கேட்டன.... அவரவர் வீடு அவரவர் கல்லறை   பூமியில் சுழற்சி இட வலமா...... வல இடமா  ……. சந்தேகம் எழுப்பியது   பிரமீடுகள் பெயர்த்து பிடுங்கி   மம்மிகளை வெளியே தள்ளியது  …… உள்ளே புதிய பிணங்கள் போடப்பட்டன சாய்ந்து   நிமிர்ந்த போது   அட்லாண்டிக் பாலைவனமானது  ,,,,, சஹாரா பாலை   சமுத்திரமானது ……. சீன பெருஞ்ச...

ஆவல்.......................!

உன் பெயரை நான் உச்சரிக்கும் போது ஒரு முறை சொல்லி பார்க்க  ஆவல் தூண்டுகிறது..........!

ஆசை..............................!

தேன் சொட்டும் செண்பக தோட்டம்  ஓடை சலசலப்பு ........தூரத்தில்  வெடித்த பலா வாசம்...... யானை கட்டி அன்னையின்  ஆராரோ ......................! அன்னை மடி நிலா பரிசம் ... இளவேனிற் கால தென்றல்  தங்கை இடம் சின்ன சண்டை  அப்பாவின் கோவம் .....இனி  கிடைக்குமா என்றேன்ங்கிய  எனக்கு ................உனைபார்த்ததும் ஆசை தீர்ந்தது.......................!

நினைவுகள்: காதல் கொண்டேன் ..................

நினைவுகள்: காதல் கொண்டேன் .................. : "நான் காதலிக்கிறேன் .................................... ஓங்கி வளர்ந்து நிற்கும் வனப்பு ...... பன்மொழி அணிகலன்கள் ...... பற்சமய கலாசாரங்கள் ..."

காதல் கொண்டேன் ..................

நான் காதலிக்கிறேன் .................................... ஓங்கி வளர்ந்து நிற்கும் வனப்பு ...... பன்மொழி அணிகலன்கள் ...... பற்சமய கலாசாரங்கள் ........ பல மத பாரம்பரியங்கள் ......... விண்தொடும் விஞ்ஜானம்....... பார் புகழும் சகோதரத்துவம் ....... இத்துணை புகழ் கொண்டும்  எங்கும் அநியாயம் ....... கொலை ,கொள்ளை ,இலஞ்சம் ,,,, ஊழல் , சாதி வெறி , இன வெறி ,,,,, மத பேதம் ,அரசியல் வேடதாரிகள் , வறுமை , பசி , பட்டனி,,,,,,, பிணி , பஞ்சம் ,பொய்மை ,,,,,, ஐயோ ......! இத்துணை கொடுமைகளை  தன்னுள்ளே வைத்து  மௌனமாக கைகட்டி நின்று .. பட்டொளி வீசி ....உலக தரத்தில்  நின்று போராடும் .....என் இனிய  இந்திய கன்னி மீது.......  காதல் கொண்டேன் ..................

தாய்க்காக....................................

Image
தாமரை முகம் மலர்ந்து  நேரமாகி விட்டது ..... பறவைகள் இரை தேட புறப்பட்டு  வெகுநேரமாகி விட்டது ...... என் மனம் படுக்கையை  சுருட்ட அடம் பிடிகிறது ........ என் தாய் அழுததைப்போல  ஓர் கனவு ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, என்னை சுமந்தவள் இல்லை  சுமந்து கொண்டிருப்பவள் .................. ஒருபக்கம்  சாதி வெறி கொண்டலையும்  மனிதர்கள் ........................! மதம் பேசி திரியும்  மதவாதிகள் ..............! ஏமாற்றி சுருட்டும் பன்முக  அரசியல்வாதிகள் ......!  இவர்களின் வெதுவெதுப்பில்  குளிர் காயும் அதிகாரிகள் ........! மறுபக்கம்  பசி,பட்டனி,பிணியால் வாடும்  அப்பாவி மக்கள் ...................... திடீரென்று நடக்கும்  கலவரங்கள் ............அதில்  பூ , பொட்டிழகும் இளம்  தாய்கள்........ வன்முறையால் தாய் ,தந்தை  இழக்கும் இளம் சிசுக்கள் ......... இவைகளை நினைத்து  கண்ணீர் வடிக்கிறாள் .......... என் தாய் ............................. நண்பனே ............ நமை கருவில் சுமந்தால்  மட்டும் தான் தாயா ....? இவள...

ஒவ்வொரு நிமிடமும் .......................................!

என் இமைகள் ஈட்டியாகி வதைக்கிறது ..........! தென்றலும் அணல் காற்றாய்   சுடுகிறது ..........! அன்னை மடி கூட நெறிஞ்சி  முள்ளாய் மாறி விட்டது  என் இதயம் கூட  பொறுமை இழந்து கொண்டுருக்கிறது ...... உண் பதிலுக்கு ஏங்கும் ஒவ்வொரு நிமிடமும் .......................................! http://www.youtube.com/watch?v=KjzBxrDwEuU

மனம் குழந்தையா.....?

காதலிக்கும் மனம் குழந்தையா ....................? இல்லை முட்டாளா ...................? விடை தான் தெரியவில்லை  அவளை காண மனம் அலைகிறது .... பார்க்க கண்கள் விரிகிறது ..... பேச உதடுகள் துடிக்கிறது ..... அவள் வருவாள் என பார்வை  பாதை மீதே தவம் கிடக்கிறது .... காற்றை கூட தூது செல் என  மனம் மன்றாடுகிறது ....... நிமிடங்கள் மீது கூட அய்யோ  எத்துனை கோவம் ...... அவள் வரும் பாதைஇல் நிழல்  அசைத்தால் கூட மனம் பதைக்கிறது இமை விரிகிறது ........................ அதோ அவள் வருகிறாள் ...... இதய துடிப்பை காதுகளும் உணர்கிறது .... வியர்வை நாளங்கள் அதிகமாய் திறக்கிறது ..... மனம் பேச வேண்டியதை தனக்குள்ளே  பட்டியல் இடுகிறது ..... அருகில் வருகிறாள் ..... மெல்லிய புன்னகை ..... மனம் அப்பப்பா.......எத்துனை ஆனந்தம் .... பேச வாய் திறக்கவில்லை  மனம் பேதலிக்கிறது ....... ஹாய் சொல்லி அவள் நடக்கிறாள்  போகும் பாதை பார்த்து மீண்டும்  துடிக்கிறது ....... இது என்ன புரியவில்லை  முட்டாள்தனம் ................என்று சொன்னாலும்  விளங்கவில்லை .....  மனம் குழந்தையா.....?

பள்ளிக்காலம்

Image
பள்ளிக்கால கனவுகள் பள்ளிக்கால கனவுகள் மீண்டும் தொடர்கின்றன... அவள் நினைவாக... முதன் முதலில் என் மனதை தொடமால் தொட்டு சரித்து விட்டு... உயிர்மெய்யெழுத்தாக என்னை கலங்க வைத்து சென்ற அந்தநாள் ... இனிமையான நினைவுகளாக மனமுழுவதும் தொடர்கின்றன...

தாய் பாசம்

Image
அம்மா உன்னை நினைத்து ! அவசரத்தில் கிளம்பி கொண்டிருந்தேன் ஆனாலும் என்னை கவிதை எழுத சொன்னாய் நினைக்கும்போது பாசம் மறக்காமல் இருக்க "நீ "என்று நீட்டாமல் விரலை நிதானமாக எழுதி வைத்து ஒற்றை எழுத்தாய் ஓடி வந்தேன் மூன்று வருட ஒப்பந்தத்தில் இங்கு வெளிநாட்டின் வேதனைக்கெல்லாம் விமோசனமாய் " நீ " தான் தாயே நினைக்கும்போது பாசம் மறக்காமல் இருக்க நினைத்து கொண்டேன் நான் எழுதிய கவிதை

நட்பு

Image
துடிக்க மறுக்கும் இருதயம் கூட நட்பு என்றவுடன் விழித்துக் கொள்கிறதே? நட்புக்கு பொருள் தேடி நீயென்று கண்டுக் கொண்டேன் உன்னைக் காணும் போது நாய்க்குட்டியாய் துள்ளும் இந்த மனது உன்னைப் பிரிகையில் தற்கொலைச் செய்துக் கொள்ளுதடி உன்னுடைய தவிர்ப்பில் தொடங்கியது என் முதல் தவிப்பு நீ என்னை நண்பனாக ஏற்றுக்கொள்ளும் வரை தொடர்கிறதடி....

நண்பேண்டா!!

Image
நண்பேண்டா!!  தாய் கருவில் இருக்கும் குழந்தையாய்! தந்தை தோளில் வளரும் செல்ல பிள்ளையாய் ! அன்புடன் அரவணைக்கும் சகோதரனாய் ! உறவேதும் இல்லாமல் உறவாட வந்தாய் ! என் கண்ணீரை துடைக்கும் கைக்குட்டை ஆனாய் சூராவளிகூட சுகமாக இருக்கும் ! நீ என்னுடன் இருந்தால் ...... இன்பத்திலும் துன்பத்திலும் கூட இருக்கும் தூணே பெருமை அடைகிறேன் நான் உன்னை என் நண்பனாய் பெற்றதற்கு!!............