Posts

Showing posts from 2021

ஒரு காதல் கதை

Image
ஜான்-பியர் ஆடம்ஸ் ஒரு பிரெஞ்சு கால்பந்து வீரர். ஒருசமயம் அவரது பழுதடைந்த தசைநாரை சரிசெய்ய அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அப்போது அவருக்கு மயக்கமருந்து கொடுக்கும் மருத்துவர் செய்த ஒரு தவறு காரணமாக கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்து வருகிறார். கோமா நிலைக்குச் சென்றபோது அவருக்கு வயது 34. அவருக்கு இப்போது 71 வயதாகிறது. அவர் 35 ஆண்டுகளுக்கும் மேலாக சுயநினைவின்றி இருக்கிறார். அவர் கோமாவில் இருந்த காலம், தன்னைப் பற்றியும் தன்னைச் சுற்றியுள்ளவர்களைப் பற்றியும் அவர் அறிந்திருந்த காலத்தை விட அதிகம். இதில் மிக சோகமான மற்றும் அதிர்ச்சிகரமானது என்னவென்றால், இந்த தவறை செய்த மருத்துவர் மற்றும் அவரது சக ஊழியருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை மட்டுமே விதிக்கப்பட்டது. அத்துடன் ஒரு மனிதனின் முழு வாழ்க்கையையும் பாழாக்கிய தவறுக்காக சுமார் 815 டாலர்கள் மட்டும் அபராதம் விதிக்கப்பட்டது. அவரது குடும்பம் ஒரு தந்தையையும் ஒரு கணவனையும் இழந்தது மட்டுமல்லாமல் உலகம் ஒரு பெரிய விளையாட்டு வீரரையும் இழந்துள்ளது. 1969 இல் அவரை திருமணம் செய்து கொண்ட அவரது மனைவி பெர்னாடெட் இன்று வரை அவரது படுக்கையில் இருந்து கவனித்து ...

திருநெல்வேலி ஒரு பார்வை..

Image
உங்களுக்கு இருட்டுகடை அல்வா வேண்டுமென்றால் அது நெல்லையப்பர் கோவில் அருகில் இருக்கும் பெயர் பலகை கூட இல்லாத ஒரு சிறிய கடையில் சாயங்காலம் 6 மணியில் இருந்து இரவு 8 மணிவரை மட்டுமே கிடைக்கும் . நீங்கள் கடை திறக்கும் முன்பே சென்று வரிசையில் நின்றால் தான் கிடைக்கும். வேறு எங்கும் திருநெல்வேலியில் இருட்டு கடை அல்வா கிடைக்காது. நம்பி ஏமாந்துவிடாதீர்கள். இதுதான் அந்த கடை கூட்டத்தை பார்த்திர்களா? அதை வைத்து அடையாளம் கண்டுகொள்ளலாம். 2. சுற்றுலா பயணிகள் இவ்வளவு மெணக்கிட்டு நேரம் செலவளித்து அல்வா வாங்கி சாப்பிடுவது கடினம் . இருட்டு கடை அல்வாவிற்கு அடுத்தபடியாக ஒரிஜினல் திருநெல்வேலி அல்வா என்ற பெயர் பெற்றது சாந்தி சுவீட்ஸ் அல்வா. ஆனால் திருநெல்வேலி பஸ் ஸ்டான்டிலும் , ரயில் நிறுத்ததிலும் நீங்கள் திரும்பும் திசையெல்லாம் சாந்தி ஸ்வீட்ஸ் என்ற பெயரில் தான் கடைகள் இருக்கும் இதில் ஒன்று கூட உண்மையான சாந்தி ஸ்வீட்ஸ் கிடையாது. உண்மையான கடை திருநெல்வேலி ரயில் நிறுத்தம் அருகில் மட்டுமே உள்ளது . அவர்களுக்கும் வேறு எங்கும் கிளைகள் கிடையாது. இதுவே அந்த கடை எப்போது சென்றாலும் குறைந்தது 10 பேராவது நின்று அல்வா வாங்க...

சோர்வான உங்களுக்காக...

Image
ரத்தன் டாடா சொன்ன வரிகள் "இரும்பை வேறு எந்த பொருளாலும் அழித்துவிட முடியாது. இரும்பு அழிய வேண்டுமென்றால் துருப்பிடித்து அதுவாகவே அழிந்தால் தான் உண்டு. இதேதான் நமக்கும்." நம் சிந்தனை சிதைந்து நாமாகவே அழிந்தால்தான் உண்டு. நாம் உறுதியாக நின்றுவிட்டால் எப்பேர்ப்பட்டவனாலும் நம்மை அழித்துவிட முடியாது. எவ்வளவு பெரிய சோதனையாலும் நம்மை வீழ்த்திவிட முடியாது. நாம் முடங்குவதாகவும், தோற்பதாகவும் உருவாகிற தோற்றங்கள் எல்லாம் தற்காலிகமானவை.எந்த வெற்றியும் நிலையானது இல்லை எந்தத் தோல்வியும் நிரந்தரமானது இல்லை. இன்றைக்கு வேண்டுமானால் எதிரியின் கை ஓங்கி இருக்கலாம். நம் துக்கத்தின் அளவு உயர்ந்து இருக்கலாம். அது நிரந்தரமான ஓங்குதல் இல்லை. அது வலிமையான துக்கமில்லை. துக்கத்தின் சுவடு நிச்சயமாகக் கரையும். எனக்கு எப்பொழுதெல்லாம் மனம் சோர்வடைகிறதோ அப்பொழுதெல்லாம் இத்தகைய மனிதர்களைத்தான் நினைத்துக் கொள்கிறேன். காய்ச்சல் வந்துவிட்டது. உடலில் சர்க்கரை அதிகரித்து விட்டது; ப்ரஷர் ஏறிவிட்டது என்று முடங்கிக் கொள்வதற்கும் சிறகுகளைச் சுருக்கிக் கொள்வதற்கும் ஆயிரம் காரணங்களை தேடுகிறவர்களுக்கு இவரைப் போன்றவர்கள்தா...

முஸ்லிம்கள் ஏன் பன்றி இறைச்சியை உண்பதில்லை?

Image
    முஸ்லிம்களுக்கு பன்றி இறைச்சி தடைசெய்யப்படுவதற்கான முக்கிய காரணம், யாதெனில் சில உணவு அனுமதிக்கப்பட வில்லை என புனித குர்ஆனில் கூறப்பட்டுள்ளது, வெளிப்படையாக  ஹராம்  என்று அறிவிக்கப்படு கிறது , அதாவது தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் தடைசெய்யப்பட்ட உணவுகளில்  பன்றி இறைச்சி  ஒன்றாகும். இருப்பினும், புனித குர்ஆனில் எழுதப்பட்ட ஒரு விதிவிலக்கு உள்ளது, அங்கு நீங்கள் பட்டினி கிடந்தால் அதை உண்ணலாம் என்றும் பன்றி இறைச்சியைத் தவிர வேறு எதுவும் சாப்பிட எதுவும் இல்லை என்ற நிலையில் அந்த நிலை மாறும் வரை இறைவன் அதை உண்ண உங்களை அனுமதிக்கிறான். திரு குரான்இதழ் 2:174 விளக்கம் . இறைவன் சில உணவுகளை நீங்கள் சாப்பிடுவதை தடை செய்துள்ளான் அதாவது தானாக இறந்த பறவைகள் விலங்குகள் , இரத்தம் மற்றும் பன்றியின் மாமிசம் மற்றும் அல்லாஹ்வின் பெயரைத் தவிர வேறு எதுவும் பயன்படுத்தப்படவில்லை.( ஹலால் உணவுகள் ) ஆனால் தேவையினால் உந்தப்படுபவர், கீழ்ப்படிதல் அல்லது வரம்பை மீறுவது அவருக்கு பாவமல்ல . உங்களை உணர்ந்த இறைவன் மிகவும் அன்பானவன் , மன்னிக்கும் பண்புடையவன் பன்றி இறைச்சி அழுக்கு அல்ல, மாறாக அதில்...

மிரளவைக்கும் பழங்குடி மக்களின் பழக்க வழக்கங்கள்..

Image
சீ.. சீ.. ச்சீவாகள் ச்சீவா பழங்குடிகள் மலாவி பகுதிகளில் வாழ்கின்றனர். அவர்களின் புனித தலத்திற்கு இறந்தவரது உடலை எடுத்துச் சென்று, சடலத்தின் தலையை வெட்டி எடுத்தபின் உடலின் உட்பகுதியை நீரால் நன்கு கழுவுகின்றனர். பின் அந்த நீரில் சமையல் செய்து உண்கின்றனர். ஃபுலானி இன மக்கள்: ஆண்கள் தங்களுக்கான மனைவியை அடைவதற்கு முன் ஒரு சடங்கு நடத்தப்படுகிறது.அதில் அவனை அவ்வினத்தை சேர்ந்த ஆண்கள் சாட்டையால் அடிக்கின்றனர். அதை தாங்கிக் கொள்பவனுக்கே பெண் தரப்படும்..இல்லையெனில் மணமகள் கிடையாது.சில நேரங்களில் மரணமுறும் அபாயங்களும் உண்டு. இரவில் கிரிவோல் என்ற நடன திருவிழாவை நடத்துகின்றனர் உடாப் பழங்குடியினர். அச்சமயத்தில் எந்த பெண்ணாக இருந்தாலும் அது திருமணமான பெண்ணாக இருந்தாலும் சரி, உடாப் ஆண்மகன் தூக்கி சென்று குடும்பம் நடத்தலாம். மசாய் பழங்குடியினர் கென்யா மற்றும் தான்சானியா பகுதிகளில் வாழ்கிறார்கள். நாமெல்லாம் பூ தூவியோ, பூங்கொத்து கொடுத்தோ தான் மற்றவர்களை வரவேற்போம். மசாய்கள் அநியாயத்திற்கும் வித்தியாசமானவர்கள். நீங்கள் அவர்களது இருப்பிடங்களுக்கு சென்றால் உங்களை எச்சில் துப்பி வரவேற்பர். இது அவர்கள் மற்றவர...

உலகத்தில் மனிதனின் கால் பதியாத இடம்

Image
  ம னிதன் நிலவுக்குப் போகிறான். செவ்வாய் கிரகத்துக்குக் கூட போகப்போகிறான். இப்படி பூமியை விட்டு பல லட்சம், பல கோடி கி.மீ. தொலைவில் உள்ள கிரகங்களுக்கே செல்லபோகும் மனிதானால் பூமியில் உள்ள ஒரு இடத்துக்கு மட்டும் போகவே முடியாது. அப்படியே போனாலும் அங்கிருக்கும் நிலத்தில் காலடி வைக்க முடியாது. வைத்தால் கால் இருக்காது..! அந்த இடத்தின் பெயர்  'மரியானா ட்ரென்ச்' . இதனை  'சேலஞ்சர் டீப்'  என்றும் அழைக்கிறார்கள். இது ஒரு கடல் பகுதி. உலகின் மிக ஆழமான கடற்பகுதி இதுதான். பொதுவாக கடலின் சராசரி ஆழம் 4 கி.மீ. என்றால், இங்கோ ஆழம் 10,902 மீட்டர். அதாவது 11 கி.மீ.க்கு கொஞ்சம் குறைவான ஆழம். நமது எவரெஸ்ட் மலையை அப்படியே தூக்கி உள்ளே போட்டால் கூட அந்த மலை கடலின் மட்டத்தில் இருந்து 3 கி.மீ. ஆழத்தில்தான் கிடக்கும். அவ்வளவு ஆழமான பகுதி. ஆழம் இருந்தால் என்ன மனிதன்தான் எவ்வளவு ஆழத்துக்கும் போக முடியுமே? என்று கேட்கலாம். பொதுவாக மனிதனின் உடல் ஓரளவு அழுத்தத்தை மட்டுமே தாங்கும். நிலத்தில் வாழும் நாமும் தொடர்ந்து அழுத்தத்தை தாங்கிக்கொண்டுதான் இருக்கிறோம். அது காற்றின் அழுத்தம். காற்று ஒரு செண்டி மீட...

பணத்தைக் கொட்டிக் கொடுக்கும் கழுதைப்பால் பிசினஸ்!

Image
‘கழுதை’ என்ற சொல் வசைச் சொல்லாகவே மாறிவிட்டது. சோம்பேறியாக இருப்பவரையோ, மெதுவாகச் சிந்தித்து செயல்படுபவர்களையோ கழுதை என்றே அழைக்கிறோம். கழுதைகள் அப்படித்தானா? பார்க்கலாம்..                 பழங்கால  எகிப்தில் உணவு மற்றும்  அழகுக்காக கழுதை பாலானது பயன்படுத்தபட்டது. ரோமானிய சகாப்தத்தில் கழுதை பாலானது நோய்களைத் தீர்க்கும் பொதுவான மருந்துப் பொருளாக பயன்படுத்தப்பட்டதாக பிளினி குறிப்பிட்டுள்ளார்.               பிரஞ்சு இயற்கையாளரான லூயிஸ் லெக்லர்க் கழுதை பாலின் நன்மைகள் குறித்து தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.     நெப்போலியனின் சகோதரியான பவுலின் போனபர்டே தனது சருமத்தின் அழகினைப் பாதுகாக்க கழுதை பாலினை பயன்படுத்தியதாகக் கூறியுள்ளார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தாயற்ற பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு மாற்றாக கழுதை பாலானது கொடுக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டு வரை கழுதை பாலானது அனாதைக் குழந்தைகளுக்கான உணவாகவும், நோய்வாய்பட்ட குழந்தைகள் மற்றும் வயதானவர்களின் தேக ஆரோக்கியத்திற்காகவும் உட்கொள்...

நான் அறிந்த தாஜ்மஹால்...

Image
தாஜ்மஹால் நம் அனைவராலும் "காதல் சின்னம் "என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள மற்ற கட்டிடங்களை காட்டிலும் சிறப்பு வாய்ந்தது ஏனெனில், இந்தஅழகிய கட்டிடத்தை கட்டி முடிப்பதற்கு கிபி 1632 லிருந்து 1653 வரை சுமார் 20 ஆண்டுகள் ஆகிவிடும். அதோடு மட்டுமில்லாமல் தாஜ்மஹால் கட்டுவதற்கு ஷாஜகான் 20 முதல் 22 ஆயிரம் வேலையாட்களை பயன்படுத்தினார். மேலும் அதை கட்டுவதற்கு தேவையான பொருள்களை பல்வேறு இடத்தில் இருந்து கொண்டு வருவதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் பயன்படுத்த பட்டன. தன் மனைவி மும்தாஜ் மஹால் இறப்பதற்கு முன்பாக கேட்டுக் கொண்டதற்கிணங்க தன் காதலை வெளிப்படுத்த ஷாஜகான் இந்த சிற்பக் கலை வடிவத்தை யமுனை ஆற்றின் நதிக்கரையில் வெளிக்கொணர முற்பட்டார். தாஜ்மஹால் ஏன் இவ்வளவு அழகிய தாகத் தோன்றுகிறது என்றால் இதன் கட்டிடக் கலை இந்திய பெர்சிய மற்றும் இஸ்லாம் ஆகிய அனைத்து கலந்து நடையில் கட்டப்பட்ட கட்டிடம் ஆகும். வரலாறு என்ன கூறுகிறது என்றால், தாஜ்மஹாலை கட்டி முடித்த பிறகு, இதே போன்று வேறு ஒரு கட்டிடம் எழுப்பக் கூடாது என்ற காரணத்தினால் இந்த கட்டிடத்தை கட்டிய அனைத்து கலைஞர்களின் விரலையும் ஷாஜகான் மன்...

மயோபதி கண்ட மாமனிதன்

Image
  நண்பர்களே உங்களால் முடியும்.. இந்த செய்தியை பரப்ப ... யாரேனும் ஒருவர் இதனால் பயனடையலாம் அவரது மனம் உங்களை கண்டிப்பாக வணங்கும் ... திரு நெப்போலியன் .நடிகர், அரசில்வாதி ,தொழிலதிபர், முன்னாள் மத்திய அமைச்சர் இதெல்லாம் நாம் அறிந்தது இதையும் கடந்து  அவர் ஒரு மனித நேயம் மிக்க மனிதர்  தனக்கு வந்த துயரத்திற்கு மட்டும் விடைதேடாமல் பாதிக்கப்பட்டோர் அனைவருக்கும் வழிதேடும் மனிதநேயம் படைத்தவர். விஞ்ஞானம் விண்ணைமுட்டும் அளவிற்கு உயர்ந்து உலகை ஆட்டி படைத்துக் கொண்டிருகிறது. மருத்துவ உலகில் தினமும் பற்பல புதிய கண்டுபிடிப்புகள் எத்தனையோ நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டிருகிறது .  எனினும் மனித குலத்தில் இன்னும் பல கொடிய நோய்களை மனிதன் அறிந்திருக்கவும் இல்லை. நம்மை அது தாக்கும் வரை அதை அறியும் ஆர்வமும் இல்லை அதற்கான போதிய விழிப்புணர்வும் இல்லை.  அத்தகையதொரு கொடியநோய்தான் “மஸ்குலார் டிஸ்ட்ரோபி” தமிழில் “தசைச்சிதைவு” நோய் என அழைக்கபடுகிறது.  தசைச்சிதைவு நோய் என்பது ஒரு மரபணு நோயாகும் .தசை கட்டுபாட்டிற்கு தேவையான ஒரு புரதத்திற்கு அடிப்படையான ஒரு மரபணு குறைப்பாடே காரணமா...

அலெக்ஸாண்ட்ரியா நூலகம் (Library of Alexandria)

Image
                        அலெக்ஸாண்டர் தி க்ரேட் எகிப்த் நதிக்கரை ஓரம் ஒரு ஊரை தன் பெயரிலே நிறுவ திட்டமிட்டு அதற்காக ஒரு கடலோர கிராமத்தை தேர்வு செய்து 343BC இல் அலெக்ஸாண்ட்ரியா என பெயரிட்டார்.. அவரின் இறப்புக்கு பின் டாலமி (Ptolemy) என்பவர் கையில் ஆட்சி சென்றது.. இவரின் காலத்தில் தான் (285BC -246BC) அலெக்ஸாண்ட்ரியா நூலகம் (Library of Alexandria) நிறுவ திட்டமிட்டு படி படியாக வளர்ந்து, ஒரு கட்டத்தில் உலகின் மிக சிறந்த நூல்களை எல்லாம் மொழி பெயர்த்து சிறந்த நூலகமாக விளங்கியுள்ளது.. நூலகத்தின் ஒரு பகுதி 145BC யிலும், மற்றொரு முறை 48BC யிலும் தீக்குள்ளானதாக கூறப்படுகிறது.. இரண்டாவது தீ சம்பவம் ஜூலியஸ் சீசரினால் ஏற்ப்பட்டது எனவும் கூறப்படுகிறது.. பின்னர் நடந்த வெவ்வேறு ஆட்சி மாற்றத்தினால் அந்த நூலகம் மறுபொழிவுபெறவில்லை.. 1974இல் அலெக்ஸாண்ட்ரியா யுனிவர்சிடி ஒரு குழு அமைத்து அதே இடத்தில் புதிதாக நூலகம் அமைக்க திட்டமிட்டனர். பின்னர்  பிப்லியோதிகா அலெக்ஸாண்ட்ரினா  என பெயரிடப்பட்டு  2002  இல் திறக்கப்பட்டது.. இதில் cultur...

உங்களுக்கு தெரியுமா..?

Image
பெரும்பாலான மக்கள் தங்களுக்கு மூக்குக்கண்ணாடி வாங்கும் போது அதன் அளவை பார்ப்பதில்லை. தங்களுக்கு ஏத்தவாறு இருக்கிறதா என்பதை மாட்டுமே பார்க்கிறார்கள். எப்படி நமது காலணி, உடைக்கு அளவு இருக்கிறதோ அதேபோல் ஒவ்வொரு மூக்குக்கண்ணாடிக்கும் ஒரு அளவு உள்ளது. எடுத்துக்காட்டாக: இந்த கண்ணாடி இதன் உட்புறம் பாருங்கள் அதில் JE16026 50–18–138-C02 என்று எழுதப்பட்டுள்ளது இதில் 138, 18 மற்றும் 50 என்பது அளவை குறிக்கும். 138 என்பது 18 என்பது மற்றும் 50 என்பது இவை தான் மூக்குக்கண்ணாடியின் அளவு என்பார்கள். நன்றி...!

பூமி ஒரு ஆச்சரியம்...

Image
பூமியை சுற்றி நாடுகள் உள்ளது எனில் பூமியின் ஒரு புறம் இருந்து மறு புறம் வரை துளையிடும் போது மற்ற நாடுக்கு தானே செல்ல வேண்டும்? முதலில் இது சாத்தியமில்லை. இது வரை பூமியில் இடப்பட்ட ஆழமான துளையான கோலா சூப்பர்-டீப்பின் ஆழம் 12.26 கிலோமீட்டர்கள் அதாவது பூமியின் விட்டத்தில் 0.2%. இதற்கே 20 ஆண்டுகளுக்கு மேல் ஆனது. பூமியின் வெப்பம் தாளாமல் அந்த துளையிடும் பணி நிறுத்தப்பட்டது. ஒரு பேச்சுக்கு, பூமியில் நேராக துளை ஒன்று இட வேண்டுமென்றால் 8,000 மைல்களுக்கு மேல் பாறை மற்றும் உருகிய தீக்குழம்பு 6,000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பூமியின் மேற்பரப்பை விட 30 கோடி மடங்கு அதிக அழுத்தம் இவை அனைத்தையும் சமாளிக்க வேண்டும். எப்படியோ இவற்றை சமாளித்து நேரான துளை இடப்பட்டு விட்டது என்று வைத்துக் கொள்வோம். அதில் குதித்தால் என்ன ஆகும்? வேறென்ன? நாம் சிந்தித்துப் பார்க்க விருப்பம் இல்லாத விதங்களில் கொடூரமான இறப்பு ஏற்படும். சரி அதையும் சமாளிக்க முன்கூட்டியே வழி செய்து விட்டோம் என்று வைத்துக் கொள்வோம். பூமியின் மேற்பரப்பு ஒரு மணி நேரத்திற்கு 1,000 மைல்களுக்கு மேல் தொடர்ந்து சுழன்று கொண்டிருக்கிறது. பூமிக்குள் ஆழ...

ஹைடெக் ஏமாற்று வேலை

Image
ஒரு பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பெல்லாம் சில கடைகளில் ஆதரவற்றோர் ஆஸ்ரமத்துக்காக டொனேஷன் உண்டியல்களை பார்த்திருப்போம். அதே போல்,கோவில் திருவிழா,கிரிக்கெட் போட்டிகள் நடத்த என்று பல்வேறு காரணங்களுக்காக மக்களிடம் பணம் வசூலிப்பது உண்டு. இணையதளம் வளர்ந்த இன்றைய காலகட்டத்தில் உண்டியலுக்கு பதிலாக பல Crowd Funding apps வந்துவிட்டது . அமெரிக்காவில் இருக்கும் ஒருவரால் இந்தியாவின் கடைக்கோடியில் இருக்கும் ஒருவருக்கு உதவ முடியும். பேரிடர்,மருத்துவ தேவை போன்ற பல காரணங்களுக்காக Crowd Funding-இன் மூலம் பணம் ஈட்டப்பட்டு பல உயிர்கள் காக்கப்பட்டுள்ளது. ஆனால்,இதிலும் ஏமாற்றும் ஒரு சில கூட்டங்கள் இருக்கத்தான் செய்கிறது. சமீபமாக ஒரு Crowd Funding app நிறுவனத்தின் மீது ஏகப்பட்ட புகார்கள் எழுந்து வெளிச்சத்தை பெற்றுள்ளது. அந்த app-யின் பெயர் Fundmelon. நீங்கள் யூடியூபை தொடர்ந்து பார்ப்பவராக இருந்திருந்தால் இந்த Fundmelon பெயர் உங்களுக்கு கண்டிப்பாக பரிச்சயமாக இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம். தமிழ் யூடுப் சேனல்களில் இருக்கும் மிகவும் பிரபலமான நபர்களில் இவர்களுக்கு பிரதான இடமுண்டு. 1...