ஹைடெக் ஏமாற்று வேலை
ஒரு பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பெல்லாம் சில கடைகளில் ஆதரவற்றோர் ஆஸ்ரமத்துக்காக டொனேஷன் உண்டியல்களை பார்த்திருப்போம்.
அதே போல்,கோவில் திருவிழா,கிரிக்கெட் போட்டிகள் நடத்த என்று பல்வேறு காரணங்களுக்காக மக்களிடம் பணம் வசூலிப்பது உண்டு.
இணையதளம் வளர்ந்த இன்றைய காலகட்டத்தில் உண்டியலுக்கு பதிலாக பல Crowd Funding apps வந்துவிட்டது .
அமெரிக்காவில் இருக்கும் ஒருவரால் இந்தியாவின் கடைக்கோடியில் இருக்கும் ஒருவருக்கு உதவ முடியும்.
பேரிடர்,மருத்துவ தேவை போன்ற பல காரணங்களுக்காக Crowd Funding-இன் மூலம் பணம் ஈட்டப்பட்டு பல உயிர்கள் காக்கப்பட்டுள்ளது.
ஆனால்,இதிலும் ஏமாற்றும் ஒரு சில கூட்டங்கள் இருக்கத்தான் செய்கிறது.
சமீபமாக ஒரு Crowd Funding app நிறுவனத்தின் மீது ஏகப்பட்ட புகார்கள் எழுந்து வெளிச்சத்தை பெற்றுள்ளது.
அந்த app-யின் பெயர் Fundmelon.
நீங்கள் யூடியூபை தொடர்ந்து பார்ப்பவராக இருந்திருந்தால் இந்த Fundmelon பெயர் உங்களுக்கு கண்டிப்பாக பரிச்சயமாக இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.
தமிழ் யூடுப் சேனல்களில் இருக்கும் மிகவும் பிரபலமான நபர்களில் இவர்களுக்கு பிரதான இடமுண்டு.
1) பரிதாபங்கள் சேனலின் கோபி -- சுதாகர்
2)தமிழ் டாக்கீஸின் ப்ளூ சட்டை மாறன்.
இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் இவர்களை தான் அணுகியுள்ளது,FundMelon App.
இவர்களும் Paid Promotion ஆக இவர்களது விடியோக்களில் FundMelon App-ஐ விளம்பரம் செய்தனர்.
இதில் கோபி -- சுதாகர் ஒரு படி மேலே சென்று,2018 ஆம் ஆண்டு இறுதியில் தமிழகத்தில் தாக்கிய கஜா புயலுக்காக நிவாரணம் திரட்ட FundMelon App-யில் நிதி திரட்ட விளம்பரம் செய்தனர்.
நினைத்தைப்போல் மக்கள் ஆதரவில் 34 லட்சம் ரூபாய் கலெக்ட் ஆனது.Fundmelon volunteers உதவியுடன் பல கிராமங்களுக்கு சென்று மக்களுக்கு தேவையான தார்பாய்,பாய்,பெட்ஷீட் போன்ற அடிப்படை தேவையான பொருட்களை கொடுத்தனர்.
அதை படமும் பிடித்து,டிசம்பர் மாதத்தில் தங்களின் பரிதாபங்கள் சேனலில் டெல்டா பாவங்கள் என்ற பெயரில் கிராம மக்களின் உணர்வுகளை படம் பிடித்துகாட்டி ,நிதி கொடுத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக காணொளியை ரிலீஸ் செய்தனர்.
இதை பார்த்த மக்களுக்கு இவர்களின் மேல் மிகுந்த நம்பிக்கை வர ஆரம்பித்தது.இந்த நம்பிக்கையை அடித்தளமாக வைத்து திரைப்படம் எடுக்க முடிவு செய்தனர்.
மூன்று மாதத்திற்குள்,அதாவது மார்ச் மாதத்தில்,India's Biggest Crowd Funding Movie எடுக்கப்போகிறோம்.அதற்கு 8 கோடி தேவை,மக்களாகிய உங்கள் உதவி தேவை என Behindwoods,Selfie Review,கலாட்டா தமிழ் என அணைத்து யூடுப் சேனல்களிலும் நேர்காணல் கொடுத்து,நன்கொடை பணத்தை Fundmelon-யில் போடுங்கள்.
பணம் போடும் அனைவரும் படத்தின் தயாரிப்பாளர்களே,படம் வெளியிடப்பட்ட பின், லாபத்தில் அனைவருக்கும் பங்கு வழங்கப்படும் என கோபி,சுதாகர் மற்றும் படத்தின் இயக்குனர் விளம்பரம் செய்தனர்.
முதல் நாளிலேயே 50 லட்ச ரூபாய் கலெக்ட் ஆனது.நான்கே நாட்களில் ஒரு கோடி ரூபாய் கலெக்ட் ஆனது.
8 கோடி ஈட்டுவதற்கான இலக்காக 45 நாட்கள் நிர்ணயம் செய்தனர்.ஆனால்,6 கோடி ரூபாய் மட்டுமே கலெக்ட் ஆனதால் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்தனர்.
டிசம்பர் மாதத்தில்,யூடுப் மற்றும் திரை பிரபலங்கள் முன்னணியில், படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் மற்றும் ஒளிப்பதிவாளர்,இசையமைப்பாளர் போன்ற முக்கியமானவர்களை அறிமுகம் செய்தனர்.
மறுமுனையில்,Fundmelon app வளர்ச்சியும் பன்மடங்கானது.அதுவரை,Fund raising மட்டுமே செய்த நிறுவனம்,போடும் பணத்திற்கு தினமும் 1 சதவிகிதம் வட்டி வழங்கப்படும் என புதிய திட்டத்தை அறிவித்தது.மக்களும் இதை நம்பி ஆயிரங்கள்,லட்சங்கள் என பணத்தை போட ஆரம்பித்தனர்.
ஒரு சில மாதங்களிலேயே இவர்களின் உண்மை முகம் வெளிப்பட ஆரம்பித்தது.
Crowd Funding Scam :
பொதுவாக Crowd Funding எப்படி செயல்படும் என்பதை ஒரு உதாரணத்துடன் விளக்குகிறேன்.
ஒருவர் தனது நெருங்கிய உறவினரின் மருத்துவ தேவைக்காக நிதி திரட்டுகிறார் என்று வைத்துக்கொள்வோம்.அவருக்கு தேவையான பணம் 1 லட்சம்,அவருக்கு இந்த ஒரு லட்சம் பணத்தை திரட்ட அவருக்கு கொடுக்கப்படும் டார்கெட் 45 நாட்கள் என வைத்துக்கொள்வோம்.
அந்த 45 நாட்களில் அவர் ஒரு லட்சம் பணத்தை ஈட்டிவிட்டால் அவருக்கு அந்த பணம் கிடைத்துவிடும்.ஒரு வேளை,80,000 ரூபாய் தான் ஈட்டமுடிந்தது என்றால், அவருக்கு அந்த பணம் கிடைக்காது.அந்த 80,000 ரூபாயை நன்கொடை நிதியாக கொடுத்தவர்களுக்கே பணம் திரும்ப தரப்படும்.
நீங்க 1 ரூபாய் நன்கொடையாக கொடுத்தால் கூட உங்களுக்கு திரும்ப வந்துவிடும்.இந்த வழிமுறை,நிறுவனத்திற்கு நிறுவனம் ஒரு சில மாற்றங்கள் இருந்தாலும், அடிப்படை இது தான்.
Fundmelon-ஐ பொறுத்தவரை,ஆரம்பத்தில் சரியாக இருந்தாலும்,காலப்போக்கில் Fund Raise செய்தவர்களுக்கும் பணம் வரவில்லை,அதே போல் பணம் கொடுத்தவர்களுக்கு பணம் திரும்ப செல்லவில்லை.பணம் எங்கே போனது??? அனைத்தும் ஸ்வாகா !!!
பெரும்பாலும் நூறு,இருநூறு நிதி அளித்தவர்கள்,இதை பெரிதாக கண்டுகொள்ளமாட்டார்கள்,பணம் உரியவரிடம் சேர்ந்ததா இல்லையா என்பது கூட தெரியாது.உதவி செய்யும் மனப்பான்மையில் அப்போதைக்கு நூறோ,இருநூறோ நன்கொடை அளித்துவிட்டு வேலையை பார்க்க சென்றுவிடுவார்கள்.
Fund raise செய்தவர்களும் குறிப்பிட்ட நாட்களுக்குள் இலக்கை அடையமுடியவில்லை என்பதால் அவர்களும் இதை கண்டுகொள்வதில்லை.
ஆனால்,இதில் Fund raise செய்த ஒருவர்,இலக்கை அடையமுடியாதபோதிலும்,பணம் கொடுத்தவர்களுக்கு பணம் திரும்ப சென்றதா என்று பணம் அளித்தவர்களுக்கு கேட்கும் போது தான் இந்த ஸ்கேம் வெளியில் வர ஆரம்பித்தது.
அதே போல், தினசரி 1 சதவிகித வட்டியை நம்பி பணம் போட்டவர்களுக்கும் முதலும் வரவில்லை வட்டியும் வரவில்லை.அந்த பணமும் ஸ்வாகா !!
இப்போது நீங்கள் உங்கள் பிலேஸ்டோருக்கு சென்று Fundmelon ஆப்பிற்கு சென்று ரெவியூஸ் படித்து பாருங்கள்,அதே போல் consumercomplaints இணையத்தளத்திற்கும் சென்று பாருங்கள் .ஒவ்வொருவரின் மனக்குமுறல்கள் தெரியும்.
இந்த பிரெச்சனை விஸ்வரூபம் எடுக்க ஆரம்பிப்பதை உணர்ந்த கோபி-சுதாகரின் பரிதாபங்கள் சேனல்,தங்களின் சேனலில் அவர்கள் செய்த fundmelon ஆப் விளம்பரங்களை எடிட் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
இன்று மாலை ஒரு clarification வீடியோவையும் ரிலீஸ் செய்து விட்டனர்.தங்களுக்கும் அந்த நிறுவனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை,விளம்பரம் செய்ய சொன்னதால் செய்தோம் என நேக்காக நழுவி விட்டனர்.
இத்தனை நாட்களாக படத்தை பற்றி வாய்திறக்காதவர்கள்,இன்று அதை பற்றி பேசினர்,கோவிட் காரணங்களால் படப்பிடிப்பு நடத்தமுடியவில்லை,விரைவில் டீசர் வெளியிடப்படும் என்று கூறிவிட்டனர்.
இவர்களை நம்பி,இவர்களின் விளம்பரத்தை நம்பி பணம் போட்டவர்கள் நிலை அந்தோ பரிதாபம் தான்.
இதே போன்றதொரு ஒரு Scam-யில் கடந்தாண்டு Blacksheep சேனலும் சிக்கியது.அவர்கள் செய்த paid ப்ரோமொஷனை நம்பி பலர் ஏமாந்து போயினர்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ,சென்னை மீம்ஸ் Facebook பேஜ்,விவசாயிகளுக்கு திரட்டிய நிதியில் ஸ்கேம் செய்து பேங்காக் சுற்றுலா சென்றது.
எனவே மக்களாகிய நாம் தான் உஷாராக இருக்க வேண்டும்.இது போன்ற Online Influencers வலையில் விழாமல் நம்பகத்தகுந்த Crowd Funding நிறுவனத்தில் நமது உதவியை அளிக்கலாம்,இல்லையா உதவி தேவைப்படுவோருக்கு நேரடியாகவே உதவி செய்வது மிகச்சிறந்தது.
Quick Money-ஐ என்றைக்குமே நம்பவேண்டாம்.யாருக்கும் எளிதாக பணம் வந்துவிடாது.அப்படி பணம் வருகிறது என்றால் அதில் உண்மை இருக்காது,ஏமாற்று வேலையாக தான் இருக்கும்.
உஷாராக இருப்போம்.
நன்றி .
படங்கள் உதவி : கூகிள்
Comments
Post a Comment