பணத்தைக் கொட்டிக் கொடுக்கும் கழுதைப்பால் பிசினஸ்!
‘கழுதை’ என்ற சொல் வசைச் சொல்லாகவே மாறிவிட்டது. சோம்பேறியாக இருப்பவரையோ, மெதுவாகச் சிந்தித்து செயல்படுபவர்களையோ கழுதை என்றே அழைக்கிறோம். கழுதைகள் அப்படித்தானா? பார்க்கலாம்.. பழங்கால எகிப்தில் உணவு மற்றும் அழகுக்காக கழுதை பாலானது பயன்படுத்தபட்டது. ரோமானிய சகாப்தத்தில் கழுதை பாலானது நோய்களைத் தீர்க்கும் பொதுவான மருந்துப் பொருளாக பயன்படுத்தப்பட்டதாக பிளினி குறிப்பிட்டுள்ளார். பிரஞ்சு இயற்கையாளரான லூயிஸ் லெக்லர்க் கழுதை பாலின் நன்மைகள் குறித்து தனது புத்தகத்தில் கூறியுள்ளார். நெப்போலியனின் சகோதரியான பவுலின் போனபர்டே தனது சருமத்தின் அழகினைப் பாதுகாக்க கழுதை பாலினை பயன்படுத்தியதாகக் கூறியுள்ளார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தாயற்ற பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு மாற்றாக கழுதை பாலானது கொடுக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டு வரை கழுதை பாலானது அனாதைக் குழந்தைகளுக்கான உணவாகவும், நோய்வாய்பட்ட குழந்தைகள் மற்றும் வயதானவர்களின் தேக ஆரோக்கியத்திற்காகவும் உட்கொள்...