பணத்தைக் கொட்டிக் கொடுக்கும் கழுதைப்பால் பிசினஸ்!

‘கழுதை’ என்ற சொல் வசைச் சொல்லாகவே மாறிவிட்டது. சோம்பேறியாக இருப்பவரையோ, மெதுவாகச் சிந்தித்து செயல்படுபவர்களையோ கழுதை என்றே அழைக்கிறோம். கழுதைகள் அப்படித்தானா? பார்க்கலாம்..


 
             





பழங்கால  எகிப்தில் உணவு மற்றும்  அழகுக்காக கழுதை பாலானது பயன்படுத்தபட்டது. ரோமானிய சகாப்தத்தில் கழுதை பாலானது நோய்களைத் தீர்க்கும் பொதுவான மருந்துப் பொருளாக பயன்படுத்தப்பட்டதாக பிளினி குறிப்பிட்டுள்ளார்.

              பிரஞ்சு இயற்கையாளரான லூயிஸ் லெக்லர்க் கழுதை பாலின் நன்மைகள் குறித்து தனது புத்தகத்தில் கூறியுள்ளார். 

   நெப்போலியனின் சகோதரியான பவுலின் போனபர்டே தனது சருமத்தின் அழகினைப் பாதுகாக்க கழுதை பாலினை பயன்படுத்தியதாகக் கூறியுள்ளார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தாயற்ற பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு மாற்றாக கழுதை பாலானது கொடுக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டு வரை கழுதை பாலானது அனாதைக் குழந்தைகளுக்கான உணவாகவும், நோய்வாய்பட்ட குழந்தைகள் மற்றும் வயதானவர்களின் தேக ஆரோக்கியத்திற்காகவும் உட்கொள்ளப்பட்டது. ஆதலால் இத்தாலி, பெல்ஜியம், ஜெர்மனி, சுவிச்சர்லாந்து ஆகிய நாடுகளில் கழுதை வளர்ப்பு பண்ணை உருவானது. 

எகிப்திய பேரரழகி கிளியோபட்ரோ தன்னுடைய சரும இளமை மற்றும் அழகிற்காக கழுதை பாலில் குளித்தாள். அவளின் தினசரி குளியலுக்கு சுமார் 700 கழுதைகளின் பால் தேவைப் பட்டதாகக் கூறப்படுகிறது. ரோமானிய பேரரசர் நீரோவின் இரண்டாவது மனைவியான பாப்பையா சபீனா பிளினியின் குறிப்பினைப் பின்பற்றி கழுதை பாலை தன் மேனியின் அழகினைப் பாதுகாக்க பயன்படுத்தினாள். 

    ரோமன் கவிஞர் ஓவித் கழுதை பாலினை முகத்தில் தடவ முகம் பிரகாசிக்கும் என தனது கவிதை வரிகளில் குறிப்பிடுகிறார். போரினால் உடல்நலம் குறைந்த பிரெஞ்சு மன்னான பிரான்கோஸ் கானஸ்டான்டிநோபிளைச் சார்ந்த மருத்துவரின் அறிவுரையின்படி கழுதை பாலை உட்கொண்டு உடல்நலம் பெற்றான்.


 
       இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின், ஹிஸ்ஸாரில் (ஹரியாணா) உள்ள தேசிய குதிரை ஆராய்ச்சி மையம் (என்.ஆர்.சி.இ) விரைவில் கழுதை பால் பண்ணை ஒன்றை அமைக்கப் போவதாக டைம்ஸ்ஆப்இந்தியா செய்தி வெளியிட்டது.
            ஹலாரி இன கழுதைகள் வளர்க்கப்பட்டு அவற்றின் மூலம் பால் எடுக்கப்படும் என்று அந்த செய்தித்தாள் தெரிவிக்கிறது.இது தவிர, ஏபிபி நியூஸ், நவபாரத் டைம்ஸ், நேஷனல் ஹெரால்ட் போன்ற ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டு, கழுதை பால் லிட்டருக்கு ரூ. 7,000 வரை விற்கலாம் என்று தெரிவிக்கின்றன. இந்த அறிக்கைகளில், கழுதைப் பாலின் நன்மைகள் பற்றி நிறைய கூறப்பட்டுள்ளது. என்.ஆர்.சி.இ முன்னாள் இயக்குநர் டாக்டர் முக்தி சாதன் பாசு கூறுகையில், "கழுதைப் பாலில் இரண்டு முக்கிய நன்மைகள் உள்ளன. 

             முதலில் இது பெண்களின் பால் போன்றது, இரண்டாவதாக அதில் ஆண்டி ஏஜிங், ஆண்டி ஆக்சிடென்ட் மாறும் ரிஜெனரேட்டிங் காம்பவுண்ட்ஸ் உள்ளன, இவை தோலுக்கு சத்துணவு அளிப்பதுடன்,  அதை மென்மையாய்க்க உதவுகிறது  என்று தெரிவித்தார்."இந்தியாவில் கழுதை பால் குறித்து இன்னும் நிறைய ஆராய்ச்சி செய்யப்படவில்லை, ஏனெனில் அதன் நன்மைகள் பற்றி மக்களுக்குத் தெரியாது, ஐரோப்பாவில் மக்கள் இதைப் பற்றி நிறைய அறிந்திருக்கிறார்கள்,வேலை செய்யும் பெண்கள், தங்களின் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு பேஸ்சுரைஸ் செய்யப்பட்ட கழுதை பால் பயன்படுத்துகின்றனர்,


 இப்போது அமெரிக்கா கூட அதன் அனுமதியை வழங்கியுள்ளது" "இதில் லாக்டோஸ், வைட்டமின் ஏ, பி -1, பி -2, பி-6, வைட்டமின் டி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை உள்ளன. கழுதைப் பாலில் இருந்து தயாரிக்கப்படும் சோப், கிரீம், மற்றும் மாய்ஸ்சரைசர்க்கு இன்று இந்தியாவில் நல்ல சந்தை உள்ளது. பல பெண்கள் கழுதைப் பாலில் இருந்து தயாரிக்கப்படும் இந்த தயாரிப்புகளைப் பயன்படுத்துகின்றனர் "என்று டாக்டர் பாசு கூறுகிறார்.

கழுதைப் பாலில் இருந்து தற்போது இந்தியாவில் குறைந்த பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது என டாகடர் பாசு தெரிவித்தார்.ஆனால் அது அதிகரிக்கும்போது கழுதைப் பால் பற்றாக்குறை ஏற்படும், ஏனெனில் இந்தியாவில் கழுதைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. "இந்தியாவில், கழுதைகளின் ஸ்பிட்டி இனம் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டது. இப்போது ஜாம்நகர் மற்றும் குஜராத்தின் துவாரகாவில் காணப்படும் ஹராலி இனத்தின் கழுதைகளும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த வகை கழுதை பொதுவான கழுதைகளை விட சற்று உயரமாகவும்,குதிரைகளை விட சற்று சிறியதாகவும் வெள்ளை நிறமாகவும் இருக்கும். இப்போது வரை இந்தியாவில், தெருக்களில் சுற்றித் திரியும் கழுதைகளின் இனம் அடையாளம் காணப்படவில்லை, 

        ஆனால் இப்போது இரண்டு இனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன, இது ஒரு நல்ல விஷயம்." "கழுதைகளை சரியாக கவனிக்காமல்,அதிக வேலைகள் வாங்கினால்,அதனால் பால் கொடுக்க முடியாது. ஒரு கழுதை ஒரு நாளில் அதிகபட்சம் அரை லிட்டர் பாலைக் கொடுக்கிறது என்றும் ஒவ்வொரு கழுதையின் பாலும் அதன் பராமரிப்பு முறைக்கு ஏற்ப குறையலாம்" என்கிறார் பேராசிரியர் ராங்க். 

    தமிழ்நாடு, கேரளா மற்றும் குஜராத்தில் ஒரு சிலரே பண்ணையில் கழுதைகளை வளர்க்கின்றனர், அதன் கொள்முதல் பெரும்பாலும் ஆன்லைனில் தான்.சலீம் அப்துல் லத்தீப் தாதன் மும்பையில் இருந்து www.veryrareonline.com என்ற வலைதளத்தை நடத்தி வருகிறார், இது ஒட்டகம், செம்மறி ஆடு, மாடு மற்றும் கழுதைப் பால் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் நெய் மற்றும் பால்பவுடர் ஆகியவற்றை ஆன்லைனில் விற்பனை செய்கிறது. "கழுதைப் பாலின் விலை நிர்ணயிக்கப்படுவதில்லை, அது பண்ணை மூலமாகவும் வருவதில்லை. கிராமத்திலுள்ள எங்கள் மக்களின் மூலம் இந்த பாலைப் பெறுகிறோம். பெரும்பாலான மக்கள் இந்த பாலை மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்களுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள்" என்று அவர் கூறுகிறார்."நீங்கள் தொலைவில் உள்ள ஒருவருக்கு இதை அனுப்பும்போதுதான் லிட்டருக்கு ரூ .7,000 விலையாக இருக்க முடியும், ஏனெனில் இது விரைவாக கெட்டுவிடும். அதுவே மும்பையிலேயே உடனுக்குடன் வாங்கினால், லிட்டர் ரூ. 5,000க்கு கிடைக்கும்” என்று சலீம் கூறுகிறார்.கழுதைகள் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் வேளையில் அவற்றின் பாலுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால்தான் அதன் விலை உயரும் நிலை உள்ளது.   



         ஆனால் தற்போது, பிபிசி ஹிந்தியின் ஃபேக்ட் செக் தகவலில், கழுதைப் பாலின் விலை இன்னும் லிட்டருக்கு ரூ .7,000 ஆக உயரவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
கழுதை பாலை குறித்து தேசிய ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில், இந்தப் பாலில் உடல் பருமன். புற்றுநோய் மற்றும் ஒவ்வாமை தொடர்பான பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய நன்மைகள் உள்ளன என தெரியவந்துள்ளது.





  சில ஆதாரங்களின் அடிப்படையில் கழுதைப் பாலில் உள்ள சுகாதார நன்மைகள் மற்றும் தீமைகள் 

1.இந்தக் கழுதை பாலில் உள்ள கேசின் மற்றும் பாலாடையில் உள்ள புரதச் சத்துக்கள் கட்டிகளை உருவாக்கக் கூடிய உயிரணுக்களுக்கு எதிரான செயல்பாட்டைக் கொண்டுள்ளது. மேலும் இந்த பால் மார்பக புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய்களுக்கு எதிரான ஒரு சிறந்த பால் என்று கூறப்படுகிறது.

 2. கீல் வாதத்திற்கு சிகிச்சை அளிக்க இந்த கழுதை பால் பயன்படுகிறது. இந்த கழுதை பாலில் உள்ள நன்மைகள் தாய்ப்பாலுக்கு ஒத்த நன்மைகளை கொண்டிருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இந்த பாலில் குறைந்த கலோரிகள் மற்றும் குறைந்த கொழுப்பு உள்ளது. ஒரு லிட்டர் கழுதை பாலில் 16 மில்லி கிராம் எண்ணெய் சேர்ப்பது அந்த பாலை பசுவின் பாலை விட சிறந்த பாலாக மாற்றுகிறது. இந்த கழுதைப்பால் எலும்புகளை வலிமையாக்கவும், கீல்வாதம் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. 

 3. இந்த கழுதை பால் குறைந்த கொழுப்பை கொண்டதாகும். 100 கிராம் கழுதை பாலில் வெறும் 8.6 மில்லிகிராம் கொழுப்பு உள்ளது. பசுவின் பாலை ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு. எனவே உடல் பருமன் உள்ளவர்களுக்கு இது ஒரு சரியான பானமாக உள்ளது. மேலும் இதில் உள்ள லினோலிக் அமிலத்தின் பங்கு எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது. 

4. மாட்டு பாலில் உள்ள அதிக கேசின் மற்றும் புரதம் காரணமாக குழந்தைகளுக்கு சில சமயங்களில் ஒவ்வாமை ஏற்படும். இது குழந்தைகளில் பொதுவாக ஏற்படும் ஒரு பிரச்சனையாகும். இதனால் கால்சியம் போன்ற சத்துக்கள் குழந்தைகளுக்குக் கிடைக்காமல் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இந்தக் கழுதை பால் பசு மற்றும் மாட்டு பாலுக்கு சரியான ஒரு மாற்று பாலாக உள்ளது. இந்தக் கழுதை பாலில் கேசின் மற்றும் பாலாடையில் உள்ள அதிக புரதம் ஒவ்வாமையின் விளைவுகளுக்கு காரணமாக உள்ளது. 

5. பெர்டுசிஸ் அல்லது ஹூப்பிங் இருமல் என்பது போர்ட்டெல்லா பெர்டுசிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படும் சுவாசக்குழாய் தொற்று நோய் ஆகும். சூடான் நாட்டில் இந்த கழுதைப் பாலை அதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காரணமாக, வூப்பிங் இருமல் சிகிச்சையில் அடிக்கடி பயன்படுத்துகிறது. மேலும் இந்த பாலில் நோய் எதிர்ப்பு பண்புகள், நமது உடலில் பாக்டீரியா காரணமாக ஏற்படும் நுரையீரல் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.


6. கழுதைப் பாலில் உள்ள புரதங்கள், பெப்டைடுகள், என்சைம்கள், வளர்ச்சி காரணிகள், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், தாதுக்கள் மற்றும் நோயெதிர்ப்பு காரணிகள், அதிக ஊட்டச்சத்து மற்றும் உயிரியல் ஆற்றலைக் கொண்டுள்ளது. இந்த பண்புகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த நமக்கு உதவுகிறது. மேலும் உணவுகளினால் ஏற்படும் ஓவ்வாமை பிரச்சனைகளையும் தடுக்க உதவுகிறது. புதிய கழுதைப் பாலில் ஆன்டிபாடி-சுரக்கும் உயிரணுக்களின் திறன் மேம்படுவதாக கூறப்படுகிறது. இது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயன்படுகிறது. 


7.கழுதைப் பாலில் ஆக்ஸிஜனேற்ற செயல்திறன் உள்ளது. மாட்டுப் பாலுடன் கழுதைப் பாலை ஒப்பிடும்போது, கழுதை பாலில் திறன் அதிகம் என்று ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ளது. கழுதை பாலை உணவில் சேர்த்துக்கொள்வது உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை ஆக்ஸிஜனேற்றுவதன் மூலமும், செல்கள் சேதமடைவதைத் தடுப்பதன் மூலமும் நமது வயதைக் குறைக்க உதவுகிறது.


 8. கழுதைப் பாலில் உள்ள ஒப்பனை பயன்கள் காரணமாக பரோவா கிளியோபாட்ரா அவரது சருமத்தின் மென்மையை பராமரிக்க கழுதை பாலில் குளித்தார் என்று கூறப்படுகிறது. இத்தாலி பிரான்ஸ் போன்ற நாடுகளில் இந்த கழுதை பால் அதிகமாக அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. மாட்டுப் பாலை விட இதில் குறைந்த pH உள்ளடக்கம் உள்ளது. இது நமது சருமத்தைப் பராமரிக்க உதவுகிறது. 

9. இந்த கழுதைப் பாலில் உள்ள பயோ ஆக்டிவ் புரதங்கள் மற்றும் பெப்டைட்கள் நமது உடலில் ஏற்படும் காயங்களை சரி செய்ய உதவுகிறது. குறிப்பாக அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் காயங்களை குணப்படுத்த உதவுகிறது. பல மேற்பூச்சு கிரீம்களில், இந்த கழுதைப்பால் ஒரு முக்கிய மூலப் பொருளாக சேர்ப்பதுக்கு காரணம், இவற்றில் காயங்களை குணப்படுத்தும் நன்மைகள் நிறைந்திருப்பதால் ஆகும். 

10. கழுதைப் பாலில் சிறிதளவு சூரியகாந்தி எண்ணெய் சேர்ப்பது, தாய்பாலுக்கு ஒத்த நன்மைகளை கொண்டு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. தாய்ப்பாலுடன் ஒப்பிடும்போது இந்த கழுதைப் பாலில் குறைந்த கொழுப்பு மற்றும் கலோரிகள் உள்ளன. மேலும் இதில் தாய்ப்பாலை விட அதிகப் கலோரிகள் மற்றும் தாதுக்கள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. சிறு வயதிலேயே சில குழந்தைகளுக்கு பால் ஒவ்வாமை ஏற்படுவது சகஜம். அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு சிறந்த மாற்றாக இந்த கழுதைப்பால் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

11. பலவீனம் குறைந்த ரத்த அணுக்கள், அதிக காய்ச்சல் போன்றவை சிக்கன்குனியாவின் அறிகுறிகளாகும். கழுதைப் பாலில் உள்ள இம்யூனோகுளோபுலின் உள்ளடக்கம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து சிக்கன்குனியா போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது.


12. கழுதை பாலில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரசின் சரியான விகிதம் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. அதிக அளவில் கால்சியம் இருந்தால் அது மலச்சிக்கல் மற்றும் பசியின்மையை ஏற்படுத்துகிறது. இந்த கழுதைப் பாலில் 100 கிராமுக்கு 68.9 மில்லி கிராம் கால்சியமும், 41 மில்லிகிராம் பாஸ்பரசும் உள்ளது. இது மாட்டுப் பாலை விட குறைவானது ஆகும். 


            கழுதைப்பாலைக்கொண்டு அழகு சாதன பொருள்களைத் தயாரிக்கலாம் என்பதையும், ஊட்டச்சத்து பொருள்களிலும் அதைக் கலக்கலாம் என்பதையும் ஒப்புக்கொள்ளும் வேளாண் விஞ்ஞானிகள், இந்தியாவில் கழுதை வளர்ப்பு நல்ல லாபகரமான தொழிலாக வளர்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்கின்றனர்.


நன்றி google  

Comments

Popular posts from this blog

அலெக்ஸாண்ட்ரியா நூலகம் (Library of Alexandria)

ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!!

முருங்கை கீரை