Posts

Showing posts from August 27, 2021

நான் அறிந்த தாஜ்மஹால்...

Image
தாஜ்மஹால் நம் அனைவராலும் "காதல் சின்னம் "என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள மற்ற கட்டிடங்களை காட்டிலும் சிறப்பு வாய்ந்தது ஏனெனில், இந்தஅழகிய கட்டிடத்தை கட்டி முடிப்பதற்கு கிபி 1632 லிருந்து 1653 வரை சுமார் 20 ஆண்டுகள் ஆகிவிடும். அதோடு மட்டுமில்லாமல் தாஜ்மஹால் கட்டுவதற்கு ஷாஜகான் 20 முதல் 22 ஆயிரம் வேலையாட்களை பயன்படுத்தினார். மேலும் அதை கட்டுவதற்கு தேவையான பொருள்களை பல்வேறு இடத்தில் இருந்து கொண்டு வருவதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் பயன்படுத்த பட்டன. தன் மனைவி மும்தாஜ் மஹால் இறப்பதற்கு முன்பாக கேட்டுக் கொண்டதற்கிணங்க தன் காதலை வெளிப்படுத்த ஷாஜகான் இந்த சிற்பக் கலை வடிவத்தை யமுனை ஆற்றின் நதிக்கரையில் வெளிக்கொணர முற்பட்டார். தாஜ்மஹால் ஏன் இவ்வளவு அழகிய தாகத் தோன்றுகிறது என்றால் இதன் கட்டிடக் கலை இந்திய பெர்சிய மற்றும் இஸ்லாம் ஆகிய அனைத்து கலந்து நடையில் கட்டப்பட்ட கட்டிடம் ஆகும். வரலாறு என்ன கூறுகிறது என்றால், தாஜ்மஹாலை கட்டி முடித்த பிறகு, இதே போன்று வேறு ஒரு கட்டிடம் எழுப்பக் கூடாது என்ற காரணத்தினால் இந்த கட்டிடத்தை கட்டிய அனைத்து கலைஞர்களின் விரலையும் ஷாஜகான் மன்...