Posts

Showing posts from 2016

போதையில் மிதந்த மேதையின் உள்ளத்தில் உதித்த பாடல்கள் ஒரு பார்வை...

Image
இன்றும் எம் உதடுகள் முணுமுணுக்கும் போதையில் மிதந்த மேதையின் உள்ளத்தில் உதித்த பாடல்கள் ஒரு பார்வை... பூஜ்ஜியத்துக்குள் கவி ராஜ்யத்தை ஆண்டு இணையற்ற கவிஞர் என்ற தனித்துவ கொடியை ஏந்தி காலத்தால் அழியாத தத்துவ ஞானியாக வாழ்ந்து நினைவில் நீங்காது நிலைத்து நிற்கும் கவிஞர் கோ. கண்ணதாசனுக்கு நிகராக இனித்தான் எவரும் பிறக்க வேண்டும் என்பது அவர் பால் ஈர்க்கப்பட்டோரின் முடிவாகும். 1949ல் ‘கன்னியின் காதலி’ என்ற படத்துக்குத் தனது கன்னிப் பாடலை எழுதியதன் மூலம் சினிமாப் பாடலாசிரியராக அறிமுகமானார். நவரசங்களையும் அதற்கு அப்பாலும் தொட்டுபாடல் எழுதி தனது காவியங்களால் மானிட உள்ளங்களில் மதிப்போடு கட்டுண்டார். கவிஞரது முதல் மனைவி பொன்னழகி அம்மையாரின் இயல்புகளை சிந்தித்துக் கொண்டிருந்த கண்ணதாசனின் உள்ளத்தில் உதித்த எண்ணத்தின் அடிகள் தான். உண்ணும் அழகைப் பார்த்திருப்பாயே உறங்க வைத்தே விழித்திருப்பாயே கண்ணை இமை போல் காத்திருப்பாயே காதல் கொடியே கண் துயில்வாயே என்ற அடிகள் இவை. பாலும் பழமும் படத்தில் அமரர் சிவாஜிகணேசனின் நடிப்பாற்றலால் பெருமைபெற்று இன்றும் இதழ்களில் நடமாடிக் கொண்டி...

“மஸ்குலார் டிஸ்ட்ரோபி” (muscular dystrophy)

Image
“மஸ்குலார் டிஸ்ட்ரோபி” (muscular dystrophy) விஞ்ஞானம் விண்ணைமுட்டும் அளவிற்கு உயர்ந்து உலகை ஆட்டி படைத்துக்கொண்டிருகிறது. மருத்துவ உலகில் தினமும் பற்பல புதிய கண்டுபிடிப்புகள் எத்தனையோ நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டிருகிறது . எனினும் மனித குலத்தில் இன்னும் பல கொடிய நோய்களை மனிதன் அறிந்திருக்கவும் இல்லை. நம்மை அது தாக்கும் வரை அதை அறியும் ஆர்வமும் இல்லை அதற்கான போதிய விழிப்புணர்வும் இல்லை. அத்தகையதொரு கொடியநோய்தான் “மஸ்குலார் டிஸ்ட்ரோபி” தமிழில் “தசைச்சிதைவு” நோய் என அழைக்கபடுகிறது. தசைச்சிதைவு நோய் என்பது ஒரு மரபணு நோயாகும் .தசை கட்டுபாட்டிற்கு தேவையான ஒரு புரதத்திற்கு அடிப்படையான ஒரு மரபணு குறைப்பாடே காரணமாகிறது.அடிப்படையான தசை புரத குறைபாட்டால் தசை நார்களின் சக்தி குறைகிறது .மேலும் இவை தசையை இறுகும் தன்மைக்கு கொண்டு செல்கிறது. இறுகிய தசைகளால் மனித எலும்பு மண்டலம் பாதிப்பதோடு மட்டும் அல்லாது மனித உடலின் அடிப்படை கட்டுமானத்தை பாதிக்கிறது . பொதுவாக மனித உடல் இரு வேறு வகையான தசைகளால் ஆனது 1.தன்னிச்சியாக இயங்கும் தசைகள் (நுரையீரல்,இதயம்) 2.நாம் அசைக்க நினைக...