திருநெல்வேலி ஒரு பார்வை..
உங்களுக்கு இருட்டுகடை அல்வா வேண்டுமென்றால் அது நெல்லையப்பர் கோவில் அருகில் இருக்கும் பெயர் பலகை கூட இல்லாத ஒரு சிறிய கடையில் சாயங்காலம் 6 மணியில் இருந்து இரவு 8 மணிவரை மட்டுமே கிடைக்கும் . நீங்கள் கடை திறக்கும் முன்பே சென்று வரிசையில் நின்றால் தான் கிடைக்கும். வேறு எங்கும் திருநெல்வேலியில் இருட்டு கடை அல்வா கிடைக்காது. நம்பி ஏமாந்துவிடாதீர்கள். இதுதான் அந்த கடை கூட்டத்தை பார்த்திர்களா? அதை வைத்து அடையாளம் கண்டுகொள்ளலாம். 2. சுற்றுலா பயணிகள் இவ்வளவு மெணக்கிட்டு நேரம் செலவளித்து அல்வா வாங்கி சாப்பிடுவது கடினம் . இருட்டு கடை அல்வாவிற்கு அடுத்தபடியாக ஒரிஜினல் திருநெல்வேலி அல்வா என்ற பெயர் பெற்றது சாந்தி சுவீட்ஸ் அல்வா. ஆனால் திருநெல்வேலி பஸ் ஸ்டான்டிலும் , ரயில் நிறுத்ததிலும் நீங்கள் திரும்பும் திசையெல்லாம் சாந்தி ஸ்வீட்ஸ் என்ற பெயரில் தான் கடைகள் இருக்கும் இதில் ஒன்று கூட உண்மையான சாந்தி ஸ்வீட்ஸ் கிடையாது. உண்மையான கடை திருநெல்வேலி ரயில் நிறுத்தம் அருகில் மட்டுமே உள்ளது . அவர்களுக்கும் வேறு எங்கும் கிளைகள் கிடையாது. இதுவே அந்த கடை எப்போது சென்றாலும் குறைந்தது 10 பேராவது நின்று அல்வா வாங்க...