நமது வரலாற்றின் கறைகள்! தேவதாசி முறை!
நமது வரலாற்றின் கறைகள்! தேவதாசி முறை! தேவதாசி என்பவர்கள் பெரும் கோயில்களில் நடனமாடுவதற்காக சிறுவயதில் நேர்ந்து விடப்படும் பெண்களைக் குறிக்கும் சொல். இச்சொல் தேவன் (இறைவன்) + தாசி (அடிமை) = இறைவனின் அடிமை என்ற பொருள்படும். இவ்வழக்கம் 1930களுக்கு முன்பு வழமையாக இருந்தது. இந்த முறை கோயில் பணிகளுக்காக ஏற்படுத்தப்பட்டதாக இருந்தாலும், பின்னாட்களில் இவர்கள் கோயில்களை நிர்வாகித்த மேல் வர்க்கத்தினருக்கு அல்லது அரசர், செல்வந்தர் போன்றவர்கள் முன்பு நடனமாட வைக்கப்பட்டதுடன் அவர்களுடைய பாலியல் இச்சைகளுக்கு அடிமைகளாகவும் பயன்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக இவ்வழக்கத்துக்கு 1920 முதல் இந்தியாவில் பாரிய எதிர்ப்பு இருந்தது, அதன் காரணமாக 1947 ஆண்டில் தேவதாசி ஒழிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஒழுக்கம், கற்பு என்னும் கருத்துக்களில் ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதி என்ற ஒரு தலைப்பட்ட நீதி வழக்கிலிருப்பதை வெளிப்படையாகக் காட்டும் நிறுவனமே தேவதாசி முறையாகும். இது ஆண்களின் வசதிக்காகவும், அவர்களின் இச்சையை அவர்கள் விருப்பப்படி பூர்த்தி செய்யவும், பெண்கள் சமூகத்தை மூளைச்சலவை செய்து ஏற்படுத்தப்பட்ட ஒரு கொ...