உலகத்தில் மனிதனின் கால் பதியாத இடம்
ம னிதன் நிலவுக்குப் போகிறான். செவ்வாய் கிரகத்துக்குக் கூட போகப்போகிறான். இப்படி பூமியை விட்டு பல லட்சம், பல கோடி கி.மீ. தொலைவில் உள்ள கிரகங்களுக்கே செல்லபோகும் மனிதானால் பூமியில் உள்ள ஒரு இடத்துக்கு மட்டும் போகவே முடியாது. அப்படியே போனாலும் அங்கிருக்கும் நிலத்தில் காலடி வைக்க முடியாது. வைத்தால் கால் இருக்காது..! அந்த இடத்தின் பெயர் 'மரியானா ட்ரென்ச்' . இதனை 'சேலஞ்சர் டீப்' என்றும் அழைக்கிறார்கள். இது ஒரு கடல் பகுதி. உலகின் மிக ஆழமான கடற்பகுதி இதுதான். பொதுவாக கடலின் சராசரி ஆழம் 4 கி.மீ. என்றால், இங்கோ ஆழம் 10,902 மீட்டர். அதாவது 11 கி.மீ.க்கு கொஞ்சம் குறைவான ஆழம். நமது எவரெஸ்ட் மலையை அப்படியே தூக்கி உள்ளே போட்டால் கூட அந்த மலை கடலின் மட்டத்தில் இருந்து 3 கி.மீ. ஆழத்தில்தான் கிடக்கும். அவ்வளவு ஆழமான பகுதி. ஆழம் இருந்தால் என்ன மனிதன்தான் எவ்வளவு ஆழத்துக்கும் போக முடியுமே? என்று கேட்கலாம். பொதுவாக மனிதனின் உடல் ஓரளவு அழுத்தத்தை மட்டுமே தாங்கும். நிலத்தில் வாழும் நாமும் தொடர்ந்து அழுத்தத்தை தாங்கிக்கொண்டுதான் இருக்கிறோம். அது காற்றின் அழுத்தம். காற்று ஒரு செண்டி மீட...