Posts

Showing posts from June 19, 2015

வைரமான தமிழர்கள்

வைரம் என்பது நமக்கு ஓர் உயர்ந்த அணிகலனாகத்தான் தெரியும்.சரிதமிழர்கள் ஏன் வைரத்திற்கு “வைரம்” என்று பெயர் வைக்கவேண்டும் ? இது போன்ற கேள்விகளுக்கு விடைகள்தான் தமிழர்கள் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அக்காலத்திற்கு ஏற்ற “உயரிய அறிவியலையும், நாகரீகத்தையும்” கொண்டிருந்தார்கள் என்று உணரமுடியும். இவ்வுலகத்திலேயே மிக உறுதிவாய்ந்த பொருளாக வைரம் கண்டறியப்பட்டுள்ளது. தனிமத்தின் உறுதியைக் கணக்கிட “மோ(Mohs scale)” என்ற அளவீட்டை கி.பி.1812-ல் ஜெர்மனியைச் சோ்ந்த ஃபிரடரிக் மோ என்ற ஆய்வாளரால் கண்டறியப்பட்டுப், பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த மோ அளவீட்டின் உச்சபட்ச எண் 10 ஆகும். இது வைரத்தினுடைய உறுதியெண் ஆகும். தமிழில் வைரம் (வயிரம்) என்றால் உறுதி என்று பொருள். தமிழில் ஒரு சொல்வடை காலங்காலமாக உள்ளது ”இது வைரம் பாய்ஞ்ச கட்டை”.இதன் பொருள் என்ன வைரம் என்ற தனிமம் நிறைய உள்ளது என்றா? இல்லையேல் கட்டை உறுதிவாய்ந்ததாக உள்ளது என்றுதானே பொருள். பல மொழிகளில் அதனுடைய முக்கியப் பண்புக்குப் பொருத்தமில்லாதப் பெயர் இருக்கும் பொழுது தமிழில் மட்டுமேன வைரத்தின் மிகமுக்கியப் பண்பைக் குறிக்கும் பெயர் இருக்க வ...

ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!!

Image
                       உலகளவில், ஆண்டுதோறும் உற்பத்தியாகும் உணவில், மூன்றில் ஒரு பங்கு வீணாக்கப்படுகிறது என்றும், இவ்வாறு வீணாக்கப்படும் அனைத்துவகை உணவைக் கொண்டும் பசியில் வாடிக் கொண்டிருக்கும் ஐம்பது கோடி பேருக்கு உணவு அளிக்கலாம் என்ற கருத்தை ஐ.நா வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு [  F.A.O ] தெரிவித்துள்ளது. திருமணம் மற்றும் சமூக நிகழ்ச்சிகளில் பரிமாறப்படும் உணவுகள் அதிகளவில் வீணாக்கபடுவதாகவும் கருத்து தெரிவித்துள்ளது நமக்கு மிகவும் வேதனை தருவதாக இருக்கின்றது. வசதிபடைத்தோர் தங்களை சமூகத்தில் ‘நாங்கதானுங்க உசத்தி’ என்று காட்டிக்கொள்வதற்காக திருமண நிகழ்ச்சிகளை பயன்படுத்திக் கொள்கின்றனர். இதற்காக அவர்கள் விநியோகம் செய்யும் அழைப்பிதழ் முதல் பரிமாறும் தட்டுவரை எடுத்துக்கொள்ளும் ஆடம்பர பகட்டுகள் இருக்கிறதே ! சற்றுத் தூக்கலாகவே இருக்கும். வசதி படைத்தோரை மட்டும்தான் அழைப்பார்கள், ஏழை எளியோரை கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டுகள் ஒருபுறம் இருந்தாலும் திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உண்டு மகிழ்ந்து மீதியுள்ளவற்றை வேஸ்ட்டாக த...