Posts

Showing posts from December 3, 2012

தமிழர் பண்பாடு

தமிழர்கள் உணவு பரிமாறும் விதம் 1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது 2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள இனிப்பு - மிகவும் அருகாமையில் 3,6. நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல் ஊறுகாய் 5. குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம் 4. அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள் பல ஆயிரம் ஆண்டுக்கு முன் அறிவியல்: முதலில் பருப்பு மற்றும் நெய்( செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயை தன்மையாக்கும் பொருட்கள் ), பிறகு குழம்பு ( ருசியுடன், தன்மையான உணவு குழாயை வருடும் ), பிறகு ரசம் ( இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும் ), பிறகு மோர் ( வயிறார உண்டபின் உருவாகும் சூட்டைக்குறைக்கும் ).. தமிழர்களுடைய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வாழை இலைக்கு உண்டு . சுப காரியங்கள் என்றால் உடனே கும்பம் வைத்து அதன் கீழே தலைவாழை இலையை வைத்து அரிசி பரப்பி கும்பத்தின் மேலே தேங்காய் வைப்பது வழமை . இது தமிழர்கள் தமது பாரம்பரியமாகவே செய்து வருகிறார்கள் . ...

தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரம்

Image
டிசம்பர் 23, 1964 அன்று தமிழ்நாட்டின் தென் பகுதியில் உள்ள தனுஷ்கோடி ஒரு பெரும் புயலால் தாக்கப்பட்டு அழிந்து போனது. ராமேஸ்வரம் தீவின் கிழக்கு முனையில் தனுஷ்கோடி நகரம் இருந்தது. 500-க்கும் மேற்பட்ட வீடுகள் கொண்ட மீனவ நகரம். மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது சுனாமி போன்ற ராட்சத அலை எழுந்து ஊருக்குள் புகுந்தது. அதை அப்போது கடல் கொந்தளிப்பு என்று பொதுவான வார்த்தையால் அழைத்தனர். இந்த அல ை 20 அடி உயரத்துக்கு ராட்சத அளவில் எழும்பி வந்தது. அதிகாலை 3 மணி அளவில் ஆழிப் பேரலை தனுஷ்கோடிக்குள் புகுந்து, நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது. தனுஷ்கோடி மக்களில் மிகப்பெரும்பாலானோர் இதில் உயிரிழந்தனர். சென்னையில் இருந்து ராமேசுவரத்துக்கு போய்க் கொண்டிருந்த போட் மெயில் என்று தொடருந்து சேவை தொடர் வண்டியும் பேரலையில் சிக்கி கடலுக்குள் இழுக்கப்பட்டது. மொத்தம் சுமார் 2000 பேர் உயிரிழந்தனர். தனுஷ்கோடி அடியோடு அழிந்தது. மண் மூடிப் போன மேடாக மாறிப் போனது. புயலின் அடையாளமாக இன்று சிதிலமடைந்த ஒரு தேவாலயம். சில கட்டடங்கள் மட்டுமே மிச்சமிருக்கின்றன. தனுஷ்கோடி நகரம் புதிப்பிக்கப்படவில்லை. இர...