Posts

Showing posts from August, 2021

பணத்தைக் கொட்டிக் கொடுக்கும் கழுதைப்பால் பிசினஸ்!

Image
‘கழுதை’ என்ற சொல் வசைச் சொல்லாகவே மாறிவிட்டது. சோம்பேறியாக இருப்பவரையோ, மெதுவாகச் சிந்தித்து செயல்படுபவர்களையோ கழுதை என்றே அழைக்கிறோம். கழுதைகள் அப்படித்தானா? பார்க்கலாம்..                 பழங்கால  எகிப்தில் உணவு மற்றும்  அழகுக்காக கழுதை பாலானது பயன்படுத்தபட்டது. ரோமானிய சகாப்தத்தில் கழுதை பாலானது நோய்களைத் தீர்க்கும் பொதுவான மருந்துப் பொருளாக பயன்படுத்தப்பட்டதாக பிளினி குறிப்பிட்டுள்ளார்.               பிரஞ்சு இயற்கையாளரான லூயிஸ் லெக்லர்க் கழுதை பாலின் நன்மைகள் குறித்து தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.     நெப்போலியனின் சகோதரியான பவுலின் போனபர்டே தனது சருமத்தின் அழகினைப் பாதுகாக்க கழுதை பாலினை பயன்படுத்தியதாகக் கூறியுள்ளார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தாயற்ற பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு மாற்றாக கழுதை பாலானது கொடுக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டு வரை கழுதை பாலானது அனாதைக் குழந்தைகளுக்கான உணவாகவும், நோய்வாய்பட்ட குழந்தைகள் மற்றும் வயதானவர்களின் தேக ஆரோக்கியத்திற்காகவும் உட்கொள்...

நான் அறிந்த தாஜ்மஹால்...

Image
தாஜ்மஹால் நம் அனைவராலும் "காதல் சின்னம் "என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள மற்ற கட்டிடங்களை காட்டிலும் சிறப்பு வாய்ந்தது ஏனெனில், இந்தஅழகிய கட்டிடத்தை கட்டி முடிப்பதற்கு கிபி 1632 லிருந்து 1653 வரை சுமார் 20 ஆண்டுகள் ஆகிவிடும். அதோடு மட்டுமில்லாமல் தாஜ்மஹால் கட்டுவதற்கு ஷாஜகான் 20 முதல் 22 ஆயிரம் வேலையாட்களை பயன்படுத்தினார். மேலும் அதை கட்டுவதற்கு தேவையான பொருள்களை பல்வேறு இடத்தில் இருந்து கொண்டு வருவதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் பயன்படுத்த பட்டன. தன் மனைவி மும்தாஜ் மஹால் இறப்பதற்கு முன்பாக கேட்டுக் கொண்டதற்கிணங்க தன் காதலை வெளிப்படுத்த ஷாஜகான் இந்த சிற்பக் கலை வடிவத்தை யமுனை ஆற்றின் நதிக்கரையில் வெளிக்கொணர முற்பட்டார். தாஜ்மஹால் ஏன் இவ்வளவு அழகிய தாகத் தோன்றுகிறது என்றால் இதன் கட்டிடக் கலை இந்திய பெர்சிய மற்றும் இஸ்லாம் ஆகிய அனைத்து கலந்து நடையில் கட்டப்பட்ட கட்டிடம் ஆகும். வரலாறு என்ன கூறுகிறது என்றால், தாஜ்மஹாலை கட்டி முடித்த பிறகு, இதே போன்று வேறு ஒரு கட்டிடம் எழுப்பக் கூடாது என்ற காரணத்தினால் இந்த கட்டிடத்தை கட்டிய அனைத்து கலைஞர்களின் விரலையும் ஷாஜகான் மன்...

மயோபதி கண்ட மாமனிதன்

Image
  நண்பர்களே உங்களால் முடியும்.. இந்த செய்தியை பரப்ப ... யாரேனும் ஒருவர் இதனால் பயனடையலாம் அவரது மனம் உங்களை கண்டிப்பாக வணங்கும் ... திரு நெப்போலியன் .நடிகர், அரசில்வாதி ,தொழிலதிபர், முன்னாள் மத்திய அமைச்சர் இதெல்லாம் நாம் அறிந்தது இதையும் கடந்து  அவர் ஒரு மனித நேயம் மிக்க மனிதர்  தனக்கு வந்த துயரத்திற்கு மட்டும் விடைதேடாமல் பாதிக்கப்பட்டோர் அனைவருக்கும் வழிதேடும் மனிதநேயம் படைத்தவர். விஞ்ஞானம் விண்ணைமுட்டும் அளவிற்கு உயர்ந்து உலகை ஆட்டி படைத்துக் கொண்டிருகிறது. மருத்துவ உலகில் தினமும் பற்பல புதிய கண்டுபிடிப்புகள் எத்தனையோ நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டிருகிறது .  எனினும் மனித குலத்தில் இன்னும் பல கொடிய நோய்களை மனிதன் அறிந்திருக்கவும் இல்லை. நம்மை அது தாக்கும் வரை அதை அறியும் ஆர்வமும் இல்லை அதற்கான போதிய விழிப்புணர்வும் இல்லை.  அத்தகையதொரு கொடியநோய்தான் “மஸ்குலார் டிஸ்ட்ரோபி” தமிழில் “தசைச்சிதைவு” நோய் என அழைக்கபடுகிறது.  தசைச்சிதைவு நோய் என்பது ஒரு மரபணு நோயாகும் .தசை கட்டுபாட்டிற்கு தேவையான ஒரு புரதத்திற்கு அடிப்படையான ஒரு மரபணு குறைப்பாடே காரணமா...

அலெக்ஸாண்ட்ரியா நூலகம் (Library of Alexandria)

Image
                        அலெக்ஸாண்டர் தி க்ரேட் எகிப்த் நதிக்கரை ஓரம் ஒரு ஊரை தன் பெயரிலே நிறுவ திட்டமிட்டு அதற்காக ஒரு கடலோர கிராமத்தை தேர்வு செய்து 343BC இல் அலெக்ஸாண்ட்ரியா என பெயரிட்டார்.. அவரின் இறப்புக்கு பின் டாலமி (Ptolemy) என்பவர் கையில் ஆட்சி சென்றது.. இவரின் காலத்தில் தான் (285BC -246BC) அலெக்ஸாண்ட்ரியா நூலகம் (Library of Alexandria) நிறுவ திட்டமிட்டு படி படியாக வளர்ந்து, ஒரு கட்டத்தில் உலகின் மிக சிறந்த நூல்களை எல்லாம் மொழி பெயர்த்து சிறந்த நூலகமாக விளங்கியுள்ளது.. நூலகத்தின் ஒரு பகுதி 145BC யிலும், மற்றொரு முறை 48BC யிலும் தீக்குள்ளானதாக கூறப்படுகிறது.. இரண்டாவது தீ சம்பவம் ஜூலியஸ் சீசரினால் ஏற்ப்பட்டது எனவும் கூறப்படுகிறது.. பின்னர் நடந்த வெவ்வேறு ஆட்சி மாற்றத்தினால் அந்த நூலகம் மறுபொழிவுபெறவில்லை.. 1974இல் அலெக்ஸாண்ட்ரியா யுனிவர்சிடி ஒரு குழு அமைத்து அதே இடத்தில் புதிதாக நூலகம் அமைக்க திட்டமிட்டனர். பின்னர்  பிப்லியோதிகா அலெக்ஸாண்ட்ரினா  என பெயரிடப்பட்டு  2002  இல் திறக்கப்பட்டது.. இதில் cultur...

உங்களுக்கு தெரியுமா..?

Image
பெரும்பாலான மக்கள் தங்களுக்கு மூக்குக்கண்ணாடி வாங்கும் போது அதன் அளவை பார்ப்பதில்லை. தங்களுக்கு ஏத்தவாறு இருக்கிறதா என்பதை மாட்டுமே பார்க்கிறார்கள். எப்படி நமது காலணி, உடைக்கு அளவு இருக்கிறதோ அதேபோல் ஒவ்வொரு மூக்குக்கண்ணாடிக்கும் ஒரு அளவு உள்ளது. எடுத்துக்காட்டாக: இந்த கண்ணாடி இதன் உட்புறம் பாருங்கள் அதில் JE16026 50–18–138-C02 என்று எழுதப்பட்டுள்ளது இதில் 138, 18 மற்றும் 50 என்பது அளவை குறிக்கும். 138 என்பது 18 என்பது மற்றும் 50 என்பது இவை தான் மூக்குக்கண்ணாடியின் அளவு என்பார்கள். நன்றி...!

பூமி ஒரு ஆச்சரியம்...

Image
பூமியை சுற்றி நாடுகள் உள்ளது எனில் பூமியின் ஒரு புறம் இருந்து மறு புறம் வரை துளையிடும் போது மற்ற நாடுக்கு தானே செல்ல வேண்டும்? முதலில் இது சாத்தியமில்லை. இது வரை பூமியில் இடப்பட்ட ஆழமான துளையான கோலா சூப்பர்-டீப்பின் ஆழம் 12.26 கிலோமீட்டர்கள் அதாவது பூமியின் விட்டத்தில் 0.2%. இதற்கே 20 ஆண்டுகளுக்கு மேல் ஆனது. பூமியின் வெப்பம் தாளாமல் அந்த துளையிடும் பணி நிறுத்தப்பட்டது. ஒரு பேச்சுக்கு, பூமியில் நேராக துளை ஒன்று இட வேண்டுமென்றால் 8,000 மைல்களுக்கு மேல் பாறை மற்றும் உருகிய தீக்குழம்பு 6,000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பூமியின் மேற்பரப்பை விட 30 கோடி மடங்கு அதிக அழுத்தம் இவை அனைத்தையும் சமாளிக்க வேண்டும். எப்படியோ இவற்றை சமாளித்து நேரான துளை இடப்பட்டு விட்டது என்று வைத்துக் கொள்வோம். அதில் குதித்தால் என்ன ஆகும்? வேறென்ன? நாம் சிந்தித்துப் பார்க்க விருப்பம் இல்லாத விதங்களில் கொடூரமான இறப்பு ஏற்படும். சரி அதையும் சமாளிக்க முன்கூட்டியே வழி செய்து விட்டோம் என்று வைத்துக் கொள்வோம். பூமியின் மேற்பரப்பு ஒரு மணி நேரத்திற்கு 1,000 மைல்களுக்கு மேல் தொடர்ந்து சுழன்று கொண்டிருக்கிறது. பூமிக்குள் ஆழ...

ஹைடெக் ஏமாற்று வேலை

Image
ஒரு பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பெல்லாம் சில கடைகளில் ஆதரவற்றோர் ஆஸ்ரமத்துக்காக டொனேஷன் உண்டியல்களை பார்த்திருப்போம். அதே போல்,கோவில் திருவிழா,கிரிக்கெட் போட்டிகள் நடத்த என்று பல்வேறு காரணங்களுக்காக மக்களிடம் பணம் வசூலிப்பது உண்டு. இணையதளம் வளர்ந்த இன்றைய காலகட்டத்தில் உண்டியலுக்கு பதிலாக பல Crowd Funding apps வந்துவிட்டது . அமெரிக்காவில் இருக்கும் ஒருவரால் இந்தியாவின் கடைக்கோடியில் இருக்கும் ஒருவருக்கு உதவ முடியும். பேரிடர்,மருத்துவ தேவை போன்ற பல காரணங்களுக்காக Crowd Funding-இன் மூலம் பணம் ஈட்டப்பட்டு பல உயிர்கள் காக்கப்பட்டுள்ளது. ஆனால்,இதிலும் ஏமாற்றும் ஒரு சில கூட்டங்கள் இருக்கத்தான் செய்கிறது. சமீபமாக ஒரு Crowd Funding app நிறுவனத்தின் மீது ஏகப்பட்ட புகார்கள் எழுந்து வெளிச்சத்தை பெற்றுள்ளது. அந்த app-யின் பெயர் Fundmelon. நீங்கள் யூடியூபை தொடர்ந்து பார்ப்பவராக இருந்திருந்தால் இந்த Fundmelon பெயர் உங்களுக்கு கண்டிப்பாக பரிச்சயமாக இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம். தமிழ் யூடுப் சேனல்களில் இருக்கும் மிகவும் பிரபலமான நபர்களில் இவர்களுக்கு பிரதான இடமுண்டு. 1...

பெண் ஒரு விலை மதிக்கமுடியாத பொக்கிஷம்..

Image
  என்னை மிகவும் ஈர்த்த புகைப்படம். நானும் முதலில் குழம்பினேன்.கண்டிப்பாக முழுசா படிங்க…!! இந்த புகைப்படத்தைப் பார்த்த பிறகு நீங்கள் நிறைய எதிர்மறை அல்லது தவறான எண்ணங்களை மனதில் வைத்துக் கொள்ளலாம், ஆனால் இந்த புகைப்படத்தின் உண்மையை அறிந்த பிறகு உங்கள் கண்களில் கண்ணீர் வரக்கூடும். ஒரு ஐரோப்பிய நாட்டில் , பெரோ என்னும் பெண்ணின் தந்தையான சிமோன் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டு பட்டிணிக்கு உள்ளாக்கப்பட்டு மரண தண்டணைக்கு ஆளாக்கப்பட்டார். அவர் இறக்கும் வரை சிறையில் வைக்கப்படுவார், மற்றும் அவர் எதையும் சாப்பிடவோ குடிக்கவோ அனுமதிக்கபடமாட்டார். புதிதாகப் பிறந்த குழந்தையின் தாயான அவரது மகள், இறக்கும் வரை தினமும் தனது தந்தையை சந்திக்க அனுமதிக்குமாறு அரசாங்கத்திடம் மன்றாடினார். அவள் அனுமதிக்கப்பட்டாள். அவள் சாப்பிடக்கூடிய எந்தவொரு பொருளையும் கொண்டு வர முடியாதபடி காவலர்களால் சோதனை செய்யப்பட்டாள். தன் தந்தையின் நிலையை தினசரி அப்படி பார்க்க மனம் இல்லாமல் வருந்தினாள். ஒரு அக்கறையுள்ள தாய் பசியுள்ள தன் மகனை எப்படி பார்பாலோ அப்படி பார்த்தால் அவள் அப்பாவின் கண்களில். எனவே, அவரை உயிருடன் ஆக்குவதற்காக, தின...