அலெக்ஸாண்ட்ரியா நூலகம் (Library of Alexandria)

           

           


அலெக்ஸாண்டர் தி க்ரேட் எகிப்த் நதிக்கரை ஓரம் ஒரு ஊரை தன் பெயரிலே நிறுவ திட்டமிட்டு அதற்காக ஒரு கடலோர கிராமத்தை தேர்வு செய்து 343BC இல் அலெக்ஸாண்ட்ரியா என பெயரிட்டார்.. அவரின் இறப்புக்கு பின் டாலமி (Ptolemy) என்பவர் கையில் ஆட்சி சென்றது.. இவரின் காலத்தில் தான் (285BC -246BC) அலெக்ஸாண்ட்ரியா நூலகம் (Library of Alexandria) நிறுவ திட்டமிட்டு படி படியாக வளர்ந்து, ஒரு கட்டத்தில் உலகின் மிக சிறந்த நூல்களை எல்லாம் மொழி பெயர்த்து சிறந்த நூலகமாக விளங்கியுள்ளது.. நூலகத்தின் ஒரு பகுதி 145BC யிலும், மற்றொரு முறை 48BC யிலும் தீக்குள்ளானதாக கூறப்படுகிறது.. இரண்டாவது தீ சம்பவம் ஜூலியஸ் சீசரினால் ஏற்ப்பட்டது எனவும் கூறப்படுகிறது.. பின்னர் நடந்த வெவ்வேறு ஆட்சி மாற்றத்தினால் அந்த நூலகம் மறுபொழிவுபெறவில்லை..

1974இல் அலெக்ஸாண்ட்ரியா யுனிவர்சிடி ஒரு குழு அமைத்து அதே இடத்தில் புதிதாக நூலகம் அமைக்க திட்டமிட்டனர். பின்னர் பிப்லியோதிகா அலெக்ஸாண்ட்ரினா என பெயரிடப்பட்டு 2002 இல் திறக்கப்பட்டது.. இதில் cultural research centre, conference hall, planatorium, art gallery, museum,Taha Hussein Library for the visually impaired, Young People's Library, Children's Library, Multimedia Library, Internet Archive, Nobel Section, and Rare Manuscript and Book Library அணைத்தும் அடங்கியுள்ளது.. நூலகத்தின் வெளி சுவர் granite ஆல் செய்யப்பட்டு அதில் உலகில் உள்ள 120 பழமையான மொழிகளின் எழுத்துக்களும், சின்னங்களும் பொருத்தப்பட்டுள்ளது.. இதில் நம் தமிழ் மொழியில் உள்ள மூன்று எழுத்துக்களும் (உ, ஈ, ணி) உள்ளடக்கம்..
 

நூலகத்தின் வடிவமைப்பும் Cylindrical வடிவிலும், ஒரு பக்கத்தில் இருந்து slanting ஆகவும், under ground இல் சில தளங்கலும், உள்ளே 7அடுக்குகளாகவும் வொவ்வொறு அடுக்கும் வருட வாரியாக மொத்தம் 8மில்லியன் புத்தகங்கள் உள்ளன.. நார்வேவை சேர்ந்த Snøhetta எனும் கட்டிடக்கலை நிறுவனத்தால் கட்டப்பட்டது..



படங்கள்: கூகிள், விக்கிபீடியா..

https://www.cbsnews.com/news/bibliotheca-alexandrina-to-open/

நன்றி..!!!

Comments

Popular posts from this blog

ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!!

முருங்கை கீரை