Posts

Showing posts from January 2, 2022

ப்ராஜெக்ட் இஸபெல்லா (மனிதர்களுக்கும் ஆடுகளுக்கும் நடந்த யுத்தம் )

Image
  1997-ம் ஆண்டு துவங்கிய யுத்தம். இந்த போரில் எதிரிகளை தாக்க மிகவும் தேர்ந்தெடுக்க பட்ட ஸ்னைப்பர்கள், இரக்கமற்ற வான்வழி தாக்குதல்கள் மற்றும் பல மில்லியன் டாலர் கண்காணிப்பு தொழில்நுட்பம் ஆகியவை பயன்படுத்தப்பட்டது.  இவையனைத்தும் ஆடுகளை கொல்ல தான் பயன்படுத்தப்பட்டது. அது தான் கலாபகோசின்(Galápagos) ஆடுகளின் யுத்தம். கலாபகோஸ் தீவு வெறும் 7880 கி.மீ. கொண்ட ஒரு சிறிய தீவு தான் ஆனால் உலகின் மிக அறிய வகை உயிரினங்கள் பலவற்றின் வசிப்பிடமாக உள்ளது. மரின் இக்குண (Marine Iguana) ப்ளூ பியூட்டேட் பூபி (Blue Footed Booby) கலாபோகஸ் ஆமை (Galápogas Tortoise) இது மிகவும் தனித்துவமான ஆமை வகையை சார்ந்தது. இந்த ஆமை இனம் தான் உலகின் பெரிதான ஆமைகளை கொண்டது. சுமார் 200 கிலோ-விற்கு மேல் எடையை கொண்டது. மிக நீண்ட காலம் உயிர் வாழக்கூடிய தன்மையை உடையது. இதோ இந்த ஆமையின் பெயர் ஹாரியேட்(Harriet), 175 வருடம் உயிர் வாழ்ந்துள்ளது. 1990-களில் இந்த கலாபகோஸ் ஆமைகள் ஒரு மிகப்பெரும் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. இது இந்த இனத்தையே முற்றிலும் அழித்துவிட கூடிய அளவிற்கு அபாயகரமானது. அந்த அச்சுறுத்தல் என்னவென்றால் ஆடுகள். ஏ...