அனுபிஸ் . ...பாதாள உலகின் கடவுள்
ஹிந்து மதத்தின் உச்ச காலத்தில் எகிப்து நாட்டின் பாரம்பரிய மதத்தின் ஒரு கடவுள் தான் அனுபிஸ் . பாதாள உலகின் கடவுளும் , எகிப்தின் தர்மதேவனும் இறப்பின் கடவுளும் அவர் தான். அவர் கையில் எப்போதும் ஒரு செங்கோல் நேர்மையாக பாதாள உலகை ஆளவும் , மறு கையில் ஆங்க் என்ற மந்திர சாவியும் வைத்திருப்பார். எகிப்திய கடவுள்களும் , அரசர்களும் அந்த சாவியை வைத்திருப்பார்கள். ஓசிரிஸ் கடவுளுக்கு தன் சகோதரியான ஐசிஸ் தேவதை என்ற மனைவி இருந்தாள். ஆயினும் ஓசிரிஸ் கடவுளுக்கு தன் மற்றொரு சகோதரி நெப்தீஸ் தேவதை மூலம் ஒரு குழந்தை பிறந்தது , அந்த குழந்தைக்கு ஓசிரிஸின் மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. நெப்திஸ் தேவதை தன் கணவன் சேத் கடவுளுக்கு பயந்து அக்குழந்தையை அங்கேயே விட்டு விட்டாள். அக்குழந்தையை சுற்றி நாய்கள் நின்றன. பரிதாபப்பட்டு ஐசிஸ் தேவதை அந்த குழந்தையை எடுத்து அனுபிஸ் என்று பெயரிட்டு வளர்த்தாள். அனுபிஸ் ஐசிஸ் தேவதையின் பாதுகாவலானாகவும் இருந்தான். இவ்விவகாரம் சேத் கடவுளுக்கு தெரிய அவர் ஓசிரிஸ் கடவுளை கொன்று விட...