அனுபிஸ் . ...பாதாள உலகின் கடவுள்

        ஹிந்து மதத்தின் உச்ச காலத்தில் எகிப்து நாட்டின் பாரம்பரிய மதத்தின் ஒரு கடவுள் தான் அனுபிஸ் . பாதாள உலகின் கடவுளும் , எகிப்தின் தர்மதேவனும் இறப்பின் கடவுளும் அவர் தான். அவர் கையில் எப்போதும் ஒரு செங்கோல் நேர்மையாக பாதாள உலகை ஆளவும் , மறு கையில் ஆங்க் என்ற மந்திர சாவியும் வைத்திருப்பார். எகிப்திய கடவுள்களும் , அரசர்களும் அந்த சாவியை வைத்திருப்பார்கள்.


ஓசிரிஸ் கடவுளுக்கு தன் சகோதரியான ஐசிஸ் தேவதை என்ற மனைவி இருந்தாள். ஆயினும் ஓசிரிஸ் கடவுளுக்கு தன் மற்றொரு சகோதரி நெப்தீஸ் தேவதை மூலம் ஒரு குழந்தை பிறந்தது , அந்த குழந்தைக்கு ஓசிரிஸின் மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. நெப்திஸ் தேவதை தன் கணவன் சேத் கடவுளுக்கு பயந்து அக்குழந்தையை அங்கேயே விட்டு விட்டாள். அக்குழந்தையை சுற்றி நாய்கள் நின்றன. பரிதாபப்பட்டு ஐசிஸ் தேவதை அந்த குழந்தையை எடுத்து அனுபிஸ் என்று பெயரிட்டு வளர்த்தாள். அனுபிஸ் ஐசிஸ் தேவதையின் பாதுகாவலானாகவும் இருந்தான்.

இவ்விவகாரம் சேத் கடவுளுக்கு தெரிய அவர் ஓசிரிஸ் கடவுளை கொன்று விட்டார். ஓசிரிஸின் அவயங்கள் அனுபிஸிற்கு பொருத்தப்பட்டு அவர் பாதாள உலகின் கடவுள் மற்றும் தர்மதேவன் ஆக்கப்பட்டார். அன்புத் அவரது மனைவி. நூபிய பாலைவனத்தில் நெப்திஸ் அனுபிஸின் மனைவி. இவர் சூரியன் ஆகிய ரா என்கிற உச்ச கடவுளுக்கும் நெப்திஸ் தேவதைக்கும் பிறந்த மகன் என்றும் கூறுவர்.

எகிப்திய புராணங்களில் சகோதரிகளை மனைவி ஆக்கியது போல் எழுதியிருப்பார்கள் .மகள் /மகன்களை மணந்த கடவுள்களும் அங்கு உண்டு. எகிப்தில் இடத்திற்கு தகுந்தவாறு கதைகள் மாறுகின்றன. சகோதரி மனைவி ஆகிறார் , மகள் ஆகிறாள் , தாய் ஆகிறாள். பெண் தேவதைகளுக்கு பல கணவர்கள் , அவர்கள் உடன் பிறந்தவர்களாகவும் உள்ளனர். என்ன காறித் துப்பலாம் என்று நினைக்கிறீர்களா?

இது உண்மையா அல்லது பிரிட்டிஷ்காரர்கள் காழ்ப்புணர்ச்சியில் எழுதியுள்ளார்களா என்பது தெரியாது. இந்த புராணங்களை வெளிப்படுத்தியவர்கள் பிரிட்டிஷ்காரர்கள். அவர்கள் அனைவரும் ஆராய்ச்சி செய்த குறிப்பிட்ட மாதங்களில் இறந்துவிட்டனர்.


எகிப்தியர்கள் உலகின் பிரம்மாண்ட கோவில்களை கட்டிய காலத்தில் யூத மதம் கூட தோன்றவில்லை . இஸ்ரேலியர்கள் ஆடும் , அரேபியர்கள் ஒட்டகமும் மேய்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் நாடோடிகளாய் இருந்தனர். எகிப்தியர்களோ உச்ச நாகரீகம் பெற்றிருந்தனர்.


குள்ள நரியின் முகமும் மனித உடலும் கொண்டவரே அனுபிஸ். அறிவியல்படி குள்ளநரி முகமூடி அணியும் மனிதர் என்று கூட சொல்லலாம். எகிப்திய கடவுளர்களுக்கு மனித உடலும் மிருக முகமூடிகளும் பொருத்தப்பட்டிருக்கும். எகிப்திய அரசர்கள் கூட தங்க மூகமூடிகளை அணிந்து இருந்தனர்.


இறப்பின் கடவுள் அனுபிஸ் . மனிதர்கள் இறந்த பின் அவர்களை மம்மியாக்கும் பணிகளில் ஈடுபடுவார். மனித உடலின் அங்கங்கள் எடுக்கப்பட்டு ஜாடியில் அடைக்கப்படும். இந்த வேலையை எகிப்தியர்கள் அனுபிஸ் மூகமூடிகளை அணிந்து அவரின் சார்பாக செய்வார்கள். இறந்த உடலை சுற்றி அனுபிஸ் சேவகர்களான மனிதர்கள் மம்மியாக்கும் பணிகளில் ஈடுபடுவார்கள். அதன் அனுபிஸ் கடவுளை வேண்டுவார்கள். மம்மிகளையும் கல்லறைகளையும் பாதுகாக்கும் பணி அனுபிஸ் உடையது. இன்று இறுதிகாரியங்கள் நடக்கும் இடத்தில் நரிகள் இருப்பதைக் காணலாம் .


அனுபிஸ் கடவுள் இறந்தவர்களின் உடலின் இதயத்தை ஒரு தராசில் வைத்து எடை போடுவார். அது அவர்கள் செய்த நன்மை மற்றும் தீமைகளுக்கு ஏற்ப சொர்க்கத்தையும் நரகத்தையும் தீர்மானிக்கும் .

அனுபிஸ் கடவுள் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு கடவுளாகவும் அவர் வெல்ல முடியாதவர் என்றும் அதர்மங்களை அழிக்கக் கூடியவர் என்றும் நம்புகிறார்கள் . எகிப்து பிரமீடுகளில் அதிக சிற்பங்களும் ஓவியங்களும் இவருக்கு தான் உள்ளன.


Comments

Popular posts from this blog

அலெக்ஸாண்ட்ரியா நூலகம் (Library of Alexandria)

ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!!

முருங்கை கீரை