2012 உலகம் அழியுமா? உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு! part 7
நமது வேதங்களிலும் புராணங்களிலும், பழைய நூல்களிலும் உள்ள குறிப்புகளை வைத்து, பரத்வாஜ முனிவரால் எழுதப்பட்டது என்று கருதப்படும் நூல் ஒன்று, ‘சுப்பராயா சாஸ்திரி’ (Subbaraya Sastry) என்பவரால் தொகுக்கப்பட்டது. அந்த நூலின் பெயர் ‘வைமானிக சாஸ்திரம்’ (Vymaanika Shaastra – விமான சாத்திரம்). சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட அந்த நூல், 1918 ம் ஆண்டளவில் தொகுக்கப்பட்டது. பின்னர் அதை ஆங்கிலத்தில் ஜோஸ்யர் (Josyer) என்பவர் மொழிபெயர்த்தார். பண்டைய காலங்களிலேயே இந்துக்கள் விமானங்களைப் பற்றியும், அவற்றைச் செய்யும் முறைகளைப் பற்றியும் கூறியது, அதில் விளக்கிச் சொல்லப்பட்டிருக்கிறது. மொத்தமாக நான்கு வகை விமானங்களை இந்துக்கள் பாவித்தார்கள் என்றும் அதில் சொல்லப் பட்டிருக்கின்றது. 1.சகுன விமானம் (Shakuna Vimana), 2. சுந்தர விமானம் (Sundara Vimana), 3. ருக்ம விமானம் (Rukma Vimana), 4. திரிபுரா விமானம் (Tripura Vimana) என்னும் நான்கு வகை விமானங்கள்தான் அவை. அவற்றைப் பற்றி நான் சொற்களால் புரியவைப்பதை விடப் படங்களைப் பார்க்கும்போது நீங்கள் அதிகம் புரிந்து கொள்வீர்கள். அவற்றையும் அவை சம்பந்தப்பட்ட படங்களையும் இ...