Posts

Showing posts from September, 2021

மிரளவைக்கும் பழங்குடி மக்களின் பழக்க வழக்கங்கள்..

Image
சீ.. சீ.. ச்சீவாகள் ச்சீவா பழங்குடிகள் மலாவி பகுதிகளில் வாழ்கின்றனர். அவர்களின் புனித தலத்திற்கு இறந்தவரது உடலை எடுத்துச் சென்று, சடலத்தின் தலையை வெட்டி எடுத்தபின் உடலின் உட்பகுதியை நீரால் நன்கு கழுவுகின்றனர். பின் அந்த நீரில் சமையல் செய்து உண்கின்றனர். ஃபுலானி இன மக்கள்: ஆண்கள் தங்களுக்கான மனைவியை அடைவதற்கு முன் ஒரு சடங்கு நடத்தப்படுகிறது.அதில் அவனை அவ்வினத்தை சேர்ந்த ஆண்கள் சாட்டையால் அடிக்கின்றனர். அதை தாங்கிக் கொள்பவனுக்கே பெண் தரப்படும்..இல்லையெனில் மணமகள் கிடையாது.சில நேரங்களில் மரணமுறும் அபாயங்களும் உண்டு. இரவில் கிரிவோல் என்ற நடன திருவிழாவை நடத்துகின்றனர் உடாப் பழங்குடியினர். அச்சமயத்தில் எந்த பெண்ணாக இருந்தாலும் அது திருமணமான பெண்ணாக இருந்தாலும் சரி, உடாப் ஆண்மகன் தூக்கி சென்று குடும்பம் நடத்தலாம். மசாய் பழங்குடியினர் கென்யா மற்றும் தான்சானியா பகுதிகளில் வாழ்கிறார்கள். நாமெல்லாம் பூ தூவியோ, பூங்கொத்து கொடுத்தோ தான் மற்றவர்களை வரவேற்போம். மசாய்கள் அநியாயத்திற்கும் வித்தியாசமானவர்கள். நீங்கள் அவர்களது இருப்பிடங்களுக்கு சென்றால் உங்களை எச்சில் துப்பி வரவேற்பர். இது அவர்கள் மற்றவர...

உலகத்தில் மனிதனின் கால் பதியாத இடம்

Image
  ம னிதன் நிலவுக்குப் போகிறான். செவ்வாய் கிரகத்துக்குக் கூட போகப்போகிறான். இப்படி பூமியை விட்டு பல லட்சம், பல கோடி கி.மீ. தொலைவில் உள்ள கிரகங்களுக்கே செல்லபோகும் மனிதானால் பூமியில் உள்ள ஒரு இடத்துக்கு மட்டும் போகவே முடியாது. அப்படியே போனாலும் அங்கிருக்கும் நிலத்தில் காலடி வைக்க முடியாது. வைத்தால் கால் இருக்காது..! அந்த இடத்தின் பெயர்  'மரியானா ட்ரென்ச்' . இதனை  'சேலஞ்சர் டீப்'  என்றும் அழைக்கிறார்கள். இது ஒரு கடல் பகுதி. உலகின் மிக ஆழமான கடற்பகுதி இதுதான். பொதுவாக கடலின் சராசரி ஆழம் 4 கி.மீ. என்றால், இங்கோ ஆழம் 10,902 மீட்டர். அதாவது 11 கி.மீ.க்கு கொஞ்சம் குறைவான ஆழம். நமது எவரெஸ்ட் மலையை அப்படியே தூக்கி உள்ளே போட்டால் கூட அந்த மலை கடலின் மட்டத்தில் இருந்து 3 கி.மீ. ஆழத்தில்தான் கிடக்கும். அவ்வளவு ஆழமான பகுதி. ஆழம் இருந்தால் என்ன மனிதன்தான் எவ்வளவு ஆழத்துக்கும் போக முடியுமே? என்று கேட்கலாம். பொதுவாக மனிதனின் உடல் ஓரளவு அழுத்தத்தை மட்டுமே தாங்கும். நிலத்தில் வாழும் நாமும் தொடர்ந்து அழுத்தத்தை தாங்கிக்கொண்டுதான் இருக்கிறோம். அது காற்றின் அழுத்தம். காற்று ஒரு செண்டி மீட...