மிரளவைக்கும் பழங்குடி மக்களின் பழக்க வழக்கங்கள்..

சீ.. சீ.. ச்சீவாகள்


ச்சீவா பழங்குடிகள் மலாவி பகுதிகளில் வாழ்கின்றனர்.

அவர்களின் புனித தலத்திற்கு இறந்தவரது உடலை எடுத்துச் சென்று, சடலத்தின் தலையை வெட்டி எடுத்தபின் உடலின் உட்பகுதியை நீரால் நன்கு கழுவுகின்றனர். பின் அந்த நீரில் சமையல் செய்து உண்கின்றனர்.

ஃபுலானி இன மக்கள்:

ஆண்கள் தங்களுக்கான மனைவியை அடைவதற்கு முன் ஒரு சடங்கு நடத்தப்படுகிறது.அதில் அவனை அவ்வினத்தை சேர்ந்த ஆண்கள் சாட்டையால் அடிக்கின்றனர். அதை தாங்கிக் கொள்பவனுக்கே பெண் தரப்படும்..இல்லையெனில் மணமகள் கிடையாது.சில நேரங்களில் மரணமுறும் அபாயங்களும் உண்டு.


இரவில் கிரிவோல் என்ற நடன திருவிழாவை நடத்துகின்றனர் உடாப் பழங்குடியினர். அச்சமயத்தில் எந்த பெண்ணாக இருந்தாலும் அது திருமணமான பெண்ணாக இருந்தாலும் சரி, உடாப் ஆண்மகன் தூக்கி சென்று குடும்பம் நடத்தலாம்.


மசாய் பழங்குடியினர் கென்யா

மற்றும் தான்சானியா பகுதிகளில் வாழ்கிறார்கள்.

நாமெல்லாம் பூ தூவியோ, பூங்கொத்து கொடுத்தோ தான் மற்றவர்களை வரவேற்போம். மசாய்கள் அநியாயத்திற்கும் வித்தியாசமானவர்கள்.

நீங்கள் அவர்களது இருப்பிடங்களுக்கு சென்றால் உங்களை எச்சில் துப்பி வரவேற்பர். இது அவர்கள் மற்றவர்களுக்கு கொடுக்கும் மரியாதையாம். புதிதாக பிறந்த குழந்தையின் முகத்தில் எச்சிலை துப்பியே வாழ்த்துகிறார்கள்.

தங்கள் இனத்து பெரியவர்களை கண்டால் கையில் காரி துப்பிகொண்ட பின் கைகுலுக்குகிறார்கள். விலங்குகளின் ரத்தத்தைக் குடிப்பது என்றால் இவர்களுக்கு கொள்ளை பிரியம்.


உகண்டாவைச் சேர்ந்த பன்யன் கோல் பழங்குடியினரிடம் ஒரு வினோத பழக்கம் இருந்திருக்கிறது. அதாவது மணப்பெண்ணை அடைவதற்கு முன் மணமகளின் தாயாருடன் உடலுறவு கொண்டு தனது ஆண்மையை நிரூபிக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

அலெக்ஸாண்ட்ரியா நூலகம் (Library of Alexandria)

ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!!

முருங்கை கீரை