பெண்கள் அணியும் ஆபரணமும் அவற்றின் சிறப்பும்?
நகைகள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக உருவானவை, அதிகமாகன ஆபரணங்கள் தங்கத்தில் அணியப்படுவதன் காரணம் இந்தியா போன்ற வெப்பமான நாடுகளில் இந்த வெப்பத்தை குறைத்து,உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் ஏற்றது. அத்துடன் தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது. இவ்வாறு அணிவதன் சிறப்பு.. கொலுசு : பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம். இதற்கு காரணம் தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால் நாம் காலில் அணியும் நகைகள் தங்கத்தில் அணிவதில்லை. அத்துடன் வெள்ளி நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும். வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுகொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது. மெட்டி: மெட்டி என்பது திருமணமான பெண்கள் மட்டும் அணியும் ஆபரணம். பெண்களது கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் விரல்களிலேயே இருக்கிறது.வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்த சக்தி கால் ந...