Posts

Showing posts from 2022

பொதிகை மலை காடுகள்

Image
 அலுவலகம் , வேலை ,தொலைபேசி இவைகளில் இயந்திர மயமான வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் ஒரு நாலாவது இவைகளை புறம் தள்ளி இயற்கையோடு வாழ்ந்து பாப்போம் ..இந்த எண்ணத்தின் வெளிப்பாடு பொதிகை மலை நோக்கி ஒரு பயணம் .. காலை 9 மணிக்கு திருநெல்வேலி வீரவநல்லூரில் தொடங்கிய பயணம் பாபநாசம் நோக்கி தொடந்து மேற்கு தொடர்ச்சி மலையின் பொதிகை மலை அடிவாரத்துக்கு 11மணியளவில் அடைத்தோம் .. அன்று மழை கொஞ்சம் குறைவு வானம் வெளுத்து தான் காணப்பட்டது. அடிவாரத்தில் வன பாதுகாவலர்களின் சோதனைகளை முடித்து கொண்டு மெள்  நோக்கி எங்கள்  பயணம் தொடங்கியது .. பூமி தாய்க்கு பச்சை நிற கம்பளம் விருக்கும் காடுகள் ,சில்லென்ற காற்று , நிசப்தமான காட்டு பாதையில் ஆங்காங்கே பறவைகளின் சப்தம் , பூத்து குலுங்கும் மலர்கள், வெள்ளி சரிகை தரித்து ஓடும் சிறு நெடு ஆறுகள் ,பார்ப்பவை எல்லாம் மனதை மயக்கும் பொதிகை மலை  வர்ணிக்க வார்த்தை இல்லை இந்த வர்ணக்கோலம் பூண்ட பொதிகை மலை அன்னையின் அழகை .. மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்  காடும் உடையது அரண் .என்று திருவள்ளுவர் நமக்கான அரண் என்ன என்பதை அழகாக குறிப்பிட்டு இருக்கிறார் .க...

அன்னமும்+பாலும்

Image
  அன்னப்பறவைகள் உண்மையாகவே நீரோடு கலந்த பாலில் இருந்து பாலை மட்டும் தனியே பிரித்து பருகுமா? இவ்வளவுநாளா எந்த பள்ளிக்கூடத்திலயும் சொல்லித்தரலயே. யாரோ புத்திசாலி ஆதாரப்பூர்வமாக சொல்லியிருக்கிறார். அன்னமும்+பாலும் அன்னம் பாலையும் தண்ணீரையும் பிரிக்கும் என்பது நமக்குப் பள்ளிக் கூடத்தில் சொல்லிக் கொடுக்கப்பட்ட விஷயம். ஏதோ அன்னப்பறவை என்று ஒன்று அந்தக்காலத்தில் இருந்ததாகவும், அது தண்ணீர் கலந்த பாலை வைத்தால் தண்ணீரைப் பிரித்து அப்படியே பாலை மட்டும் உறிஞ்சி விடும் என்றும் சொல்லி இருக்கிறார்கள். நான் சில மிருகக் காட்சி சாலைகளில் அன்னப் பறவையைப் பார்த்தேன். அவற்றைப் பராமரிப்பவரிடம் இந்த அன்னத்திற்குப் பால் வைக்கிறீர்களா என்று கேட்டபோது, அவர் கிண்டலாகச் சிரித்தார். அன்னம் நீரில் உள்ள மீன்களையும் புழு பூச்சிகளையும் தின்று வசிக்கும் ஒரு உயிரினம் என்றும், பாலைச் சாப்பிடாது என்றும் தெரிவித்தார். எனக்கு ஒரு குழப்பம். நம் முன்னோர்கள் தப்பாகவா சொல்லியிருப்பார்கள் என்று. சில நாட்கள் இதைப் பற்றியே சிந்தித்தேன். ஒரு நாள் சாப்பிடும்போது தோன்றியது அடடா, *அன்னம் என்பதற்கு* *அரிசிசாதம்* என்றும் ஒரு பொருள் ...

சதுரங்கப் போட்டியில் இராணிக்கு இவ்வளவு அதிகாரம் வந்ததன் வரலாறு ..

Image
  இந்திய சதுரங்க போட்டி இந்திய போர்முறையிலிருந்து உருவாகி இருக்கிறது. அதாவது பாரசீகர்களும், முகலாயர்களும், ஆப்கன்களும் அஞ்சிய யானை படை,காலாட்படை, சிப்பாய்வீரர்கள், மந்திரி மற்றும் முதன்மை ஆலோசகர்கள் கொண்ட ஒரு முறை. இதில் ராணிக்கு பெரும் பங்கு இல்லை. அப்படி என்றால் இந்தியாவில் ராணியே இல்லை என்கிறீர்களா? ஏனில்லை?ஜான்சி ராணி , ருத்ரமாதேவி வேலு நாச்சியார் போன்றவர்கள் எல்லாம் ராணிகளாக இருந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 5-ம் நூற்றாண்டு வாக்கில்தான் இந்தியாவில் சதுரங்கம் உருவாகிய விளையாடிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். சதுரங்கா, வல்லாட்டம் என செஸ் போட்டிக்கு அப்போது சில பெயர்களும் இருந்திருக்கிறது. செஸ் உருவானது என்னமோ இந்தியாவில் தான் என்றாலும் கிட்டத்தட்ட அப்போது மக்கள் விளையாடுவதற்கு போட்டியில் ராணி என்ற காயே இல்லை. ராணி இல்லாமல் சுமார் 400க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக இந்தியாவில் செஸ் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்கள். முதன்மை ஆலோசகர் அப்போ ராணிக்கு பதிலாக எந்த காய வைத்து விளையாடினார்கள் என்றால் ராஜாவுக்கு பக்கத்தில் வீசர்( (Viezer) எனப்படும் அரசு ஆலோசகர் என்ற காய் இருந...

நமது குழந்தைகளின் வாழ்க்கை .. நம் கண்முண்ணே அழியவிடலாமா ?

Image
 இதெல்லாம் சாப்பிடலாமா ? சாப்பிடக்கூடாதா ? சாப்பிட்டால் என்ன வாகும்  அருமையான விழிப்புணர்வு காணொளி .. தவறாமல் பார்க்கவும் . https://www.youtube.com/watch?v=Lmuv7kWnar8

Four Pest Campaign

Image
  சீன நாட்டில் 1958 ஆம் ஆண்டு , மாவோ ஸிடாங்((Mao Zedong) என்பவரால்  Four Pest Campaign  என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது அதாவது,எலி,ஈ,கொசு மற்றும் குருவிகளை அழிக்கும் திட்டம். காரணம் , எலிகளால் பிளேக் நோய் , கொசுக்களால் மலேரியா நோய், ஈக்களால் காற்றில் பரவக்கூடிய நோய்கள் மற்றும் தானிய வகைகள் ,பழங்களை குருவிகள் உண்ணுவதால் உற்பத்தி பாதிப்பு இக்காரணங்களால்,இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது . எலிகளின் வால் ,இறந்த ஈக்கள் ,கொசுக்கள் மற்றும் குருவிகளை கொண்டு வருவப்பவர்களுக்கு தக்க சன்மானம் அளிக்கப்பட்டது. மக்கள் குருவிகளை கொன்று, கூடு,முட்டைகளை அழித்தனர். இந்த திட்டத்தால் 1.5 பில்லியன் எலிகள்,1 பில்லியன் குருவிகள்,220 மில்லியன் பௌண்ட்ஸ் ஈக்கள் ,24 மில்லியன் பௌண்ட்ஸ் கொசுக்கள் அழிக்கப்பட்டன. திட்டம் வெற்றிபெற்றதாக நினைத்து கொண்டிருந்த போது ,இரண்டு வருடங்களில் இதன் தாக்கம் வெளிப்பட ஆரம்பித்தது. குருவிகளின் மறைவால், வயல்வெளிகளில் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகமாகி ,பல்லாயிரம் கிலோ உணவு தானியங்களை வேட்டையாடியது.உணவு உற்பத்தி, விளைச்சல் முன்பிருந்தததை விட பல பல மடங்கு குறைந்தது . நாட...

அரசியலில் அதிகபட்ச நேர்மையானவர் ...

Image
  தமிழகத்தில் 12 துறைகளுக்கு அமைச்சராக இருந்தவர் திரு.கக்கன் ! இந்திய அரசியல் சாசன அவையின் உறுப்பினர். இந்தியாவின் முதல் நாடாளுமன்றத்தின் உறுப்பினர், கோயில் நுழைவுப் போராட்ட வீரர், காங்கிரஸ் கட்சித் தலைவர், தமிழக சட்டமன்ற உறுப்பினர். காமராஜர் தலைமையில் அமைந்த காங்கிரஸ் ஆட்சியில் 1957 முதல் 1967 வரை 10 ஆண்டுகள் பொதுப் பணித்துறை, காவல்துறை, சிறைத்துறை, அறநிலையத்துறை உள்ளிட்ட  12 முக்கிய துறைகளுக்கு அமைச்சராக இருந்தார் !   இப்படி பல பதவிகளை வகித்தாலும், எளிமையாகவே வாழ்ந்து மறைந்த தமிழகத் தலைவர். இப்படியொருவர் தமிழகத்தில் ரத்தமும் சதையுமாக இயங்கியிருக்கிறார் என்று சொன்னால் அதை இன்றைய தலைமுறையினர் நம்புவார்களா என்பதே சிரமம்தான். மதுரை மேலூர் அருகே தும்பைப் பட்டி கிராமத்தில் உள்ளூர் பூசாரிக் குடும்பத்தில் பிறந்தவர் கக்கன். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர். எஸ்.எஸ்.எல்.சிக்குப் பிறகு படிப்பைத் தொடரமுடிய வில்லை. ஆனால் மதுரை சுதந்திரப் போராட்ட வீரரும் காங்கிரஸ் தலைவருமான திரு.அ. வைத்தியநாத ஐயரின் அறிமுகம் கக்கனுக்குக் கிடைத்தது. 1934ல் மதுரைக்கு வந்த மகாத்மா காந்தியைச் சந்தித்த க...

அனுபிஸ் . ...பாதாள உலகின் கடவுள்

Image
         ஹிந்து மதத்தின் உச்ச காலத்தில் எகிப்து நாட்டின் பாரம்பரிய மதத்தின் ஒரு கடவுள் தான்  அனுபிஸ்  .  பாதாள உலகின் கடவுளும் , எகிப்தின் தர்மதேவனும் இறப்பின் கடவுளும் அவர் தான்.  அவர் கையில் எப்போதும் ஒரு செங்கோல் நேர்மையாக பாதாள உலகை ஆளவும் , மறு கையில்  ஆங்க்  என்ற மந்திர சாவியும் வைத்திருப்பார். எகிப்திய கடவுள்களும் , அரசர்களும் அந்த சாவியை வைத்திருப்பார்கள். ஓசிரிஸ்   கடவுளுக்கு தன் சகோதரியான  ஐசிஸ் தேவதை  என்ற மனைவி இருந்தாள். ஆயினும் ஓசிரிஸ் கடவுளுக்கு தன் மற்றொரு  சகோதரி நெப்தீஸ் தேவதை  மூலம் ஒரு குழந்தை பிறந்தது , அந்த குழந்தைக்கு ஓசிரிஸின் மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. நெப்திஸ் தேவதை தன்  கணவன் சேத் கடவுளுக்கு  பயந்து அக்குழந்தையை அங்கேயே விட்டு விட்டாள். அக்குழந்தையை சுற்றி நாய்கள் நின்றன. பரிதாபப்பட்டு ஐசிஸ் தேவதை அந்த குழந்தையை எடுத்து அனுபிஸ் என்று பெயரிட்டு வளர்த்தாள். அனுபிஸ் ஐசிஸ் தேவதையின் பாதுகாவலானாகவும் இருந்தான். இவ்விவகாரம் சேத் கடவுளுக்கு தெரிய அவர் ஓசிரிஸ் கடவுளை கொன்று விட...

திருமணத்தின் வரலாறு

Image
     திருமணம் என்பது குறைந்த பட்சம் 4,350 ஆண்டுகள் பழமையானது என்று நமக்கு கிடைக்கப்பெற்ற சான்றுகள் கூறுகின்றன. ஆனால் அதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே திருமணம் செய்யும் வழக்கம் தோன்றியிருக்கலாம் என்று பெரும்பாலான மானுடவியலாளர்கள் நம்புகிறார்கள். அவ்வாறு நடந்த திருமணங்களின் முதன்மை நோக்கங்கள் - ஒரு ஆணை குறைந்த பட்சம் ஒரு பெண்ணுடனாவது பிணைப்பதும், இந்த பந்தத்தில் பிறக்கும் குழந்தைகள் உண்மையிலேயே அந்த ஆணுடைய உயிரியல் வாரிசுகள் தான் என்பதை உறுதிப்படுத்துவதும். காதலோ, தனக்கு ஒரு வாழ்க்கை துணை வேண்டும் என்பதோ இவற்றின் நோக்கமாக இல்லை. "சந்ததிகளை உருவாக்க என் மகளை இன்ன விலைக்கு தாரை வார்த்து கொடுக்கிறேன்" என்று தந்தை சட்டப்படி மணமகனோடு ஒப்பந்தம் செய்வார். மணப்பெண்ணின் விலையை மாப்பிள்ளை, பெண்ணின் தந்தைக்கு தருவது சில நாகரீகங்களிலும், மோதிரமாக செய்து மணப்பெண்ணின் விரலில் அணிவிப்பது சில நாகரீகங்களிலும் வழக்கமாக இருந்தது. இந்த ஒப்பந்தத்தை மீறினால் பெண்ணின் தந்தைக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு திருமணம் செய்த தன் மனைவியை, பெற்ற பிள்ளைகளை மற்றவர்களுக்கு விற்கவும் க...