சதுரங்கப் போட்டியில் இராணிக்கு இவ்வளவு அதிகாரம் வந்ததன் வரலாறு ..

 இந்திய சதுரங்க போட்டி இந்திய போர்முறையிலிருந்து உருவாகி இருக்கிறது. அதாவது பாரசீகர்களும், முகலாயர்களும், ஆப்கன்களும் அஞ்சிய யானை படை,காலாட்படை, சிப்பாய்வீரர்கள், மந்திரி மற்றும் முதன்மை ஆலோசகர்கள் கொண்ட ஒரு முறை. இதில் ராணிக்கு பெரும் பங்கு இல்லை.

அப்படி என்றால் இந்தியாவில் ராணியே இல்லை என்கிறீர்களா? ஏனில்லை?ஜான்சி ராணி , ருத்ரமாதேவி வேலு நாச்சியார் போன்றவர்கள் எல்லாம் ராணிகளாக இருந்திருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 5-ம் நூற்றாண்டு வாக்கில்தான் இந்தியாவில் சதுரங்கம் உருவாகிய விளையாடிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். சதுரங்கா, வல்லாட்டம் என செஸ் போட்டிக்கு அப்போது சில பெயர்களும் இருந்திருக்கிறது.

செஸ் உருவானது என்னமோ இந்தியாவில் தான் என்றாலும் கிட்டத்தட்ட அப்போது மக்கள் விளையாடுவதற்கு போட்டியில் ராணி என்ற காயே இல்லை. ராணி இல்லாமல் சுமார் 400க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக இந்தியாவில் செஸ் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

முதன்மை ஆலோசகர்

அப்போ ராணிக்கு பதிலாக எந்த காய வைத்து விளையாடினார்கள் என்றால் ராஜாவுக்கு பக்கத்தில் வீசர்( (Viezer) எனப்படும் அரசு ஆலோசகர் என்ற காய் இருந்திருக்கிறது. இந்த ஆலோசகர் பதவி ஒன்னும் இல்ல அப்போது இந்திய சமூகத்தில் உள்ள மன்னர்களுக்கு உண்டு தேர்வு மன்னர்கள் முதல் குறுநில மன்னர்கள் வரை முதன்மை ஆலோசகர்களாக இருந்தார்கள் அவர்களின் ஆலோசனைப்படி தான் ராஜா செயல்படுவார்.

எந்த விவகாரம் என்றாலும் ஆலோசகரை கேட்டு தான் அனைவரும் செய்ய வேண்டும். கிட்டத்தட்ட ராணிக்கு பதில் இந்தியாவில் அந்த ஆலோசகர் தான் இருந்திருக்கிறார். செஸ் போர்டிலும் முதன்மை ஆலோசகர் தான் இருந்திருக்கிறார். அவருக்கு செஸ் ஆட்டத்தில் ஒரு அடி மட்டுமே நகரும் அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மந்திரி செல்லும் குறுக்குவெட்டில் ஒரு அடி மட்டும் முன்னே பின்னே முதன்மை ஆலோசகர் நகரலாம். ராஜாவை பாதுகாப்பதே முதன்மை ஆலோசகரின் பணியாக நிஜத்திலும் இருந்து வந்தது.

பின்னர் நம்மிடம் இருந்து செஸ் ஆட்டம் பெர்ஷியா, ஆப்கன், அரேபியா ,ஐரோப்பா, ரஷ்யா, பிரான்ஸ் என உலகம் முழுவதும் பரவியது இந்தியாவுடன் வணிகம் செய்ய வந்த பேசிய மூலம் தான் முதலில் தொடங்கி, அங்கிருந்து அப்படியே பல நாடுகளுக்கு செஸ் பரவி இருக்கிறது. 'செஸ்' என்ற இந்த சொல் கூட பெர்சியாவில் இருந்து உருவாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

செக் மேட்

ஏனெனில், பெர்சிய நாட்டினர் இந்த போட்டியை' ஷா' (Shah)என்று அழைத்தனர். அப்படி என்றால் மன்னர் என்று அர்த்தம். அந்த சொல் நாளடைவில் மருவி 'செஸ்' Chess என உருமாறி இருக்கிறது.பெர்சிய மொழியில் ' Shah Mat' என்றால் மன்னரை காப்பாற்ற முடியவில்லை என்று அர்த்தம். அந்தச் சொற்றொடர் தான் இன்ற உலக மக்களால் செக்மேட் ('Check Mate ')எனப்படுகிறது.

விதிமுறைகள் மாற்றம்

இந்தியாவில் இருந்து போன செஸ் வடிவ முறை அந்தந்த நாடுகளுக்கு ஏற்றார் போல் மாறியது. அந்தந்த நாடுகளின் பாரம்பரியம், கலாச்சாரம் வகைக்கு ஏற்ப செஸ் ஆட்டத்தின் விதிமுறைகளும் அதிகாரங்களும் மாறின. ஆனாலும் வடிவமுறையை கொஞ்சம் மட்டும் மாற்றி மாற்றி ஆடி இருக்கிறார்கள். ஐரோப்பாவுக்குள் எப்போது செஸ் சென்றதோ, அதன் அடித்தளத்தையே மாற்றி விட்டார்கள்.

'அதென்ன! ராஜாவுக்கு பக்கத்தில் சம்பந்தமில்லாத வீசர் (Viezer) எனப்படும் முதன்மை ஆலோசகர்? எதற்காக அது?அந்த பதவியை அடியோடு தூக்குங்கள்' என்று கூறியதோடு ராணி என்ற புதிய பதவியை ஐரோப்பியர்கள் உருவாக்கினார்கள். செஸ் வடிவ முறையில் கொண்டுவரப்பட்ட பெரும் மாற்றம் ஐரோப்பியர்களிடத்திலிருந்தே தோன்றியிருக்கிறது. Viezer எனப்படும் முதன்மை ஆலோசகருக்கு, ராணி என்ற புதிய பதவியை உருவாக்கியதன் மூலம் உலக அரசியல் வடிவில் ஐரோப்பா வைத்த 'செக்- மேட் 'அது..!

முக்கிய காரணம்

செஸ் விளையாட்டு ஐரோப்பாவிற்குள் வந்த காலகட்டத்தில் பெரும்பாலும் ஐரோப்பியாவில் மன்னர்களை விட ராணிகளே அதிகம் ஆண்டு கொண்டு இருந்தனர் .சொல்லப்போனால் ஐரோப்பாவில் மன்னர்களை காட்டிலும் ராணிகளுக்கே செல்வாக்கு அதிகம். அந்த நாடுகளின் பண்பாடு அது. ஐரோப்பாவில் ராணி தான் ராஜாவிற்கு அடுத்து .இந்தியாவில் ஆண் வாரிசு பிறக்கும் வரை ராஜா காத்துக் கொண்டிருப்பார் .அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இல்லை எனில் அடுத்த தலைமுறைப் பதவிகளும் ஆண்களையே சென்று சேரும். ஆனால் ஐரோப்பாவில் அப்படி இல்லை .ஆண் வாரிசு இல்லாமல் ராஜா உயிரிழந்து விட்டால் அவரது மகள் ராணி ஆவார். மகளின் கணவர் வெறும் இளவரசர் மட்டுமே .ராஜா கிடையாது. இப்போதும் இங்கிலாந்தில் ராணியாக எலிசபெத் மட்டுமே 70 ஆண்டுகளாக பதவியில் உள்ளார். இந்த மாதிரியான சூழலில் ஐரோப்பாவில் ராணி இல்லாத செஸ் போர்டை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே ராணி என்ற புதிய பதவியை உருவாக்கினார்கள்.

ஆனால் அதிகாரம் என்னமோ வீசர் எனப்படும் முதன்மை ஆலோசகரின் அதே அதிகாரம் தான் வழங்கப்பட்டது. Diagnol- ஆக ஒரு கட்டம் மட்டுமே ராணியால் நகர முடியும் .அப்படியே போய்க்கொண்ட செஸ் ஆட்டம் ,15 ஆம் நூற்றாண்டில், காஸ்டைலை (தற்போதைய ஸ்பெயின்) ஆண்ட முதலாம் இசபெல்லா (Isabella of Castile)காலத்தில் தான் ராணி தனது எல்லையற்ற அதிகாரத்தை பெற்றது .

முதலாம் இசபெல்லா ராணியின் காலகட்டத்தில் நடந்த மாற்றங்கள் உலகம் அறிந்தவை. ஸ்பெயினை விரித்து உலகை ஆளும் அவரது கனவுக்கு நடந்த விளைவுகள் பெரும் வரலாற்று பக்கங்கள் .இவரது ஆட்சியில் தான் கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார் .

இன்னும் எத்தனையோ மாற்றங்கள் இவரது காலத்தில் நடந்தன. இவரது ஆட்சியின் போது தான் ஸ்பெயினுக்குள் செஸ் ஆட்டம் வருகிறது. இருப்பதிலேயே உச்சபட்ச அதிகாரம் ராணிக்கு வழங்கப்படுகிறது.

செஸ் ஆட்டத்தில் எல்லை இல்லா அதிகாரம் பெற்றதாக உருவாக்கப்பட்ட ராணியை, உலகம் முழுவதும் பிரபலப்படுத்த இயேசு கிறிஸ்துவின் தாயான மேரி மாதாவை அந்த இடத்தில் பொருத்தினார்கள் ஐரோப்பியர்கள். ஆனாலும் ஒரு சில நாடுகளில் எப்போதும் ராணிக்கு தடைதான்.

குறிப்பாக அரேபிய நாடுகளில் இப்போது வரை ராணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரேபியர்களின் செஸ் ஆட்டத்தில் ராணி என்ற காயே இல்லை. ராணிக்கு பதில் அரசு ஆலோசகர் தான் இருப்பார். ராணியை வைத்து ஆடுவதற்கு அந்நாடுகளில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இதன் பிறகு ஐரோப்பாவில் மேலும் வெவ்வேறு நாடுகளில் பரவிய செஸ் ஆட்டம், மீண்டும் இதே வடிவ முறையோடு இந்தியாவுக்குள் வருகிறது. இங்கிருந்து வேறு வடிவத்தில் வெளியே போன விளையாட்டு, வரலாற்றின் பக்கங்களில் சுழன்று புது வடிவில் மீண்டும் ஒரு வழியாக இந்தியாவிற்கு வந்தது. இப்போது இந்தியாவில் நாம் விளையாடும் செஸ் ஆட்டத்தில் ராணிக்கே உச்சபட்ச அதிகாரம்.

ஆட்டத்தில் ராணியை இழந்துவிட்டால் அவ்வளவுதான் என்னும் பதட்டம் பலருக்கும் உண்டு. ராஜாவை தொட வேண்டும் என்றால் பலம் வாய்ந்த ராணியை தாண்ட வேண்டும்.

ராணியை அவ்வளவு சீக்கிரத்தில் தாண்டி விட முடியுமா என்ன?!

Comments

Popular posts from this blog

அலெக்ஸாண்ட்ரியா நூலகம் (Library of Alexandria)

ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!!

முருங்கை கீரை