Posts

Showing posts from 2013
Image

Happy birthday

Image
I would like to congratulate both of you on your wedding anniversary. May God bless you and fill your life with more love and happiness.                                              -  ajay

நமது வரலாற்றின் கறைகள்! தேவதாசி முறை!

Image
நமது வரலாற்றின் கறைகள்! தேவதாசி முறை! தேவதாசி என்பவர்கள் பெரும் கோயில்களில் நடனமாடுவதற்காக சிறுவயதில் நேர்ந்து விடப்படும் பெண்களைக் குறிக்கும் சொல். இச்சொல் தேவன் (இறைவன்) + தாசி (அடிமை) = இறைவனின் அடிமை என்ற பொருள்படும். இவ்வழக்கம் 1930களுக்கு முன்பு வழமையாக இருந்தது. இந்த முறை கோயில் பணிகளுக்காக ஏற்படுத்தப்பட்டதாக இருந்தாலும், பின்னாட்களில் இவர்கள் கோயில்களை நிர்வாகித்த மேல் வர்க்கத்தினருக்கு  அல்லது அரசர், செல்வந்தர் போன்றவர்கள் முன்பு நடனமாட வைக்கப்பட்டதுடன் அவர்களுடைய பாலியல் இச்சைகளுக்கு அடிமைகளாகவும் பயன்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக இவ்வழக்கத்துக்கு 1920 முதல் இந்தியாவில் பாரிய எதிர்ப்பு இருந்தது, அதன் காரணமாக 1947 ஆண்டில் தேவதாசி ஒழிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஒழுக்கம், கற்பு என்னும் கருத்துக்களில் ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதி என்ற ஒரு தலைப்பட்ட நீதி வழக்கிலிருப்பதை வெளிப்படையாகக் காட்டும் நிறுவனமே தேவதாசி முறையாகும். இது ஆண்களின் வசதிக்காகவும், அவர்களின் இச்சையை அவர்கள் விருப்பப்படி பூர்த்தி செய்யவும், பெண்கள் சமூகத்தை மூளைச்சலவை செய்து ஏற்படுத்தப்பட்ட ஒரு கொ...

சிதம்பர ரகசியம்! பகுதி-2

Image
சிதம்பர ரகசியம்! பகுதி-2  உலகில் உள்ள எல்லா ATOM REACTOR களும், சிவனின் லிங்க வடிவில் மட்டுமே உள்ளது என்ற செய்தியுடன் இந்த பகுதியை துவங்குவோம், அதாவது அணு என்பது தான் உலகின் தொடக்கம், அதனால் உலகை அழிக்கவும் முடியும். ஒவ்வொரு அணுவிற்குள்ளும் உள்ள பரமாணு (Sub atomic particle) (ப்ரோட்டான் =>குவார்க் =>க்ளுவான்), ஒரே இடத்தில் இல்லாமல் நகர்ந்து கொண்டே இருக்கும் தன்மையுடையது, இந்த செயலின் மூலம் ஆக்கல் ,அழித்தல் என்ற இரண்டு செயல்பாடுகளுமே நடைபெறுகின்றது. இது இயற்பியல் விதி. இந்த உலகம் என்பதே தடை ஏதுமில்லாத நகர்ந்துகொண்டிருக்கும் அணுக்களால் ஆனதே. தில்லை நடராஜரின் இந்த "ஆனந்த தாண்டவம்" என்ற நிலையை, உலகின் பல இயற்பியல் அறிஞர்கள் "COSMIC DANCE" என்று அழைக்கின்றனர். அறியாமையை காலில் மிதித்துக்கொண்டு ஆனந்த தாண்டவ கோலத்தில் நடராஜர் நான்கு கைகளுடன் ஆடிக்கொண்டிருப்பதை அணுவின் செயல்பாட்டுடன் ஒப்பிடுகின்றனர். அதாவது அணுவின் கட்டமைப்பான (Sub atomic particle ) எப்படி ஒரே இடத்தில் இல்லாமல் நகர்ந்து கொண்டே உள்ளதோ, அதே போன்று "ஆடல் கடவுள்" என்று அழைக்கப்படும் நடராஜர் ஒ...

சிதம்பர ரகசியம் - நம் முன்னோர்களின் அதிசயம்

Image
சிதம்பர ரகசியம் - நம் முன்னோர்களின் அதிசயம்  கீழே கொடுக்கப்பட்டுள்ளது தான் உண்மையிலேயே சிதம்பர ரகசியமா என்பது அந்த நடராஜர் க்கு மட்டுமே வெளிச்சம் - இருப்பினும் இப்படியும் நம் முன்னோர்களால் செய்ய முடிந்ததா ? எப்படி இதை செய்தார்கள் - என்பதே பெரும் ரகசியம் தான் .... இணையத்தில் இதை படித்து விட்டு என்னை தொற்றி கொண்ட வியப்பு இன்னும் விலகவில்லை  முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனை யை நோக்கியே பயணித்துள்ளது..அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்கள் சிலவற்றை நாம் அறிவோம் ..பல வற்றை அறிய விஞானம் -ஆராய்ச்சி இருந்தும் அதன் முக்கியத்துவம் புரியாததால் சீண்டுவார் இல்லாமல் இருக்கின்றன ... அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்...அறிவியல்,பொறியியல், புவியியல்,கணிதவியல்,மருத்த ுவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.... (1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator )...

சூரிய ஒளிக் கடிகாரம்!

Image
14 நூற்றாண்டுகால அதிசயமாக விளங்கும் சூரிய ஒளிக் கடிகாரம்! காலம் எதற்காகவும், யாருக்காகவும் நிற்பதில்லை...  ஆனால், காலத்தால் அழியாத படைப்புகள்...  பன்னெடுங்காலத்திற்கும் பெருமையை பறைசாற்றி வருகின்றன. அந்த வகையில் கும்பகோணம் அருகே உள்ள கோவில் ஒன்றில், சூரிய ஒளியால் இயங்கும் கடிகாரம் இன்றளவும் பார்ப்பவர்களுக்கு ஆச்சரியமான விஷயமாக இருந்து வருகிறது. கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூரில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட சிவயோகிநாதர் சிவன்கோவிலின் சுற்றுச்சுவரில் இந்த சூரிய ஒளி கடிகாரம் அமைக்கப்பட்டிருக்கிறது. கிட்டதட்ட 1400 ஆண்டுகால பழமையான கோவிலில் உள்ள இந்த கடிகாரத்தின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆணி, சூரிய ஒளியில் பட்டு நிழலாக விழுகிறது. இந்த நிழல் விழும் பகுதிகள் காலை சூரியன் உதிக்கும் 6 மணி முதல் மாலை சூரியன் மறையும் 6 மணி வரை ஒவ்வொரு மணிநேரத்தையும் துல்லியமாக காட்டுகிறது.தவறாமல் காலம் காட்டும் இந்த கடிகாரம் எதிர்காலத்திலும் காலம் காட்ட தமிழக அரசு பாதுக்காக்க வேண்டும்.

காவிரிபூம்பட்டினம் !வரலாற்றைத் தேடி ஒரு பயணம் !

Image
பத்தாயிரம் போர்க்கப்பல்கள் நின்றிருந்த - காவிரிபூம்பட்டினம் ! "காவிரிப்பூம்பட்டினம்" - கடலுக்கடியில் கண்மூடிக்கிடக்கும் நம் வரலாற்றைத் தேடி ஒரு பயணம் ! கலை, இலக்கியம், வீரம், கொடை, பண்பாடு, நாகரீகம், போன்ற பலவற்றை இந்த உலகிற்கே கற்றுத்தந்த நம் தமிழ் இனம், இன்று தன் வரலாற்றையே மறந்து மேல் நாட்டு மோகத்தில் தான் கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்காமல் சென்று கொண்டிருப்பது வேதனைக்குரிய விடயம்! ஆன ால் வரலாறு என்பது ஒரு வட்டம் தான், ஒரு காலத்தில் இந்த உலகையே ஆண்ட நாம், இன்று உலகிற்கு அடிமையாய் இருக்கிறோம், மீண்டும் இந்த கால சக்கரம் சுழன்று நம் பெருமைகளை இந்த உலகம் பேசும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையுடன், நம் சோழ துறைமுக தலை நகருக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்.நம் முன்னோர்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள கடலோடு பயணிப்போம் வாருங்கள் !! தமிழகத்தில் 99% பெயர்கள் காரணப் பெயரால் அமைந்தவை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் வந்த பெயர் தான் இந்த "காவிரிப்பூம்பட்டினம்". பல ஊர்களின் மக்களை வாழவைத்தது போக மீதமுள்ள தண்ணீரை கூட கடலுக்கு தந்து விடும் காவ...

தஞ்சை கோயிலின் பேசும் சிற்பம் !!

Image
"பேசும் சிற்பம்" என்ற தலைப்பைக் கண்டதும் வியப்படைந்துவிடீர்களா..?? உங்கள் வியப்பு நிச்சயம் குறையாது. இந்த சிற்பம் பேசுவது வாய் மொழியால் அல்ல, உடல் மொழியால்.... வாருங்கள் தஞ்சை கோயிலில் உள்ள தமிழர்களின் சாதனையை காண்போம் !!  படம் 1 : 18 அடி உயரமுடைய ஒரே கல்லில் உருவான துவாரபாலகர், காலை உயர்த்தி நிற்கும் அந்த துவாரபாலகருக்கு நான்கு கரங்கள் உள்ளன. அதை சுற்றி இருக்கும் சிற்ப வேலைபாடுகளை சற்று கூர்ந்து கவனிப்போம், காலின் அடியில் ஒரு சிங்கம், ஒரு பாம்பு, சாதாரணமாக பார்ப்பவர் கண்ணிற்கு இவைகள் மட்டும் தான் புலப்படும். படம் 2 : சாதரணமாக பார்த்தால் தெரியாத அதன் பிரம்மாண்டத்தை, ஒரு யானையுடன் ஒப்பிட்டு பாருங்கள் எப்படி விசுவரூபம் எடுத்து நிற்கிறது, அந்த துவாரபாலகர் சிற்பம் என்பது நன்கு புலப்படும் படம் 3 : சரி துவாரபாலகர், காலின் கீழ் இருக்கும் அந்த பாம்பை சற்று உற்று நோக்குங்கள், பாம்பின் வாயில் என்ன ? ஆஹா ஒரு யானை !! பின்புறமாக யானையை விழுங்கும் பாம்பு, யானை எவ்வளவு பெரியது, அதையே விழுங்கும் பாம்பு என்றால் அது எவ்வளவு பெரியதாக இருக்கவேண்டும் !!!?? அவ்வளவு பெரிய அந்த பாம்பே, அந்த துவரபா...

காந்திஜி கொல்லப்பட்ட வழக்கில் கோட்சே யின் வாக்குமுலம்,

Image
ஆதாரம்; MAY I PLEASE YOUR HONOUR காந்தி கொலை செய்யப்பட்டதற்கு முழுக்க முழுக்க நானே பொறுப்பு. வீரசவர்க்கார் உள்பட வேறு எவருக்கும் தொடர்பு இல்லை" என்று கோட்சே கூறினார். டெல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் கோட்சே தொடர்ந்து வாக்குமூலம் அளித்தார். வாக்கு மூலத்தின் பின்பகுதி வருமாறு:- ஜின்னாவின் இரும்புப்பிடி, எக்கு உள்ளத்தின் முன் காந்திஜியின் ஆத்ம சக்தி, அகிம்சைக் கொள்கை அனைத்தும் தவிடு பொடியாகிவிட்டன. ஜின்னாவிடம் தம் கொள்கை ஒருக்காலும் வெற்றி பெறாது என்று தெரிந்திருந்தும் அவர் கொள்கையை மாற்றிக் கொள்ளாமலேயே இருந்தார். தம் தோல்வியையும் அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. மற்ற மேதைகள் ஜின்னாவுடன் பேசி அவரை முறியடிக்கவும் வழிவிடவில்லை. இமயமலைப் போன்ற பெரிய தவறுகளைச் செய்த வண்ணம் இருந்தார். நாட்டைப் பிளந்து துண்டு துண்டாக்கியவரைத் "தெய்வம்" என மற்றவர் மதித்தாலும் என் உள்ளம் ஏனோ அவ்வாறு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது, அவர் மீது கோபம்தான் வருகிறது. காந்தியைக் கொன்றால் என் உயிரும் போய்விடும் என்பதை அறிவேன். சிறிதும் சந்தேகம் இல்லாமல் என் எதிர்காலம் பாழாய்ப்போவது உறுதி...

தமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) :

Image
இன்று உலகமே Mayan என்கிற வார்த்தையை அறிந்திருக்கிறது. Mayan Calendar-யை வைத்து உலகம் முழுவதும் பரபரப்பு கிளப்பப்படுகிறது. 2012-ல் உலகம் அழிந்திவிடலாம் என்கிற புனைவுகளும் தொலைக்காட்சி மர்மத் தொடர்களால் முன்னெடுக்கப்படுகின்றன. Mayan-கள் யார் என்றுத் தெரியாதவர்கள் கூட Mayan என்கிறப் பெயரை உச்சரிக்கிறார்கள். தமிழ் நாட்டின் முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும் Mayan Calendar பற்றிய நிகழ்ச்சிகளை வெளிநாட்டு தொலைக்காட்சி நிறுவனங்களிடமிருந்து பிச்சையெடுத்து, தமிழ் படுத்தி கட்டைக் குரல்களில் உலக அழிவைப் பற்றி பேசின. வரலாற்று அறிவு கொஞ்சம் கூட இல்லாத நம்முடைய தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் Mayan தொடர்பான வரலாற்று நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவது அபத்தம். Omlec, Aztec, Mayan, Inca இவைகள் வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்த மக்களுடைய நாகரீகங்களின் பெயர்கள். இவர்களை வெள்ளையர்கள் செவ்விந்தியர்கள் என்று பொதுபட அழைத்தார்கள். ஆங்கிலேயர்கள் இவர்களை செவ்விந்தியர்கள் என்று அழைத்ததற்கு வரலாற்று பின்னனி உண்டு. கி.பி. 14, 15 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு...

தமிழன் :

Image
தமிழர்கள் என்பவர்கள் யார் என்று தமிழர்கள் அறிந்து கொள்ளுதல் வேண்டும். தமிழர்கள் என்பவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தையோ , சமயத்தையோ, சாதியையோ சார்ந்தவர்கள் அன்று . அவர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுப் பழக்கத்தை அடிப்படையாக கொண்டவர்களும் அன்று. அவர்களுள் எண்ணற்ற பேதங்கள் உள்ளன. கடவுளை நம்பாத நாத்திகர்கள் முதற்கொண்டு இந்துவும், சமணர்களும், பௌத்தர்களும், இஸ்லாமியரும், கிறிஸ்துவரும், சைவ, வைணவ, சாக்த , கௌமார சமயத்தை தழுவியவர்களும், இயற்கையை வழிபடுபவர்களும் இதில் அடக்கம். சமயங்கள் மதங்களை மறுத்து உயிர்களை வணங்கும் சமரச சன்மார்கிகளும் தமிழினத்தில் அடக்கம். பல வகையான சமய மத நம்பிக்கைகள், மூட நம்பிக்கைகள், பகுத்தறிவு கோட்பாடுகள், இறை மறுப்பு கோட்பாடுகளை உள்ளடக்கியது தமிழனம். மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, எலி இறைச்சி சாப்பிடுபவர்கள் உட்பட, எந்த வகையான இறைச்சியையும் உட்கொள்ளாது புலாலை முற்றிலும் மறுத்தவர்கள் தமிழினத்தில் அடக்கம். உணவும், கடவுள் வழிபாடும் தனிமனித சுதந்திரத்திற்கு உட்பட்டது. இவைகள் காலத்திற்கு, அறிவு விளக்கத்திற்கு தகுந்தாற்போல் மாற்றம் பெரும், மாறும். இவைகளை வைத்து தமிழ...

கை மாறி போன கச்சத்தீவு....

Image
கை மாறி போன கச்சத்தீவு.....கச்சதீவும் நமதே கீழை கடலும் நமதே! கச்சத்தீவு யாழ்ப்பாண தீபகற்பத்திற்கு அருகிலுள்ள ஒரு தீவாகும். இது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் உள்ளது. 1974ம் ஆண்டு வரை இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த இத்தீவு தற்போது இலங்கைக்கு சொந்தமாக உள்ளது. இத்தீவின் பரப்பளவு 285 ஏக்கர்(1.15 சதுர கிலோ மீட்டராகும்). இந்த தீவில் மனிதர்கள் யாரும் தற்போது வசிக்கவில்லை. புகழ்பெற்ற அந்தோணியார ் கோவில் ஒன்று இங்கு உள்ளது. கச்சதீவு இந்திய உரிமை என்பதற்கு சான்று: 1972-ல் வெளியிடப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட விவரச் சுவடி, அதற்கு முன் ராஜா ராமராவ் வெளியிட்ட ராமநாதபுர மாவட்ட மானுவல், 1915, 1929 மற்றும் 1933-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ராமநாதபுர மாவட்டத்துப் புள்ளிவிவரங்கள் அடங்கிய பின்னிணைப்பு, 1899-ல் ஏ.ஜெ. ஸ்டூவர்ட்டு எழுதிய சென்னை ராசதானியிலுள்ள திருநெல்வேலி மாவட்ட மானுவல் போன்ற பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு வெளியிடப்பட்டது. அதில், ராமேசுவரத்திற்கு வட கிழக்கே, 10 மைல் தொலைவில் கச்சத்தீவு இருக்கிறது என்றும்; ஜமீன் ஒழிப்புக்கு முன்னர், ராமநாதபுரம் அரசர் இத்தீவை தனி நபர்களுக்கு குத்தகைக்கு வ...