பூமி ஒரு ஆச்சரியம்...
பூமியை சுற்றி நாடுகள் உள்ளது எனில் பூமியின் ஒரு புறம் இருந்து மறு புறம் வரை துளையிடும் போது மற்ற நாடுக்கு தானே செல்ல வேண்டும்? முதலில் இது சாத்தியமில்லை. இது வரை பூமியில் இடப்பட்ட ஆழமான துளையான கோலா சூப்பர்-டீப்பின் ஆழம் 12.26 கிலோமீட்டர்கள் அதாவது பூமியின் விட்டத்தில் 0.2%. இதற்கே 20 ஆண்டுகளுக்கு மேல் ஆனது. பூமியின் வெப்பம் தாளாமல் அந்த துளையிடும் பணி நிறுத்தப்பட்டது. ஒரு பேச்சுக்கு, பூமியில் நேராக துளை ஒன்று இட வேண்டுமென்றால் 8,000 மைல்களுக்கு மேல் பாறை மற்றும் உருகிய தீக்குழம்பு 6,000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பூமியின் மேற்பரப்பை விட 30 கோடி மடங்கு அதிக அழுத்தம் இவை அனைத்தையும் சமாளிக்க வேண்டும். எப்படியோ இவற்றை சமாளித்து நேரான துளை இடப்பட்டு விட்டது என்று வைத்துக் கொள்வோம். அதில் குதித்தால் என்ன ஆகும்? வேறென்ன? நாம் சிந்தித்துப் பார்க்க விருப்பம் இல்லாத விதங்களில் கொடூரமான இறப்பு ஏற்படும். சரி அதையும் சமாளிக்க முன்கூட்டியே வழி செய்து விட்டோம் என்று வைத்துக் கொள்வோம். பூமியின் மேற்பரப்பு ஒரு மணி நேரத்திற்கு 1,000 மைல்களுக்கு மேல் தொடர்ந்து சுழன்று கொண்டிருக்கிறது. பூமிக்குள் ஆழ...