Four Pest Campaign

 சீன நாட்டில் 1958 ஆம் ஆண்டு , மாவோ ஸிடாங்((Mao Zedong) என்பவரால் Four Pest Campaign என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது

அதாவது,எலி,ஈ,கொசு மற்றும் குருவிகளை அழிக்கும் திட்டம்.

காரணம் ,


  • எலிகளால் பிளேக் நோய் ,
  • கொசுக்களால் மலேரியா நோய்,
  • ஈக்களால் காற்றில் பரவக்கூடிய நோய்கள் மற்றும்
  • தானிய வகைகள் ,பழங்களை குருவிகள் உண்ணுவதால் உற்பத்தி பாதிப்பு

இக்காரணங்களால்,இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது .

எலிகளின் வால் ,இறந்த ஈக்கள் ,கொசுக்கள் மற்றும் குருவிகளை கொண்டு வருவப்பவர்களுக்கு தக்க சன்மானம் அளிக்கப்பட்டது.

மக்கள் குருவிகளை கொன்று, கூடு,முட்டைகளை அழித்தனர்.



இந்த திட்டத்தால் 1.5 பில்லியன் எலிகள்,1 பில்லியன் குருவிகள்,220 மில்லியன் பௌண்ட்ஸ் ஈக்கள் ,24 மில்லியன் பௌண்ட்ஸ் கொசுக்கள் அழிக்கப்பட்டன.

திட்டம் வெற்றிபெற்றதாக நினைத்து கொண்டிருந்த போது ,இரண்டு வருடங்களில் இதன் தாக்கம் வெளிப்பட ஆரம்பித்தது.

குருவிகளின் மறைவால், வயல்வெளிகளில் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகமாகி ,பல்லாயிரம் கிலோ உணவு தானியங்களை வேட்டையாடியது.உணவு உற்பத்தி, விளைச்சல் முன்பிருந்தததை விட பல பல மடங்கு குறைந்தது .

நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடியது. பசியால் கிட்டத்தட்ட 43 மில்லியன் மக்கள் இறந்தனர்.

ஆக , மனிதனால் என்றுமே இயற்கையை வெல்ல முடியாது.வெல்ல நினைத்தால் வீழ்வது அவனே !!


Comments

Popular posts from this blog

அலெக்ஸாண்ட்ரியா நூலகம் (Library of Alexandria)

ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!!

முருங்கை கீரை