திருநெல்வேலி ஒரு பார்வை..
- உங்களுக்கு இருட்டுகடை அல்வா வேண்டுமென்றால் அது நெல்லையப்பர் கோவில் அருகில் இருக்கும் பெயர் பலகை கூட இல்லாத ஒரு சிறிய கடையில் சாயங்காலம் 6 மணியில் இருந்து இரவு 8 மணிவரை மட்டுமே கிடைக்கும் . நீங்கள் கடை திறக்கும் முன்பே சென்று வரிசையில் நின்றால் தான் கிடைக்கும். வேறு எங்கும் திருநெல்வேலியில் இருட்டு கடை அல்வா கிடைக்காது. நம்பி ஏமாந்துவிடாதீர்கள்.
இதுதான் அந்த கடை கூட்டத்தை பார்த்திர்களா? அதை வைத்து அடையாளம் கண்டுகொள்ளலாம்.
2. சுற்றுலா பயணிகள் இவ்வளவு மெணக்கிட்டு நேரம் செலவளித்து அல்வா வாங்கி சாப்பிடுவது கடினம் . இருட்டு கடை அல்வாவிற்கு அடுத்தபடியாக ஒரிஜினல் திருநெல்வேலி அல்வா என்ற பெயர் பெற்றது சாந்தி சுவீட்ஸ் அல்வா. ஆனால் திருநெல்வேலி பஸ் ஸ்டான்டிலும் , ரயில் நிறுத்ததிலும் நீங்கள் திரும்பும் திசையெல்லாம் சாந்தி ஸ்வீட்ஸ் என்ற பெயரில் தான் கடைகள் இருக்கும் இதில் ஒன்று கூட உண்மையான சாந்தி ஸ்வீட்ஸ் கிடையாது.
உண்மையான கடை திருநெல்வேலி ரயில் நிறுத்தம் அருகில் மட்டுமே உள்ளது . அவர்களுக்கும் வேறு எங்கும் கிளைகள் கிடையாது.
இதுவே அந்த கடை எப்போது சென்றாலும் குறைந்தது 10 பேராவது நின்று அல்வா வாங்கிகொண்டு இருப்பார்கள் அதை வைத்து கண்டுபிடித்துவிடலாம் மற்ற கடைகளில் ஒரு நாதி இருக்காது. தற்போது 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்தில் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் இக்கடை ம.தி.தா. பள்ளிக்கு அடுத்த வணிக வளாகத்தின் தரைத்தளத்திற்கு இடம் மாறியுள்ளது.
(பின்குறிப்பு - சாந்தி ஸ்வீட்ஸ் அல்வாவை விட திருநெல்வேலி ஆரியாஸ்சில் அல்வா சுவையாக இருந்தது விலையும் கூடுதல் தான் )
3. திருநெல்வேலி என்றாலே எல்லாரும் குற்றாலம் தான் சிறப்பு என்பார்கள். ஆனால் குற்றாலத்தை விட பாபநாசம் நன்றாக இருக்கும்.
தலையணை பாபநாசம்
தமிழ் கிராமத்து சினிமாக்களில் ஹீரோயின்கள் அழகாக ஓடிவரும் பாபநாசம் தலையணை இதுவே .
அகத்தியர் அருவி பாபநாசம்
குற்றாலத்தில் அருவிகளை தவிற வேறு ஒன்றும் இல்லை ஆனால் பாபநாசத்தில் அருவிகள் ,பாபநாசம் அணைகட்டு (dam) , ஆறு , பாபநாசம் கோவில் என அனைத்தும் உள்ளது.
4. குற்றாலம் செல்வோர் சொந்த வாகனத்தில் அல்லது வாடகை வாகனம் அமைத்துகொண்டு செல்வது நல்லது. எனில் அங்கே மொத்தம் 6 அருவிகள் வேறு வேறு இடங்களில் (10 கி.மீ இடைவேளி)இருக்கின்றன. ஆட்டோக்கள் கிடைக்கும் ஆனால் அதிகம் பணம் கேட்பார்கள் சுற்றுலாதலம் ஆயிற்றே.
5. யாரிடம் உதவிகேட்டாலும் செய்துகொடுப்பார்கள் . பொதுவாகவே உதவும் மனப்பான்மை அதிகம் . ஏமாற்றுகாரர்கள் அதிகம் இருக்கமாட்டார்கள். ஆனால் மரியாதை மிக முக்கியம் . வார்த்தை தவறினால் வாழ்க்கையே பறிபோகும் அபாயம் உண்டு.
6. முக்கியமாக சுற்றுலா வரும் வாலிபர்கள் உள்ளூர் பெண்கள் இருக்கும் பக்கம் தலைதிரும்பாமலும் , வால் ஆட்டாமலும் இருப்பது நல்லது. இங்கு நடக்கும் கொலைகளில் பாதிக்கு மேல் பெண்பிள்ளைகள் விஷயமாக தான் இருக்கும்.
7. பரோட்டாவை ருசிபார்க்க தவறிவிடாதீர்கள். சால்னாவின் சுவை நாக்கில் நாட்டியமே ஆடும். பரோட்டாவின் விலை ரூ 5 முதல் ரூ 20 வரை இருக்கும் ஹோட்டலை பொருத்தது. சிறப்பு என்னவேண்றால் அனைத்து கடைகளிலும் பரோட்டா சால்னாவின் சுவை நன்றாகவே இருக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது.
8.தயவு செய்து எங்கள் அருவிகளுக்கும், ஆறுகளுக்கும் குளிக்க வரும் போது ஷாம்பூ, சோப்பு, பாக்கெட் பண்டங்கள், டயாபர்கள் போன்ற இத்யாதிகளை எடுத்து வந்து குப்பை ஆக்காதீர்கள்! இதெல்லாம் பயன்படுத்தி குளிக்க நீங்கள் வீட்டிலேயே குளிக்கலாம்! நீர் நிலைகளையும் வனங்களையும் பாழ்படுத்த வேண்டாம்.
ஏனேன்றால் அருவிகளில் தண்ணீர் நன்றாக வரும் சமயத்தில் தண்ணீர் உங்கள் மீது படும் வேகத்திலும் அழுத்ததிலும் நீங்கள் பரிசுத்தமாக ஆகிவிடுவீர்கள். சோப்பு ஷாம்பு எல்லாம் அநாவசியம்.
9. லட்சுமி விலாஸ் (ஜங்ஷன் கார்னர்) இந்த கடையிலும் அல்வாவின் சுவை அருமையாகவே இருக்கும்
Comments
Post a Comment