தவமே நிஜம் ....!


விடியாத இரவுகள் ........       
இமைத்திரவாத கனவுகள் ........
விடியற்காலை குளிர்காற்று ,,,,,
காலை நேர சூரியன் ,,,,,,,,
ஜன்னல் ஓர குருவி சத்தம் ,,,,,,
பூஜை அறை சுப்ரபாதம் ,,,,,,
எழுந்த உடன் பெட் காபி ,,,,,,,,
சில் என்ற குளியல் ,,,,,,,,
அம்மா கையில் இரண்டு தோசை,,,,, 
நாய் குட்டியின் சின்ன சண்டை,,,,,, 
தங்கையிடம் சின்ன வாக்குவாதம் ,,,,,
அம்மாவுக்கு "பாய்",,,,,
பெட்டிக்கடையில் ஒரு தம் ,,,,,
நாயர் கடையில் சிங்கள் டீ,,,
பார்வைக்கு மட்டும் செய்தித்தாள் ,,,,
நண்பர்களுடன் கும்மாளம் ,,,,
பூட் போர்டு பயணம்,,,,,
இதை எல்லாம் மறந்துவிட்டேன் .....!
உன்னை பார்த்ததும் இழந்துவிட்டேன் ....!
இன்று.........................
  உன் ஓரப்பார்வை,,,
இதழோர புன்னகை ,,,,,
உன் கை பட்ட பஸ் டிக்கெட் ,,,,,
உன் மடி மீது என் நோட் ,,,,,
நீ கடித்து போடும் நகத்துண்டு ,,,,,
நீ உன் தலையிலிருந்து விழும் ரோஜா,,,,,
இவைகளுக்கு ஏங்குவது என் மனம் ......!
கிடைத்தால் சுகம் வரும் ....!
கிடைக்கும் வரை தவமே நிஜம் ....!

Comments

Popular posts from this blog

அலெக்ஸாண்ட்ரியா நூலகம் (Library of Alexandria)

ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!!

முருங்கை கீரை