2012 உலகம் அழியுமா? உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு! part 2



இங்கு நான் ஏலியன்கள் எம்முடைய பூமிக்கு வந்திருக்கிறார்களா என்று ஏன் ஆராய வேண்டும்? ஏரியா 51 போன்றவற்றையெல்லாம் ஏன் மாயாவை ஆராயும் இடத்தில் சொல்ல வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். சரியாக யோசித்தால், மாயன்களின் அனைத்து நடவடிக்கைகளும், ஏதோ ஒரு விதத்தில் விண்ணையும், விண்வெளியின் வேற்றுக் கிரகவாசிகளையும் நோக்கியதாகவே அமைகின்றன. அவற்றிற்கெல்லாம் உச்சக்கட்டமாய் அமைந்த கிறிஸ்டல் மண்டையோடு கூட, மாயன்களுக்கு ஏலியன்கள் மூலம்தான் கிடைக்கப்பெற்றிருக்கின்றன என்ற முடிவுக்குத்தான் கொண்டு செல்கிறது. விண்ணிலிருந்து ஏலியன்கள் வந்ததற்கு சாட்சியாக ‘ஏரியா 51′ உள்ள படம் இருக்கலாம் என்றாலும், அது மட்டுமே சாட்சியாக இருந்துவிட முடியாது. ஆகவே இதை மேலும் ஆராய்ந்து பார்க்கலாம்.

இப்பொழுது நான் சொல்லப் போகும் இந்தச் சம்பவத்துக்கும், மாயாவுக்கும் எந்தவிதமான சம்பந்தம் இல்லை என்று நினைத்தாலும், சம்பந்தம் உண்டு என இப்போது பல ஆராய்ச்சியாளர்கள் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். சந்திரனை ஆராயச் சென்ற அப்போலோ விண்கலத்தின் ஆராய்ச்சியாளர்கள் எடுத்த இந்தப் படத்தை முதலில் பாருங்கள்.
இதில் ஏதாவது வித்தியாசமாகத் தெரிகிறதா…..….?



கொஞ்சம் பெரிதாக்கிய இந்தப் படத்தைப் பாருங்கள். இப்போது ஏதாவது தெரிகிறதா….?





மண்டையொடு தெரிகிறதல்லவா? ஆம், அது மண்டையோடேதான். மனிதனே வாழ முடியாத சூழ்நிலை இருக்கும் சந்திரனில். இதில் ஆசரியம் என்னவென்றால் அது ஒரு கிறிஸ்டல் மண்டையோடு. இது எப்படிச் சாத்தியம்? யாரால் இதற்குப் பதில் சொல்ல முடியும்?
அந்த மண்டை ஓட்டை அப்போலோ விண்கலத்தில் சென்றவர்கள், கூடவே எடுத்தும் வந்திருக்கிறார்கள். அது இப்போ ஏரியா 51 இல் இருக்கிறது. இப்படி ஒரு மண்டையோடு சந்திரனில் எடுக்கப்பட்டதாக மக்களுக்குச் சொல்லப்படவேயில்லை. காரணம், பதிலே சொல்ல முடியாத மர்மமாக அது இருப்பதால். இப்படி ஒரு மண்டையோடு ஒன்று சந்திரனில் இருந்தது என்று உலக மக்கள் தெரிந்து கொண்டால், இதுவரை மக்கள் நம்பிய அனைத்து நம்பிக்கைகளும், மதக் கோட்பாடுகளும் அடிபட்டுப் போய்விடும். அதனால் உலகின் சமநிலையே குலைந்து விடும் சூழ்நிலை உருவாகும். இது போன்ற காரனங்களினால், அதை மறைத்து விட்டனர். அப்படி மறைக்கப்பட்டவை உலகில் பல உண்டு.
உலகின் சமநிலை குலைந்து விடக் கூடாது என்பது மட்டுமில்லை மறைக்கப் பட்டதற்குக் காரணம். விஞ்ஞான வளர்ச்சியால் கண்டுபிடிக்கப்படும் எதையும், இதுவரை மதங்களின் உச்சக் கட்டமைப்புகள் எதிர்த்தே வந்திருக்கின்றன. காரணம், மதங்களின் வேதப் புத்தகங்களில் சொல்லப்பட்டவைக்கு மாற்றாக அவை அமைந்திருப்பதுதான். உலகில் உள்ள பல அரசுகள் மதங்களின் கட்டுப்பாடுகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் இன்றும் இருக்கின்றன.


சந்திரனில் மண்டை ஓடு இருப்பதற்கான சாத்தியங்கள் என்னவாக இருக்கும் என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் போதுதான் வந்து சேர்ந்தது அடுத்த ஒரு படம். செவ்வாய்க் கிரகத்தைச் (Mars) சுற்றி அமெரிக்கா அனுப்பிய விண்கலம் எடுத்த படங்களில், வித்தியாசமான உருவங்கள் காணப்பட்டன. அந்தப் படங்களில் மனிதத் தலை போன்ற பெரிதாக அமைப்புகள் காணப்படுகின்றன.


அது மட்டுமல்ல, மண்டை ஓடுகள் போன்றவைகளும் நிலத்தில் காணப்படுகின்றன. செவ்வாய் கிரகத்தின் மனிதத் தலை வடிவில் இருக்கும் இது என்ன











இந்தப் படம் அந்தச் சமயத்திலேயே வெளி வந்திருந்தது. ஆனால் பலர் அதை ஒரு தற்செயல் நிகழ்வெனப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இப்போது இணைய வலையமைப்பின் மூலம் உலகமே ஒன்றாக இணைந்துவிட்ட நிலையில், பல இரகசியங்களை சம்பந்தப்பட்டவர்கள் கசிய விடத் தொடங்கிவிட்டனர். அதனால் கிடைக்கும் தகவல்கள் மூலம் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து இப்போது நம்மால் பார்க்க முடிகிறது
செவ்வாயில் மனித முகம், சந்திரனில் மனித மண்டை ஓடு, மாயாவில் கிறிஸ்டல் மண்டை ஓடுகள். இவற்றை இப்போது இணைத்துப் பார்க்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அதனால் அவர்கள் சில முடிவுகளுக்கு வந்தனர். அவர்கள் வந்த முடிவுகள்தான் இவை…….!
பால் வெளி மண்டலம்’ எனச் சொல்லப்படும் ‘மில்க்கி வேயில்’ (Milky Way) அதியுயர் தொழில் நுட்ப அறிவுடன், மனித வடிவில் வேற்றுக் கிரகவாசிகள் வாழ்கின்றனர். அவர்கள் செவ்வாயில் தங்கள் தளங்களை அமைத்து பூமியை ஆராய்ந்து வந்திருக்கின்றனர். செவ்வாயில் ஏற்பட்ட விண்கல் தாக்குதலினால் அங்கிருந்து கிளம்பி தற்காலிகமாக சந்திரனில் தங்கியிருந்திருக்கின்றனர். இதனால்தான் செவ்வாயிலும், சந்திரனிலும் மண்டை ஓட்டு வடிவங்கள் கிடைக்கச் சாத்தியங்கள் இருந்தன.
இந்தச் சமயங்களிலேயே விண்வெளி மனிதர்கள் பூமிக்கு வந்து வந்து போயிருக்கிறார்கள். அவர்கள் வந்து போன இடங்களில் ஒன்றுதான் மாயன் இனத்தவர்கள் வாழ்ந்த இடம். இவர்களே மாயன்களுக்கு கணிதம், வாணியல், கட்டடக் கலை, விவசாயம், வரைகலை ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். இந்த அடிப்படையில்தான் நான் கடந்த பதிவில் சொல்லியிருந்த ‘இண்டியானா ஜோன்ஸ்’ படம் எடுத்திருக்கிறார்கள்.
இண்டியானா ஜோன்ஸ்’ திரைப் படத்திற்கு ஜனரஞ்சகம் தேவை என, திரைப்பட உத்திக்காக மிகைப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தாலும், அதன் அடிப்படைக் கரு என்பது தற்போதைய ஆராய்ச்சியாளர்கள் பலரது முடிவுகளாகவே இருக்கின்றது. இப்படி முடிவுகளை மற்றவர்கள் போல ஆராய்ச்சியாளர்கள் எழுந்தமானமாக எடுத்துவிட முடியாது. அப்படி எடுத்தால், ஏன் எடுத்தார்கள் என்பதற்கான காரணங்களையும் அவர்கள் சொல்ல வேண்டும்.
இந்த முடிவை அவர்கள் எடுத்ததற்கான காரணங்களையும், ஆதாரங்களையும் அடுக்கடுக்காகச் சொல்லிக் கொண்டே போனார்கள். அதில் முதன்மையாக அவர்கள் வைத்த ஆதாரம்தான் ‘நாஸ்கா லைன்ஸ்’ (Nazca Lines)
நாஸ்கா கோடுகள் என்பவை பற்றி நீங்கள் அறிந்தால், இப்படியும் உலகத்தில் இருக்கிறதா? என்று ஆச்சரியப்படுவீர்கள். தமிழர்கள் பலர் அறியாத ஒன்று அது.
அது என்ன நாஸ்கா லைன்ஸ்?




ஏலியன்கள் பூமிக்கு வந்திருக்கிறார்களா? இல்லையா? என்னும் இரண்டு விதமான கருத்துகளில் ஆய்வாளர்கள் தம்மை ஈடுபடுத்திக் கொண்டாலும், அப்படி யாரும் பூமிக்கு வரவில்லை என்பதை மையமாக வைத்தே நாம் அனைவரும் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆதாரமில்லாமல் எதையும் ஒத்துக் கொள்ளாத அறிவியல், இதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. பூமிக்கு ஏலியன்கள் வரவில்லை என்றுதான் அறிவியல் சொல்லிக் கொண்டிருக்கிறதே ஒழிய, ஏலியன்களே பிரபஞ்சத்தில் இல்லை என்று சொல்லவில்லை.
கலிபோர்னியா மாநிலத்தில், 42 அதியுயர் சக்திவாய்ந்த டெலஸ்கோப்கள் அமைக்கப்பட்டு, ‘பிரபஞ்சத்தில் எங்காவது உயிரினங்கள் இருக்கின்றனவா? அவை பேசும் குரல்கள் எமக்குக் கேட்குமா?’ எனத் தினம் தினம் ஆராய்ந்துகொண்டே இருக்கின்றனர். இதற்கென பல மில்லியன் டாலர் செலவும் செய்யப்பட்டிருக்கிறது. இந்தச் செலவைப் பொறுப்பேற்றுக் கொண்டவர் வேறு யாருமில்லை. உங்கள் எல்லாருக்குமே தெரிந்த மைக்ரோசாப்ட்டின் இணை இயக்குனரான பவுல் அலென் (Paul Allen) தான் அவர். இதனாலேயே இந்த திட்டம் ‘அலென் டெலெஸ்கோப் அர்ரே (Allen Telescope Array) என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஆனால் பூமிக்கு ஏலியன்கள் வந்திருக்கின்றனர் என்று அடித்துச் சொல்லும் ஆய்வாளர்கள் பெரும்பாலும் சுட்டிக் காட்டுவது, ‘நாஸ்கா லைன்ஸ்’ (Nazca Liines) என்பதைத்தான். தமிழில் அதை நாஸ்கா கோடுகள் என்று சொல்வோமா?
அது என்ன நாஸ்கா கோடுகள்? இது பற்றி கொஞ்சம் பார்க்கலாம்………..!
தென்னமெரிக்காவில் இருக்கும் பெரு (Peru) நாட்டில் உள்ள நாஸ்கா (Nazca) என்னுமிடத்தில் அமைந்த, பெருவெளிகளில் வரையப்பட்டிருக்கும் சித்திரங்களும், கோடுகளும்தான் நாஸ்கா கோடுகள் என்று சொல்லப்படுகின்றன. கோடுகள், சித்திரங்கள் என்றதும் ஏதோ சுவரில் எழுதப்பட்ட சித்திரம் என்று நினைத்து விடவேண்டாம். இவை எல்லாம் மிகவும் ஆச்சரியமான சித்திரங்கள். எல்லாமே மனிதர்கள் வாழாத இடமான, மிகப்பெரிய நிலப்பரப்பில் வரையப்பட்ட சித்திரங்கள். 500 சதுர கி.மீ. பரப்பளவில் (நன்றாகக் கவனியுங்கள் சதுர மீட்டர்கள் அல்ல, சதுர கிலோ மீட்டர்) இந்தச் சித்திரங்களும் கோடுகளும் அமைந்திருக்கின்றன என்றால் நீங்களே கற்பனை பண்ணிப் பாருங்கள்.
இந்தப் படத்தில் பார்க்கும் கோடுகள் எல்லாமே விமானத்தில் இருந்து எடுத்தாலும் தெளிவாகத் தெரியும் அளவிற்கு கீறப்பட்டிருக்கின்றன. அத்துடன் கீறப்பட்ட நேர்க்கோடுகள், நினைத்தே பார்க்க முடியாத அளவிற்கு நேராக, நேர்த்தியாக வரையப்பட்டிருக்கின்றன. நேராக கோடு வரைவது என்பது ஆச்சரியமே கிடையாது. அவற்றின் பிரமாண்டமே எம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. இங்கு கோடுகள் மட்டும் கீறப்பட்டிருக்கவில்லை. பலவிதமான வடிவங்களும், சித்திரங்களும் வரையப்பட்டிருக்கின்றன.
இந்தச் சித்திரங்களை மூன்று விதமான வகைகளில் நாம் பிரிக்கலாம். 1.நேர் கோடுகள், 2.கேத்திர கணித (Goematery) முறையிலான வடிவங்கள், 3.மிருகங்கள், பறவைகள் போன்ற உருவங்கள்.
இதில் 800 க்கும் அதிகமான கோடுகள், கேத்திர கணித வரைவுகளும், நூற்றுக்கும் மேற்பட்ட மிருகங்கள், பறவைகளின் உருவங்களும் அடங்கும். இவற்றில் ஐம்பதுக்கும் மேலாக உள்ள உருவங்கள் மிக மிகப் பிரமாண்டமானவை. மிகப் பெரிய உருவங்கள் 285 மீற்றர் நீளத்துக்கும் வரையப் பட்டிருக்கிறது. அதாவது கால் கிலோமீற்றர் நீளம். அத்துடன், நேர்கோடுகள் பல கி.மீ. நீளத்துக்கு வரையப்பட்டுள்ளன என்பதைப் பார்த்தால் ஆச்சரியத்தில் திகைத்து விடுவீர்கள். இவற்றையெல்லாம் எழுத்துக்களால் எழுதி விவரிப்பதை விடப் படங்கள் மூலமாக விவரிப்பதே இலகுவாக இருக்கும்.



எல்லாமே ஆச்சரியங்கள்! “எப்படி இதை வரைந்தார்கள்?” என்னும் கேள்வி எமக்கு எழுந்தாலும், “ஏன் இதை வரைந்தார்கள்?” என்னும் கேள்விதான் இங்கு எல்லோருமே வியக்கும் விசயமாகிறது. நிலத்தில் இருந்து பார்க்கும் போது, இந்தச் சித்திரங்களின் முழுமை எவருக்குமே தெரியாது. இவற்றைப் பார்க்க வேண்டும் என்றால் வானத்தில் உயரப் பறந்தால் மட்டுமே முடியும். அப்படி என்றால் இதை வரைந்த நாஸ்காவினர், யார் பார்க்க வேண்டும் என்று இப்படி வரைந்தார்கள்? 2500 ஆண்டுகளுக்கு முன்னர் இவை வரையப் பட்டிருகின்றன என்பது இன்னும் யோசிக்க வைக்கிறது.
இந்த நாஸ்கா உருவங்களில் குரங்கு, நாய், சிலந்தி, பல்லி, திமிங்கலம், மீன், ஹம்மிங் பறவை என்று தெரிந்த பல உருவங்கள் இருந்தாலும், தெரியாத உருவங்களும் பல இருக்கின்றன. இவற்றை வரைந்ததற்கு நிச்சயம் ஒரு அர்த்தம் இருந்தே தீரவேண்டும். அவை என்ன?

 இந்த ஹம்மிங் பறவை (Humming bird) இரண்டு புட்பால் மைதானங்களின் அளவுடையது. அதாவது 285 மீற்றர்கள்.













கணினியில் அச்சுப் பதித்துத் தரும் ‘ப்ளொட்டர்’ (Plotter) என்னும் இயந்திரம் போல, தொடங்கிய புள்ளியும், முடிந்த புள்ளியும் எதுவெனத் தெரியாமல், ஒரே தொடர்ச்சியாய் அந்தச் சித்திரங்கள் ஒரே கோட்டில் கீறப்பட்டுள்ளன. ஆச்சரியகரமாக அந்தப் படங்களின் ஏதோ ஒரு இடம் நீட்டப்பட்டு முடிவடைந்திருக்கும். குறிப்பாக, அந்தக் குரங்கின் வாலைக் கவனித்தீர்களானால், அதனுடன் இன்னுமொரு தொடர்ச்சி இருக்கும். அவையெல்லாம் என்ன காரணங்களினால் அப்படி வரையப்பட்டிருக்கின்றன என்றே புரியவில்லை. தற்கால ஆராய்ச்சியாளர்கள் சிலர், அவை போன்ற சித்திரங்கள் சிலதைப் பிரதி செய்து வரைந்து காட்டினாலும், அந்தக் காலத்தில் அது எப்படிச் சாத்தியமாக இருந்தது என்னும் கேள்விதான் இங்கு பிரமிக்க வைக்கிறது.
இவற்றுடன் இந்த வரைவுகள் முடிந்திருந்தால் பெரிதாக அலட்டியிருக்கத் தேவையில்லை. ஆனால் அவற்றில் இருந்த இரண்டு விசயங்கள் நிறைய யோசிக்க வைத்தன. பலரின் கவனத்தைக் கவர்ந்து இழுத்ததும் அந்த இரண்டு சித்திரங்களும்தான். பல மீற்றர்கள் நீளமான விமானம் இறங்கும் ‘ஓடு பாதை’ போல அமைந்த ஒரு அமைப்பு அங்கே காணப்பட்டது. இந்த அமைப்பு எதற்காக ஏற்பட்டது அல்லது இது விண்வெளியில் இருந்து வந்து இறங்கும் விமானத்தின் ஓடு பாதையேதானா?


இரண்டாவது, மலை ஒன்றில் வான் நோக்கிப் பார்த்துக் கொண்டு, ஒரு கையால் வானைச் சுட்டிக் காட்டியபடி இருக்கும் ஒரு மிகப் பெரிய மனிதனின் சித்திரம். யாரையோ வரவேற்பது போலவோ அல்லது யாரையோ எதிர்பார்த்துக் காத்திருப்பது போலவோ. அந்தச் சித்திரம் கீறப்பட்டிருக்கிறது அல்லது அவர்கள் மேலே இருக்கிறார்கள் என்று காட்டுவதாகவும் இருக்கலாம். இந்தச் சித்திரத்துக்கு ‘த அஸ்ட்ரோநாட்’ (The Astronaut) என்று பெயர் கூட வைத்திருக்கிறார்கள்.

இந்த மனிதன் யாரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறான் அல்லது இந்த மனிதனே ஒரு ஏலியன்தானோ?






நாஸ்காவின் சித்திரங்களில் சில இந்த அமைப்பில்தான் வரையப்பட்டிருக்கின்றன.

இந்தச் சித்திரங்களில் சில வினோதங்களும் உண்டு. குரங்கு போன்ற சித்திரத்திலும், வேறு சில சித்திரங்களிலும், ஒரு கையில் நான்கு விரல்களும், அடுத்த கையில் ஐந்து விரல்களும் காணப்படுகின்றன.
ஏன் இப்படி வரைந்திருக்கிறார்கள்? இவ்வளவு நேர்த்தியாக வரைந்தவர்கள் அப்படி ஒரு பிழையை விடுவார்களா? இவற்றிற்கெல்லாம் காரணங்களே தெரியவில்லை அல்லது இவையெல்லாம் நமக்கு ஏதாவது செய்திகளைச் சொல்கின்றனவா?
இந்தச் சித்திரங்கள் பற்றி ஆராய்ச்சியாளர்கள் சொல்வது இதுதான்! இந்தச் சித்திரங்கள் மூலமாக, நாஸ்கா மக்கள் வானத்தில் பறந்து வந்த யாருக்கோ எதையோ அறிவித்திருக்கிறார்கள் அல்லது நாஸ்கா மக்களுக்கு, விண்ணில் இருந்து வந்தவர்கள் யாரோ இப்படி வரையும் தகவல்களைச் சொல்லிச் சென்றுள்ளார்கள் என்பதுதான் அது. நாஸ்கா அமைந்திருக்கும் ‘பெரு’ (Peru) நாடும் மாயா இனத்தவர்கள் வாழ்ந்த பிரதேசங்களுக்கு அண்மையிலேயே இருக்கின்றது என்பது மேலும் ஒரு விசேசமாகின்றது.
உலகில் அவிழ்க்கப்படாத மூன்று மிஸ்டரிகள் (Mystery) இருந்தாலும், அறிவியல் வியக்கும் முன்று முக்கிய மிஸ்டரிகள் உண்டு. அவை 1. கிறிஸ்டல் மண்டையோடுகள் (Crystal sculls), 2. நாஸ்கா கோடுகள் (Nazca lines), 3. சோளச் சித்திரங்கள் (Crop circles) என்பன. இந்த மூன்றும் வேற்றுக் கிரக மனிதர்கள் சம்பந்தமானவை என்று கருதப்படுகின்றன. இவற்றில் கிறிஸ்டல் மண்டையோடுகள், நாஸ்கா கோடுகள் ஆகிய இரண்டையும் முழுமையாகப் பார்க்காவிட்டாலும், ஓரளவுக்குப் பார்த்திருக்கிறோம். பார்க்காமல் இருப்பது சோளச் சித்திரங்கள்தான். ஆனால் அதை நாம் பார்ப்பதற்கு முன், மாயா இனத்தவர் பற்றி முழுமையாகப் பார்த்துவிட்டு வரலாம்.



இதுவரை உலகில் வாழ்ந்த இனங்களில் அதியுயர் அறிவுடன் வாழ்ந்ததாக கருதப்படும் ஒரே இனம் மாயா இனம்தான். அந்த மாயா இனம் பற்றியும், அவர்கள் ’2012 இல் உலகம் அழியும்’ என்று கூறியது பற்றியும் பேச ஆரம்பித்த இந்தத் தொடர், அது தாண்டி வேறு சில இடங்களிலும், விடை தெரியாத சில மர்மங்களிலும் பயணித்தது. இதுவரை எம்மால் பார்க்கப்பட்டவை கூட சிறிய அளவுதான். பார்க்க வேண்டியவை இன்னும் நிறையவே உண்டு. ஆனாலும் நாம் அவற்றையும் ஆராய ஆரம்பித்தால் அது நீண்டு கொண்டே போகும். 2012 மார்கழி வரை கூட நீண்டாலும் ஆச்சரியம் இல்லை. அப்புறம் இந்தத் தொடர் எழுத வேண்டிய அவசியமே இல்லாமல் போய்விடும்.
2012ம் வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி உலகம் அழியும்” என்று மிகப்பெரிய எழுத்தில் எல்லா நாட்டு மக்களும் அலறும்படிக்கு, ஒரு குறித்த நாளுக்கு முக்கியத்துவத்தைக் கொடுத்திருக்கிறார்கள் மாயா இன மக்கள். இந்தியாவில் இது பற்றி அதிக அளவில் பேசப்படாவிட்டாலும், மேற்குலகம் தினம் தினம் இதைப் பேசிக் கொண்டே இருக்கிறது. ஐரோப்பிய, அமெரிக்க தொலைக்காட்சிகளில் ஏதோ ஒன்று, ஒவ்வொரு கணமும் இதை ஒளிபரப்பிக் கொண்டே இருக்கிறது. இதற்கெல்லாம் ஒரே காரணம், நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த காட்டுவாசி மக்களான மாயா இனத்தவர்கள் கணித்த ஒரு ‘நாட்காட்டி’ (Calendar). ஒரு குறித்த நாளில் ஆரம்பித்த அந்த நாட்காட்டி, 2012ம் ஆண்டு மார்கழி 21ம் திகதியுடன் முடிவடைகிறது. முடிவடைகிறதென்றால், அப்படியே முடிந்து போகிறது. அதற்கு அப்புறம் அதில் எதுவுமே இல்லை.
சரி, அவர்கள் நாட்காட்டி முடிந்தால் நமக்கென்ன? அறிவே இல்லாத காட்டுவாசிகள் உருவாக்கிய ஒரு நாட்காட்டி முடிவடைகிறது. அவ்வளவுதானே! அதற்கேன் நாம் இப்படிப் போட்டு அலட்டிக் கொள்ள வேண்டும்? உலகம் அழியும் என்று பல காலகட்டங்களில், வெவ்வேறு விதமாகப் பலர் சொல்லியிருந்தார்களே! அவற்றை எல்லாம் நாம் பெரிதாக எடுக்கவில்லையே! அப்புறம் ஏன் மாயன் சொன்னதில் மட்டும் நாம் மிகுந்த நம்பிக்கையை வைக்க வேண்டும்? இந்து மதம் கலிகாலத்துடன் உலகம் அழியும் என்கிறது. கிருஸ்தவ மதமும் உலக அழிவை வலியுறுத்துகிறது. அதிகம் ஏன்? கடந்த 2000ம் ஆண்டு கூட, உலகம் அழியும் என்று ஒரு மிகப் பெரிய நம்பிக்கையும் இருந்தது. ஆனால் எதைப் பற்றியும் நாம் அலட்டிக் கொள்ளவில்லையே! இவற்றிற்கெல்லாம் அதிக அங்கீகாரம் கொடுக்காத நாம், மாயாக்களுக்கு மட்டும் ஏன் கொடுக்க வேண்டும்? இப்படிப்பட்ட கேள்விகள் எமக்கு சுலபமாக எழுந்துவிடுகிறதைத் தடுக்க முடியாதல்லவா?
ஆனால்…………!
மாயன் சொன்னவற்றை தவறு என்று வெகு சுலபமாக தட்டிக் கழித்துச் செல்ல அறிவியலாளர்களுக்கே கொஞ்சம் தயக்கம் இருக்கிறது. இதைத் தீவிரமாகவே அவர்கள் பார்க்கின்றனர்? மாயன் சொன்னவை உண்மையாகலாமோ என்னும் பயம் அவர்களுக்கும் உண்டு. மாயன்களின் சுவடுகளும், அவர்கள் விட்டுச் சென்ற சுவடிகளும்தான் இந்தப் பயத்தை அவர்களுக்கு ஏற்படுத்தக் காரணமாக அமைந்துவிட்டன. மாயன்கள் சொன்னவற்றை அறிவியலுடன் பொருத்திப் பார்க்கும் போது, ஏற்பட்ட வியப்புத்தான் இந்தப் பயத்தை இன்னும் அதிகமாக்கியது. இதுவரை உலகில் இருந்த, இருக்கின்ற எந்த இனத்துக்குமே இல்லாத விசேசங்கள் பல, மாயன்களுக்கு இருந்திருக்கிறது. அந்த ஆச்சரியப்படும் விசேசத் தன்மைதான் மாயன்களிடம் இப்படி ஒரு நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
மாயன்கள் கணிதம், வானியல், கட்டடக் கலை, நகர அமைப்பு, அறிவியல், உணவு வேளாண்மை, கலை, கலாச்சாரம், விளையாட்டு என அனைத்திலும் உச்சத்தில் இருந்திருக்கிறார்கள். இவையெல்லாம் எப்போ? ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன். அதுதான் எம்மை வியக்க வைக்கிறது. இவற்றை எல்லாம் வாய் வார்த்தைகளால் சொன்னால் அதைச் சரியாகப் புரிவது கொஞ்சம் கஷ்டம்தான். அதனால் மாயா இனத்தவர்கள் பற்றிக் கொஞ்சம் விளக்கமாகவே பார்க்கலாமா…..!
இன்று நாம் பயன்படுத்தும் கணிதம், ‘தசம கணிதம்’ (Decimal System) என்னும் அடிப்படையைக் கொண்டது. அதாவது 10ஐ அடியாகக் கொண்டு உருவாக்கிய கணிதம். 1, 10, 100, 1000, 10000…… இப்படி. அத்துடன் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 எனப் பத்து இலக்கங்களையும் எமது கணக்கியலில் நாம் பயன்படுத்துகிறோம். இப்படி 10ஐ அடியாக (base10 or radix10 ) மனிதன் கணிக்க ஆரம்பித்ததற்கு ஒரே காரணம் அவனுக்கு கைகளில் 10 விரல்கள் இருந்ததுதான். ஆரம்ப காலங்களில் கை விரல்களால் கணக்கிட்ட வழக்கம் தொடர, அதுவே கணிதமுமாகியது.
இப்பொழுது இப்படிப் பாருங்கள்…….! மனிதனுக்கு ஒரு கையில் மூன்றே மூன்று விரல்கள்தான் இருக்கிறது என வைத்துக் கொண்டால், இரண்டு கைகளிலும் மொத்தமாக அவனுக்கு 6 விரல்கள் இருந்திருக்கும். அப்போது, மனிதனின் கணிதவியல் 6ஐ அடியாகக் கொண்டு இருந்திருக்கும். அதாவது 1, 6, 36, 216, 1296……. என இருந்திருக்கும். என்ன புரிகிறதா…? ஆனால் 6ஐ அடியாகக் கொண்டு கணிப்பதை விட, 10ஐ அடியாக கொண்டு கணிப்பது, மிகப்பெரிய எண்ணை அமைப்பதற்கு சுலபமாக இருக்கும். காரணம் 10 என்பது 6ஐ விடப் பெரியது. ‘அடி எண்’ (base or radix) பெரிதாக இருந்தால், அதிக எண்ணிக்கையில் கணிப்பது இலகுவாக இருக்கும்.
ஆனால் கணினியை (Computer) எடுத்துக் கொள்ளுங்கள். கணினிக்கு பத்து விரல்கள் கிடையாது. அதற்கு இருப்பது இரண்டே இரண்டு விரல்கள்தான். ஆம்! கணினிக்கு 1, 0 என இரண்டே இரண்டு விரல்கள்தான் உள்ளது. மின்சாரம் சென்றால் 1, மின்சாரம் செல்லாவிட்டால் 0. ஆகையால், கணினி, 2ஐ அடியாகக் கொண்டே கணிக்கிறது. அப்படிக் கணிப்பதை பைனரி சிஸ்டம் (Binary System) என்பார்கள். அது 1, 2, 4, 8, 16….. என அமையும். கணிதத்தில் ‘அடி எண்’ அதிகமாக இருந்தால் கணிப்பது சுலபம் என்றேன் அல்லவா? ஆனால் மனிதனை விடக் கணினி மிக மிக வேகமாகக் கணிக்கிறதே! அப்படிக் கணிப்பதற்குக் காரணம் மனிதன் கணிப்பது போல பத்து இலக்கங்கள் இல்லாமல், கணினிக்கு இரண்டே இரண்டு இலக்கங்களை மட்டும் பயன்படுத்தப்படுவதுதான். அந்த இரண்டு இலக்கங்களும் 1, 0 ஆகும்.
சரியாகக் கவனியுங்கள், சுலபமாய் எண்களை அமைப்பது என்பது வேறு, வேகமாய்க் கணிப்பது என்பது வேறு. இரண்டும் வேறுவேறான விசயங்கள் என்பதைத் தவற விட்டுவிடாதீர்கள்.
இப்போது மாயன்களிடம் நாம் வரலாம்……..!
அதிசயிக்கத்தக்க வகையில் மாயன்கள் 20ஐ அடியாகக் கொண்டு கணித்திருக்கிறார்கள். கைவிரல்கள் பத்து, கால் விரல்கள் பத்து என இது அமைந்திருக்கிறது. 20ஐ அடியாகக் கொள்வதை, ‘வைஜெசிமல் சிஸ்டம்’ (Vigesimal System) என்பார்கள். அது 1, 20, 400, 8000, 160000….. என அமையும். இதில் ஆச்சரியமான விசயம் என்னவென்றால், 20ஐ அடியாகக் கொண்டு கணிப்பதற்கு மாயன்கள் இருபது இலக்கங்களைப் பாவனைக்கு வைத்திருக்கவில்லை. மூன்றே மூன்று இலக்கங்களைத்தான் பாவித்திருக்கிறார்கள். அதிக எண்ணிக்கையில் சுலபமாகக் கணிப்பதற்கு 20 இன் அடியும், கணினியைப் போல வேகமாய்க் கணிப்பதற்கு மூன்று இலக்கங்களும் அவர்களுக்கு உதவியிருக்கிறது.
புள்ளி, நேர்கோடு, நீள்வட்டம் என்னும் மூன்றும்தான் அவர்கள் பாவித்த அந்த மூன்று இலக்கங்கள். இவற்றில் புள்ளி 1ஐயும், நேர்கோடு 5ஐயும், நீள்வட்டம் பூச்சியத்தையும் குறிக்கிறது.
மாயன்கள் பாவித்த எண்களின் அட்டவணையைப் பார்த்தால் உங்களுக்கு அது புரியும்.





புள்ளிகளையும், கோடுகளையும் வைத்து, லட்சங்களில் எப்படி மிகப் பெரிய எண்களைக் கணித்தார்கள் என்பதற்கான சில விளக்கப் படங்களையும் உங்களுக்கான புரிதலுக்காகத் தருகிறேன்.





இதனுடன் இன்னுமொரு விசேசமாக, எண்ணிக்கைகளை இலக்கங்களால் மட்டுமில்லாமல், ‘ஹிரொகிளிஃப்’ (Hieroglyph) என்னும் சித்திர எழுத்துகள் மூலமும் எழுதியிருந்தார்கள். இந்த வழமை மாயாக்களுக்கும், எகிப்தியர்களுக்கும் தனிச் சிறப்பாக அமைந்திருந்தது. இந்தச் சித்திர எழுத்துகள்தான் பின்னர் மாயன்களைப் பற்றி நாம் முழுமையாகப் புரிந்து கொள்ள பெரிதாக உதவியது.



இந்த இலக்கங்களின் முறையை வைத்து மாயன்கள் கோடிக்கனக்கான எண்ணிக்கையை கூட எழுதிவிடுகிறார்கள். சுலபமாக கணித்துவிடுகிறார்கள். நாம் கோடிகள், ஆயிரம் கோடிகள் என்பவற்றை ஊழல் பற்றிச் சொல்வதற்கு பயன்படுத்தும் போது, மாயன்கள் எதற்கு அவற்றைப் பயன்படுத்தினார்கள் தெரியுமா….? வானியலில். வானத்தில் சூரியக் குடும்பத்தின் ஒவ்வொரு கோளும் எப்படி நகர்கிறது என்பதைத் துல்லியமாக கணித்தார்கள் மாயன்கள். அவர்கள் அப்படிக் கணித்ததுதான் கடைசியில் எங்கள் அமைதியையே குலைக்கும், ’2012 இல் உலகம் அழியும்’ என்பதில் கொண்டு வந்து விட்டும் இருக்கிறது.
மாயன்கள் வானவியலில் ஆராய்ச்சி செய்தார்கள் என்று சொல்லும் நாம் அவர்கள் எதை ஆராய்ந்தார்கள் என்று தெரிந்தால் நம்பவே முடியாமல் நகர்ந்துவிடுவோம். ஆம்! சூரியனையும், அதன் கோள்களையும் மற்ற இனத்தவர்கள் ஆராய்ந்த போது, மாயன்கள் பால்வெளி மண்டலத்தையே (Milky way) ஆராய்ந்திருக்கிறார்கள். வெறும் கண்களால் சந்திரனைத் தாண்டி அவ்வப்போது செவ்வாய், வியாழன் ஆகியவற்றை மட்டுமே பார்க்கக் கூடிய எமக்கு, மாயாக்கள் பால்வெளி மண்டலத்தையே ஆராய்ந்தார்கள் என்றால், அதன் சாத்தியங்கள் எது என்பது பற்றி கேள்வி எழுவது நியாயமான ஒன்றுதான்.
மாயாக்கள் அப்படி என்னதான் ஆராய்ந்தார்கள்? எப்படியெல்லாம் ஆராய்ந்தார்கள்.



Comments

Popular posts from this blog

அலெக்ஸாண்ட்ரியா நூலகம் (Library of Alexandria)

ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!!

முருங்கை கீரை