விவேகானந்தர் இல்லம்
விவேகானந்தர் இல்லம் ;
தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் திருவல்லிக்கேணியில் உள்ளது. இதன் பழைய பெயர் "ஐஸ் ஹவுஸ்" (Ice House) என்றாலும், தற்போதும் இப்பெயர் பொது வழக்கில் உள்ளது. இந்த இல்லத்தில் சுவாமி விவேகானந்தர் 1897 ஆம் ஆண்டு ஒன்பது நாட்கள் தங்கியிருந்தார். இப்போது இது தமிழ்நாட்டின் மிகவும் முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்குகின்றது.1897-ஆம் ஆண்டு முதல் 1906 வரையில் சுமார் 10 ஆண்டுகள், இந்தக் கட்ட
ிடத்தில்தான் ஸ்ரீஇராமகிருஷ்ண மடம் இயங்கி வந்தது. இக்காலகட்டத்தில் ஸ்ரீஇராமகிருஷ்ணரின் சீடர்களான சுவாமி நிரஞ்சனானந்தர், சுவாமி திரிகுணாதீதானந்தர், சுவாமி அபேதானந்தர் ஆகியவர்கள் வந்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர ஸ்ரீஇராமகிருஷ்ண மடத்தின் மூத்தத் துறவிகளான மகான்கள் பலர் இங்கு வந்திருக்கிறார்கள். சகோதரி நிவேதிதாவும் இங்கு வந்திருக்கிறார்.
1902இல் விவேகானந்தர் மகாசமாதி அடைந்த பின்னர், 1903இல் அவருக்கு முதன் முதலில் இக்கட்டிடத்தில் பிறந்தநாள் ஜயந்தி கொண்டாடப் பட்டது. 1906இல், இக்கட்டிடம் ஏலத்திற்கு வர, அதனை ஜமீன்தார் ஒருவர் வாங்கி விடுகிறார். சுவாமி ராமகிருஷ்ணானந்தர் சிலகாலம் இக்கட்டிடத்தின் அவுட்ஹவுசில் தங்கி இருந்தார். பின்னர் இராமகிருஷ்ண மடம் மயிலையில் தற்போதுள்ள தலமை இடத்திற்கு மாற்றப்பட்டது.
பிற்காலத்தில் சாரதா வித்யாலயாவின் முன்னோடியாம் சகோதரி சுப்புலக்ஷ்மி இக்கட்டிடத்தில் விதவைப் பெண்களுக்கான விடுதி ஒன்றை துவக்கினார். 1917இல், இக்கட்டிடம் அரசால் வாங்கப்பட்டது என்றாலும், 1922 வரை இக்கட்டிடம் பெண்களுக்கான இல்லமாக செயல்பட்டு வந்தது.
1922 முதல் 1941 வரை ஆசிரியர்கள் விடுதியாகவும், 1941 முதல் 1993 வரை ஆசிரியர் பயிற்சி பெறும் மாணவர்கள் தங்கும் விடுதியாகவும் செயல்பட்டு வந்தது
.
1963இல், விவேகானந்தரின் பிறந்தநாள் நூற்றாண்டு விமர்சையாக சென்னையில் கொண்டாடப்பட்டது. அப்போது நடந்த விழாவில், அப்போதைய தமிழக நிதி அமைச்சரான பக்தவச்சலம் அவர்கள், இவ்வில்லத்திற்கு 'விவேகனந்தர் இல்லம்' எனப் பெயர் சூட்ட அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.
1964 ஜூலை 12இல், இக்கட்டிடத்தின் முன் பகுதியில், பத்து அடி உயர விவேகானந்தரின் வெண்கல உருவச்சிலை, அப்போதைய குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது

Comments
Post a Comment